களைகட்டும் பொங்கல் விழா
நாமக்கல், ஜன.12- திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவன வளாகத்தில் கலை அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 7 ஆயிரத்திற் கும் மேற்பட்ட மாணவிகள் இணைந்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர். சக தோழிகளுடன் ஆடிப்பாடி, தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். இந்நிகழ்ச்சி யில் கல்லூரியின் முதன்மை அதிகாரி சொக்கலிங்கம், கல் லூரி முதல்வர் பேபி ஷகீலா, பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
போதிய மருத்துவர்கள் இல்லாததால் மக்கள் அவதி
தருமபுரி, ஜன.12- ஏரியூர் அரசு மருத்துவமனையில் போதிய அளவில் மருத்துவர்களை நிய மிக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றி யத்திற்குட்பட்ட நாகமரை,அஜ்ஜன அள்ளி, சுஞ்சல்நத்தம், பெரும்பாலை உள்ளிட்ட 10 ஊராட்சிகளுக்கு தலைமை மருத்துவமனையாக, ஏரியூர் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்களிலி ருந்து ஏராளமானோர் தினமும் புறநோ யாளியாகவும், உள்நோயாளிகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 24 மணி நேரமும் செயல்பட வேண்டிய அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணி யாளர்கள் குறைவாகவே உள்ளனர். இங்கு பல்வேறு துறை சார்ந்த மருத்து வர்கள், மருந்தாளுநரும் இல்லை. குறிப் பாக, இரவு நேரங்களில் மருத்துவர் இல்லாததால் தனியார் மருத்துவம னைக்கு செல்ல வேண்டிய நிலை உள் ளது. இதனால் ஏழை மக்களுக்கு பண விரயம் ஏற்பட்டு, கடன் வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, ஏரியூர் அரசு மருத்துவமனை 24 மணி நேரமும் செயல் படும் வகையில், அனைத்து துறை சார்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலி யர்களை நியமிக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மண்பானை அனுப்பும் பணிகள் தீவிரம்
சேலம், ஜன.12- வாழப்பாடி அருகே பெரிய கிருஷ்ணா புரம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட மண் பாண்டத் தொழிலாளர்கள் குடும்பத்தின ரோடு, மண்பானைகளை தயாரித்து பல் வேறு பகுதிகளுக்கு அனுப்பி வருகின்ற னர். சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட் டங்களில், புதுமணத் தம்பதிக்கு பொங்கல் சீதனமாக புத்தாடை, கரும்பு, நெல் தானியம், மஞ்சள், பித்தளை, செம்பு பாத்திரங்கள் மட்டு மின்றி, மண்பானைகளையும் சீர் வழங்குவது தொடர்ந்து வருகிறது. இதனால், ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை தருணத்தில் மண்பானைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே பெரியகிருஷ்ணாபுரம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட மண்பாண்டத் தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நிகழாண்டு, பொங்கல் பண் டிகை விற்பனைக்காக, இந்தக் கிராமத்தில் ஒரு மாதமாக தொடர்ந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண்பானைகளை தயாரித்து சூளையில் வைத்து பதப்படுத்தி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் பல்வேறு பகுதிக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இதுகுறித்து பெரியகிருஷ்ணாபுரம் மண்பாண்டத் தொழிலாளர்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மண்பாண்டங்கள் தயாரிக் கும் தொழிலை விடாமல் தொடர்ந்து வருகி றோம். பொங்கல் பண்டிகைக்கு குடும்பத் தினரோடு இணைந்து, ஏறக்குறைய 10 ஆயி ரம் மண்பானைகளை தயாரித்து பதப்ப டுத்தி பல்வேறு பகுதிக்கு அனுப்பி வைத் துள்ளோம், என்றனர்.
மேட்டூர் அணை நிலவரம்
சேலம், ஜன.12- சேலம் மாவட்டம், மேட் டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளியன்று காலை 71.13 அடியிலிருந்து 71.11 அடி யாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு விநா டிக்கு 648 கன அடியாக 2 ஆவது நாளாக நீடிக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 33.66 டிஎம்சியாக உள்ளது.
