districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மாநகராட்சியில் ஏரியா சபைகள் அடிப்படை பிரச்சனைகளை கண்டறிய குழு

கோவை, செப்.3- கோவை மாநகராட்சி பகுதிகளில் அடிப்படை பிரச்ச னைகளை கண்டறிவதற்கு ஏரியா சபைகள் ஏற்படுத்த முடிவு  செய்துள்ளது.  கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இந்த  வார்டு பகுதியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன.  மாநகராட்சி சார்பில் மாநகர் முழுவதும் புதிய சாலைகள் அமைத்தல், பழுதடைந்த சாலைகள் சீரமைத்தல், தெரு விளக்குகள் அமைத்தல், சிறு பாலங்கள் கட்டுதல், குடிநீர் தேவையை பூர்த்தி செய்தல், சமுதாயக் கூடங்கள், வகுப்ப றைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டுதல், பூங்காக்கள் ஏற்ப டுத்துதல், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட அடிப்படை  பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வார்டுகளில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை நிறை வேற்றுவதில் தொய்வு  உள்ளதாக புகார்கள் வருகின்றன.   இதில் பல புகார்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு முறை யாக தெரிய வருவதில்லை. இதுபோன்ற குற்றச்சாட்டு களை தவிர்க்கவும், வார்டுகளில் உள்ள அனைத்து அடிப் படை பிரச்சனைகளையும் மக்கள் மூலம் அறிந்து அவற்றை  உடனடியாக தீர்க்கவும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முடிவு  செய்யப்பட்டன. அதன் அடிப்படையில், கோவை மாநக ராட்சியின் உள்ள 100 வார்டுகளிலும் ஏரியா சபை (பகுதி சபை)  மற்றும் வார்டு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான  பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது, கோவை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டையும் 10 பகுதியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும்  ஏரியா சபை என்ற ழைக்கப்படும். அதன் தலைவராக மாமன்ற உறுப்பினர் செயல்படுவார். உறுப்பினர்களாக அந்த ஏரியாவுக்கு உட் பட்ட வாக்களிக்கும் தகுதியுடையவர்கள் இடம் பெற்றி ருப்பர். செயலாளராக அரசு அலுவலர் ஒருவர் நியமிக் கப்படுவார். ஒரு வார்டு குழுவுக்கு, அந்த வார்டுக்கு உட்பட்ட  ஏரியா சபையில் இருந்து தலா ஒருவர் உறுப்பினராக தேர்ந்தெடுத்து நியமிக்கப்படுவர். அதன்படி, வார்டு குழுவில் 10 பேர் இடம் பெறுவர். ஏரியா  சபை, வார்டு குழு குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒரு முறை கூட வேண்டும். அரசிதழில் ஏரியா சபை கூட்டத்தில்  தங்களது பகுதிகளில் நிலவும் பிரச்சனைகள், நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து விவாதித்து வார்டு குழுவின்  மூலம் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்படும்.  மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு 1000 ஏரியா சபை கள் ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த  பணி முடிக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட நாட்களுக்குள் அரசி தழில் வெளியிடப்படும் என தெரிவித்தனர்.

மனைவி மீது தாக்குதல் - கைது

கோவை, செப். 3- வங்கி ஊழியரான மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  கோவை மாவட்டம்,  பாப்பநாயக்கன்பாளையம் பகுதி யை சேர்ந்தவர் காசிநாதன் (33) ஆட்டோ ஓட்டுநர். இவரது  மனைவி அனிதா (30). இவர் தனியார் வங்கியில் ஊழிய ராக உள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி  தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. இதனால் அனிதா, கணவரை பிரிந்து 2 மகன்களுடன் தனது தாய் வீட்டில்  இருந்து வருகிறார். இந்நிலையில், மனைவியின் வீட்டுக்கு வந்த காசிநாதன், அனிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட் டுள்ளார். பின்னர், ஆத்திரமடைந்த காசிநாதன், அனிதாவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி, கொலை மிரட்டல்  விடுத்து அங்கிருந்து சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து அனிதா, பந்தய சாலை காவல் நிலை யத்தில் புகார் அளித்ததின் பேரில், விசாரணை மேற் கொண்ட போலீசார் காசிநாதனை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஓணம் பண்டிகை கோவையில் பூக்கள் விலை உயர்வு

