அவிநாசி, மே 31- குடிநீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை களை எழுப்பினால், பிரச்சனையை திசை திருப்புவதும், கோரிக்கை விடுக்கும் மக் களை ரவுடிகள் என பேசிய திருமுருகன் பூண்டி நகராட்சி தலைவரின் செயலுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றியக்குழு கடும் கண் டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றியக்குழு வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, திருமுருகன்பூண்டி நகராட்சியில் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்களின் குடி நீர் இணைப்புக் கோரிக்கை விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. கடந்த முறை பொறுப்பில் இருந்தவர்கள் முறைகேடாக குடிநீர் இணைப்புகள் வழங்கியதைக் கண் டித்து, அதன் மீது நடவடிக்கை எடுக்க மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராட் டங்களை நடத்தியது. இத்தகைய மக்கள் போராட்டங்கள், சட்டப் போராட்டங்களின் விளைவாக இரண்டு கோடி ரூபாய் வரை நகராட்சிக்கு வருவாய் கிடைத்துள்ளது என் பதை மக்கள் அறிவார்கள். இந்நிலையில், 24 ஆவது வார்டில் மாதக் கணக்கில் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படா மல் உள்ளது.
இதைக் கேட்டபோது, அதை திசை திருப்பும் நோக்கில், மன்றத்துக்கும் தெரிந்த 14 ஆவது வார்டு சாக்கடைப் பிரச் சனையை வேண்டுமென்றே பேசியுள்ளனர். இதனால், ஏற்பட்ட வாக்குவாதத்தில் மார்க் சிஸ்ட் உறுப்பினர் தேவராஜின் பேச்சைச் திரித்துக் கூறி பிரச்சனை செய்துள்ளனர். இத னைத்தொடர்ந்து, தான் பயன்படுத்திய வார்த்தை தவறாகப் புரிந்து கொள்ளப்படுமா னால், அதனைத் திரும்பப் பெற்றுக் கொள் கிறேன் என்று தேவராஜ் மன்றக் கூட்டத்தி லேயே தெரிவித்துள்ளார். ஆனால், நகர்மன்றக் கூட்டத்தில் தலை வர் குமார் பேசும்போது, “தண்ணீர் கேட்க வந்தவர்கள் ரவுடிகளைப் போல் நடந்து கொள்கிறார்கள். திருமுருகன்பூண்டி நக ராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் யாரும் தண்ணீர் கேட்க வரவில்லை” என்று சொந்த மக்களையே, வெளியூரில் இருந்து அழைத்து வந்துள்ளதைப் போன்று கொதித்துள் ளார். நகர்மன்ற தலைவர், மக்களின் பிரச் சனைகளை முன்வைத்து தொடர்ந்து போராடி வரும், மார்க்சிஸ்ட் கட்சி மட்டு மல்லாது, உரிமைகளுக்காகக் குரல் கொடுக் கும் அனைவரையும் ரவுடிகளாகச் சித்த ரித்துப் பேசியிருப்பது கடும் கண்டனத்திற் குரியது. திருமுருகன் பூண்டி நகராட்சி நிர்வாகம், குடிநீருக்காக விண்ணப்பித்துள்ள அனை வருக்கும் இணைப்பு வழங்கவும், அடிப்படை பிரச்சனைகளைத் தீர்க்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.