districts

img

பள்ளி கட்டிடத்தில் தனியார் சங்கமா? ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் சிபிஎம் மனு

திருப்பூர், செப். 24 - உடுமலைப்பேட்டை ஒன்றியம், மலை யாண்டிப்பட்டினம் பள்ளிக் கட்டிடத்தில் தனி யார் சங்கத்தை செயல்படுத்துவதை மாற்றி,  அங்கு நூலகம் அமைக்க வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள் ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் உடுமலைப் பேட்டை ஒன்றிய செயலாளர் கி.கனகராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.ஜெகதீசன் ஆகியோர் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன் றிய ஆணையர் மணிகண்டனிடம் கோரிக்கை  மனு அளித்தனர். அதில், மலையாண்டிபட்டினம் பழைய  பள்ளிக் கட்டிடத்தில்  ஆரம்பப் பள்ளியும், அங் கன்வாடியும் செயல்பட்டு வருகிறது. உயர் நிலைப் பள்ளி தனியாக புதிய பகுதியில் செயல்படுகிறது. இந்நிலையில் ஆரம்பப் பள் ளிக்கு சொந்தமான கட்டிடத்தில் தனியார் சங்க  அலுவலகம் செயல்பட்டு வருகிறது.  உடனடியாக அரசு சொத்தான பள்ளிக் கட்டி டத்தை வாடகைக்கு விட்டதை மீட்க வேண் டும். அந்த கட்டிடத்தில் நூலகம் அமைத்து  செயல்படுத்த வேண்டும். பள்ளி வளாகத்திற் குள், அங்கன்வாடி பகுதிக்குள் அந்நியர்கள் நடமாட்டத்தை தடுத்து, குழந்தைகள் பாது காப்பை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்  கொண்டனர். ஊராட்சி ஒன்றிய ஆணையர் மணிகண்டன் நடவடிக்கை எடுப்பதாகத் தெரி வித்தார்.

;