கோவை, செப். 3 -  கோவை பூமார்க்கெட்டுக்கு வருகிற பூக்கள் ஓணம்  பண்டிகையையொட்டி கேரளமாநிலத்திற்கு கொண்டு செல்வதால், கோவையில் பூக்களின் விலை அதிகரித் துள்ளது.  கோவை ஆர்.எஸ்.புரம் அருகே பூ மார்க்கெட் உள்ளது.  இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளி மாவட்டம்  மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பூக்கள் வந்து குவி கின்றன. இந்த பூக்கள் வியாபாரிகள் மூலம் விற்பனை செ்ய யப்படுகின்றன. இங்கிருந்து அண்டை மாநிலமான கேர ளாவுக்கும் அதிகளவில் பூக்கள் அனுப்பப்படுகிறது. பூக்க ளின் விலை நாளுக்கு நாள் மாறுபடும் தன்மையுடையது. பண்டிகை மற்றும் திருவிழா, கோவில் விழா நாட்களில் பூக்கள் விலை மிக உயர்ந்தும், மற்ற நாட்களில் விலை குறை வாகவும் காணப்படும். கேரளாவில் பிரசித்தி பெற்ற ஓணம்  பண்டிகையையொட்டி பூக்களின் விலை உயர்ந்து உள்ளது.  சுமார் 100 டன்களுக்கு மேலாக பூக்கள் விற்பனையாகும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை பூ மா்்ா்க கெட்டுக்கு வரும் பூக்கள் அதிகளவில் கேரளாவிற்கு கொண்டுச் செல்லப்படுகிறன்றன. மேலும், கேரளவில் இருந்து வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு வந்து பூக்களை கொள்முதல் செய்து விட்டு செல்கின்றனர்.  இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வரும் 8-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனால் பூக்களின் விலை இன்று  உயர்ந்து காணப்பட்டது. அதன்படி மல்லிகைப்பூ ஒரு கிலோ  ரூ.1200 முதல் 1600 வரையும், முல்லை ஒரு கிலோ ரூ. 600  முதல் 800 வரையும், ஜாதிமல்லி கிலோ ரூ.580 வரையும்,  ரோஜா ரூ.200 முதல் 240 வரையும், செவ்வந்தி ரூ.240 முதல்  280 வரையும், வாடாமல்லி ரூ.100 முதல் 120, தாமரை ஒன்று  ரூ.7 முதல் 10, அரளி ரூ.200, சவுக்கு ஒரு கட்டு ரூ.50 என விற்பனை செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை யொட்டி விலை உயர்ந்து காணப்பட்டது.  தற்போது ஓணம்  பண்டிகையையொட்டி, விலை மேலும் 2 மடங்கு உயர்ந்து  உள்ளது.

35ஆவது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

கோவை, செப். 3- கோவை மாவட்டத்தில், 35ஆவது கொரோனா தடுப் பூசி சிறப்பு முகாம் ஞாயி றன்று நடைபெறுகிறது.  தமிழக அரசின் பன்முக நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா நோய் தொற்று கட்டுப் படுத் தப்பட்டுள்ளது. மேலும், கொரோனா நோயை கட்டுப் படுத்த தடுப்பூசி ஒன்றே தற் போதைய வழி என்பதை கருத்தில்கொண்டு, தடுப் பூசி செலுத்தும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. இதை யடுத்து கோவை மாவட் டத்தில், 35ஆவது கொரோ னா தடுப்பூசி சிறப்பு முகாம்  நடக்கிறது.  இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செய் திக்குறிப்பில் கூறியிருப் பதாவது, கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக 2 ஆவது தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் ஆன 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தவணை தடுப்பூசி அரசு தடுப்பூசி மையங்களில் செலுத்தப்படுகிறது. இந்த  பூஸ்டர் தடுப்பூசி செப் டம்பர் 30-ந் தேதி வரை மட்டு மே இலவசமாக செலுத்தப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.  இதில் தகுதியா னவர்கள் 2ஆவது தவணை,  பூஸ்டர் தவணை தடுப்பூசி  செலுத்திக் கொள்ளலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞரிடம் செல்போன் பறிப்பு

கோவை, செப்.3- நடந்து சென்ற இளை ஞரிடம் இருந்து செல் போனை பறித்து சென்ற வர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவை மாவட்டம், புலியகுளத்தை சேர்ந்தவர் லோகநாதன் (36). இவர் சம்பவத்தன்று ரெட்பீல்டு  சாலையில் செல்போனில் பேசி கொண்டு நடந்து சென் றுள்ளார். அப்போது அவரது பின்னால் மோட்டார் சைக் கிளில் வந்த நபர் லோக நாதன் கையில் இருந்த செல் போனை பறித்து அவரை  கீழே தள்ளிவிட்டுள்ளார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட் டுள்ளார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர்  ஓடி வந்துள்ளனர். ஆனால் அதற்குள் அந்த நபர் அங்கி ருந்து தப்பி சென்று உள்ள னர்.  இதுகுறித்து ராமநாத புரம் காவல் நிலையத்தில் லோகநாதன் அளித்த  புகார் அடிப்படையில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின் றனர்.