வேட்டி சீலைகளை வழங்க சிபிஎம் கோரிக்கை
உடுமலை, ஜன.12- பொங்கல் திருவிழாவிற்கு தமிழக அரசு வழங்கும் வேட்டி சீலைகளை உடுமலை நகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்க ளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உடுமலை நகரக்குழு சார்பில் மாவட்ட ஆட்சி யருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கட்சியின் நகரக் குழு செயலாளர் தண்ட பாணி கூறுகையில், தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண் டும் பொங்கல் திருவிழாவிற்கு அனைத்து மக்களுக்கும் வரு வாய்த்துறை சார்பில் வேட்டி மற்றும் சீலை வழங்குவது வழக் கம். ஆனால் கடந்த பத்தாம் தேதி முதல் பொங்கல் பரிசுகளை வழங்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை இப்பகுதியில் வேட்டி சீலை வழங்கப்படாமல் உள்ளது. பொங்கலுக்கு இன் னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், மக்களுக்கு தர வேண்டிய வேட்டி சீலைகளை கிராமங்களில் நியாய விலை கடைகளில் வழங்குவது போல், உடுமலை நகராட்சியில் வசிக் கும் மக்களுக்கும் தர வேண்டும். பொது விநியோக திட்டக் கடைகளில் வழங்கும் பொருட்களின் தரத்தை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இதில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
டிராக்டர் மோதி இளைஞர் உயிரிழப்பு
அவிநாசி, ஜன.12- அவிநாசியில் இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அவிநாசி - ஈரோடு சாலையில் பராமரிப்பு பணிகள் நடை பெற்று வருவதால், இரு வழிப்பாதை ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் அவிநாசி சின்னேரிபாளை யம் அபிராமி கார்டன் பகுதியைச் சேர்ந்த பாலு மகன் ராஜா (30). சின்னேரிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்துள் ளார். அப்போது எதிரே தேனி ஊத்தமங்கலம் காமயகவுண் டன்பட்டி நகராஜ் மகன் வெள்ளையத்தேவன்(20) என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ராஜா உயிரிழந்தார். இது குறித்து அவிநாசி போலீஸார் வழக்குப்ப திவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
பி.என்.சாலையில் அடிக்கடி நிகழும் விபத்துக்கள்: சாலையை சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்
திருப்பூர், ஜன.12- குண்டும் குழியுமாக உள்ள பி.என். சாலை யில் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடு மாறி கீழே விழுவதுடன், அடிக்கடி விபத்துக் கள் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் உட னடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பூரில் உள்ள முக்கிய சாலைகளில் பி.என்.சாலையும் ஒன்று. புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஈரோடு, சேலம், கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இந்த வழியாகத்தான் செல்கின் றன. போயம்பாளையம், பூலுவபட்டி, பாண் டியன் நகர், அண்ணா நகர் கணக்கம்பாளை யம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கோவை மற்றும் ஈரோட்டில் உள்ள கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பெருமா நல்லூர் சென்று தான் பேருந்து ஏற்கின்ற னர். இப்படி தினந்தோறும் ஆயிரக்கணக் கான மக்கள் பயன்படுத்தும் சாலை பள்ளங்க ளால் நிரம்பி இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின் றனர். மேலும், காலை மற்றும் மாலை நேரங் களில் 100க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங் களின் வாகனங்களும் இந்த சாலைகளில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படு வதுடன், அடிக்கடி விபத்துகள் நிகழ்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கை யில், பி.என்.சாலையில் பல்வேறு இடங்க ளில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. குறிப்பாக புதிய பேருந்து நிலையம் முதல் பாண்டியன்நகர் வரை பல்வேறு இடங்க ளில் மிகவும் மோசமாக உள்ளது. போயம்பா ளையம் முதல் பிச்சம்பாளையம் வரை சாலை முழுக்க குழிகள் நிறைந்துள்ளது. சில இடங்க ளில் பெரிய அளவில் பள்ளங்கள் உள்ளன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைத டுமாறி கீழே விழுவதுடன், அடிக்கடி விபத்து கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதி காரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். மாந கராட்சி அதிகாரிகளிடம் கேட்டால் பாதாளச் சாக்கடை பணிகள் நடைபெறுகிறது விரை வில் சாலை சீரமைக்கப்படும் என்று தெரி விக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு தான் பாண்டியன் நகர் வரை சாலை சீரமைப்பு பணி கள் நடைபெற்றது. ஆனால் தற்போது அந்த சாலையில் மீண்டும் குழிகள் ஏற்பட்டுள்ளது. சாலைகள் முறையாக சீரமைக்கப்பட்டதாக தெரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இச்சாலையை சீரமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
பருத்தி ஏலம்
திருப்பூர், ஜன.12- மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.39 லட்சத்துக்கு பருத்தி விற் பனை வியாழக்கிழமை நடை பெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு பல்வேறு மாவட் டங்களில் இருந்து 202 விவசா யிகள் தங்களுடைய 1,853 பருத்தி மூட்டைகளை விற் பனை செய்ய கொண்டு வந்தி ருந்தனர். இவற்றின் மொத்த எடை 645 குவிண்டால். 11 வணிகர்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனர். பருத்தி விலை குவிண்டால் ரூ.5,800 முதல் ரூ.7,369 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.6,500. ஏலத்துக் கான ஏற்பாடுகளை திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலைச் செயலாளர் (பொ) தர்ம ராஜ், விற்பனைக்கூட கண்கா ணிப்பாளா் சிவகுமார் ஆகி யோர் செய்திருந்தனர்.
மலைரயில் சேவை மீண்டும் துவக்கம்
மே.பாளையம், ஜன.12- மழை காரணமாக கடந்த இரு நாட்களாக தடைப்பட்டிருந்த மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலைரயில் போக்கு வரத்து வெள்ளியன்று மீண்டும் துவங்கி யது. நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் சேவை, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகைக்கு தின சரி இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவை, மழை காலங்களில் ஏற்படும் இடர் பாடுகள் காரணமாக சரிவர இயக்க முடி யாமல் அடிக்கடி தடைபட்டு நிற்கிறது. இத னால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடை வதும் தொடர் நிகழ்வாகி வருகிறது. மலைப்பாதையில் பெய்த தொடர் மழை காரணமாக கல்லார் ரயில் நிலையம் முதல் அடர்லி ரயில் நிலையம் வரை ஒரு சில இடங்களில் சிறிய அளவில் மண் சரி வுகள் ஏற்பட்டதால், கடந்த 2 நாட்களாக மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது. தற்போது மழையின் தீவிரம் குறைந்ததாலும், மண்சரிவுகளை சீரமைக் கும் பணி நிறைவடைந்ததாலும், மேட்டுப்பா ளையம் - உதகை இடையேயான மலை ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.