districts

img

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்திடுக

திருப்பூர், டிச.19- அத்தியாவசியப் பொருட்களின் வர லாறு காணாத விலை உயர்வைக் கட்டுப் படுத்தி திருப்பூர் மாவட்ட தொழில், விவ சாயம், மக்கள் வாழ்வாதாரத்தைப் பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட 23 ஆவது மாநாடு வலியுறுத்தி உள் ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப் பூர் மாவட்ட 23 வது மாநாடு மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் எதிரில் உள்ள தோழர் கே. தங்கவேல் நினைவரங்கில் (ராமசாமி முத் தம்மாள் திருமண மண்டபம்) ஞாயிறன்று எழுச்சியுடன் தொடங்கியது. கட்சியின் செங் கொடியை மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ் ஏற்றி வைத்தார். தியாகிகள் நினை வஞ்சலி நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடை பெற்ற பொது மாநாட்டிற்கு மாவட்ட செயற் குழு உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணன்  தலைமை வகித்தார். மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் எம்.ராஜகோபால் வரவேற் றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. உண்ணிகிருஷ்ணன் அஞ்சலித் தீர்மா னத்தை முன்மொழிந்தார். இதைத்தொடர்ந்து மாநாட்டைத் தொடக்கி வைத்து கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கரா ஜன் உரையாற்றினார். 

தீர்மானங்கள்

இம்மாநாட்டில், திருப்பூர் மாவட்ட சமூக, பொருளாதார நிலையை உயர்த் திட வலியுறுத்தும் தீர்மானத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சாவித்திரி முன் மொழிந்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஜி. சம்பத் வழிமொழிந்தார். இதில், கடந்த  நான்கு ஆண்டுகளாக ஒன்றிய பாஜக அர சின் கொள்கைகளால் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி, இரண்டாண்டு கால கொரோனா பாதிப்பு ஆகியவற்றாலும், வரலாறு காணாத நூல் விலை உயர்வினாலும் மாவட்டத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல் விவசாயத் துறையிலும் இடு பொருட்கள் விலையேற்றம், உற்பத்திச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்க ளால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கார்ப்பரேட் நலனை மட்டுமே குறிக்கோளா கக் கொண்ட ஒன்றிய அரசின் மோசமான கொள்கை காரணமாக அனைத்து அத்தியா வசியப் பொருட்களின் விலைகளும் கடுமை யாக உயர்ந்துள்ளன.

எரிபொருள், சாலைக் கட்டணங்கள் உயர்வு உள்ளிட்டவற்றால் கல்வி, மருத்துவம், அலைபேசி கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளன. இத்துடன் நகர்ப்புறங்களில் வீட்டு வாடகை முதல் வீடு கட்டுவதற்கான உரிமக் கட்டணம் வரை பல மடங்கு கடுமையாக உயர்ந்து உள்ளது. திருப்பூர் மாவட்ட கிராமப்புறங்களிலும் வீட்டுமனைப் பட்டா, நல்லாறு அணை நீர்ப்பாசனத் திட்டம் அமலாக்கிட வேண் டும். அனைத்து வட்டார மருத்துவமனை களையும் 24 மணி நேரம் செயல்படும் மருத் துவமனையாக அனைத்து அடிப்படை வசதி களுடன் தரம் உயர்த்த வேண்டும். இதன் படி திருப்பூர் மாவட்ட சமூக, பொருளாதார, மக்கள் வாழ்வாதாரங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறை வேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து நடைபெற்ற பிரதி நிதிகள் மாநாட்டுக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் எ.ஷகிலா, இடு வாய் ஊராட்சிமன்றத் தலைவர் கே.கணே சன், மடத்துக்குளம் தாலுகா செயலாளர் ஆர்.வி.வடிவேலு ஆகியோர் தலைமைக் குழுவாகத் தேர்வு செய்யப்பட்டனர். வேலை  அறிக்கையை முன்வைத்து மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன் உரையாற்றி னார். இதன்பின் பிரதிநிதிகள் மாநாட்டு விவாதம் தொடங்கியது. இம்மாநாட்டில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் இருந்து 250க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

ஜோதிப்பயணம்

முன்னதாக, தென்னம்பாளையம் சந் தைப்பேட்டை முன்பிருந்து செந்தொண்டர் ஊர்வலம் தொடங்கியது. மாநாட்டு அரங்க நுழைவாயில் அருகே நடைபெற்ற நிகழ்ச்சி யில், ஆஷர்மில் பழனிசாமி நகரில் இருந்து கொண்டு வரப்பட்ட கட்சியின் மாநாட்டு கொடி மரத்தை மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன், தாராபுரத்தில் இருந்து  கொண்டு வரப்பட்ட தோழர் கே.தங்கவேல்  நினைவு மாநாட்டு செங்கொடியை மாவட் டக்குழு உறுப்பினர் கே.பழனிசாமி ஆகி யோர் பெற்றுக் கொண்டனர். திருப்பூர் மாவட்டத் தியாகிகள் ஆஷர்மில் பழனிசாமி நினைவு ஜோதியை வேலம்பாளையம் முன்னாள் நகரச் செயலாளர் வி.பி.சுப்பிர மணியமும், சீராணம்பாளையம் பழனிசாமி நினைவு ஜோதியை மாவட்டக்குழு உறுப் பினர் பி.முத்துசாமி, கேத்தம்பாளையம் பன்னீர்செல்வம் நினைவு ஜோதியை மாவட் டக்குழு உறுப்பினர் இ.அங்குலட்சுமி, இடு வாய் கே.ரத்தினசாமி நினைவு ஜோதியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணன், பல்லடம் ப.கு.சத்திய மூர்த்தி நினைவு கொடிக் கயிற்றை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மதுசூத னன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

 

;