districts

img

தோழர் வி.பி.சாமிநாதன் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி

திருப்பூர், அக். 22 - திருப்பூர் வடக்கு ஒன்றியம் பெருமாநல்லூர் வட்டாரத்தில் செங்கொடி இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவ ராகத் திகழ்ந்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள்  மாவட்டக்குழு உறுப்பினரும், விவசாயிகள் சங்கத் தலைவ ருமான வி.பி.சாமிநாதன் மூன்றாம் ஆண்டு நினைவு தினம்  சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. திருப்பூர் வடக்கு ஒன்றியம் வலசுபாளையத்தில் நடை பெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு விவசாயிகள் சங்க வடக்கு  ஒன்றியத் தலைவர் கே.ரங்கசாமி தலைமை ஏற்றார். சிஐடியு  பஞ்சாலை சங்க மாவட்ட தலைவர் கே.பழனிச்சாமி கொடி யேற்றினார். திரளானோர் இங்கு பங்கேற்று வி.பி.சாமிநாதன்  படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து பெருமாநல்லூர் கிளை அலுவலகம் முன்பு  நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பெருமாநல்லூர் ஏ கிளை செய லாளர் க.சண்முகம் தலைமை ஏற்றார். இதில் வள்ளிபுரம்  ஊராட்சிமன்றத் தலைவர் என்.முருகேசன் கொடியேற்றி  வைத்தார். இதை தொடர்ந்து தோழர் வி.பி.சாமிநாதன் உரு வப்படத்துக்கு அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.  கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச்  செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப் பினர் ஆர். குமார் ஆகியோர் புகழஞ்சலி உரைநிகழ்த்தி னர்.  இதில் கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளி யப்பன், ஊத்துக்குளி ஒன்றியச் செயலாளர் எஸ்.கே.கொளந் தசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.கே. கருப்புசாமி, பி. மகாலிங்கம், என்.கோபால், விவசாயிகள் சங்கத் துணைத்  தலைவர் எஸ்.வெங்கடாசலம், எஸ்.அப்புசாமி, ஏ.ஆறுமு கம், விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கே.சுப்பிரம ணியம், பரணி சீனிவாசன், கிருஷ்ணசாமி, கிளைச் செயலாளர் கள் கோவிந்தசாமி, விஸ்வநாதன், பட்டுச்சாமி, தனபால் மற் றும் வி.பி. சாமிநாதன் குடும்பத்தினர் உள்பட நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டு  அஞ்சலி செலுத்தினர்.

;