மூன்று ஆசிரியர்களுக்கு  டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது 

உடுமலை, செப் 3- திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்தில் மூன்று ஆசிரி யர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது அறிவிக்கப்பட் டுள்ளது.  உடுமலை ஒன்றியத்தில் கோட்டமங்கலம் அறிவியல் பட்ட தாரி ஆசிரியர் கலாமணி, ஸ்ரீ விசாலாட்சி பெண்கள் மேல்நி லைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் நர்மதா, லிங்கமாவூர் பள்ளி  ஐயப்பன் ஆகியோருக்கு  இந்த ஆண்டுக்கான டாக்டர்  ராதாகிருஷ்ணன் விருது வழங்க பட உள்ளது. இவர்கள்  மூவருமே உடுமலை கிளை நூலகம் எண் இரண்டை பயன் படுத்தி, போட்டி தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவ-  மாணவியருக்கு வழிகாட்டி உள்ளனர். இவர்களுக்கு நூலக  வாசகர் வட்ட தலைவர் இளமுருகு, துணைத்தலைவர் சிவக் குமார், ஆலோசகர் ஐயப்பன், மகளிர் வாசகர் வட்ட தலைவர்  நல்லாசிரியர் விஜயலட்சுமி, நூலகர் கணேசன்(ப.நி),  நூலகர் மகேந்திரன், அஷ்ரப் சித்திகா பிரமோத் மற்றும் நூலக  வாசர் வட்ட உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

ஆதார் இணைக்க சிறப்பு முகாம்

அவிநாசி, செப்.3- அவிநாசி வட்டாரத்தில் 196 வாக்கு சாவடி மையங்களில்  செப்டம்பர் 3, 4 ஆகிய தேதிகளில்  வாக்காளர் அடையாள  அட்டையுடன், ஆதார்  எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடை பெறகிறது. இம்முகாம் , ஞாயிற்றுக்கிழமை  காலை 9.30 மணி முதல்  மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது. வாக்குச் சாவடி  அலுவலரிடம் படிவம், 6 பெற்று, கருடா மொபைல் செயலி  வாயிலாக ஆதார் எண் இணைத்து கொள்ளலாம் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான இணையவழிப் போட்டி

உடுமலை, செப். 3- மத்திய அரசின் சுற்றுச்சூழல் வன மற்றும்  காலநிலை மாற்ற அமைச்சகத்தின் சார்பில்   பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவி லான இணையவழிப் போட்டிகளில் அறிவிக் கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16  அன்று உலக ஓசோன் தினம் அனுசரிக்கப்படு கிறது. மத்திய அரசின் சுற்றுச்சூழல், வன, காலநிலை மாற்ற அமைச்சகத்தின் சார்பில் இணைய வழி போட்டிகள் அறிவிக்கப்பட் டுள்ளது. போட்டிகள்; போஸ்டர் உருவாக்கும் போட்டி, தலைப்பு; ஓசோன் அடுக்கின் பாது காப்பு, ஸ்லோகன் எழுதும் போட்டி, தலைப்பு;   உலக வெப்பமயமாதல் (இந்தி அல்லது  ஆங்கிலம் மட்டும்) முதல் பரிசு: ரூ. 10 ஆயி ரம், இரண்டாம் பரிசு: ரூ. 7ஆயிரம், பரிசு: ரூ 5  ஆயிரம், ஆறுதல் பரிசு: ரூ. 2 ஆயிரம் (மூன்று  பேருக்கு) குறிப்பு : ஒரு மாணவருக்கு ஒரு பதிவு  மட்டும். பதிவு அவரின் சொந்தமானதாக இருக்க வேண்டும். போஸ்டர் பதிவுகள் 22x13   இஞ்ச் அளவில் இருக்க வேண்டும். பங்கேற் பாளர்கள் தங்கள் பெயர்,வகுப்பு, பள்ளியின்  பெயர், முழு அஞ்சல் முகவரி, மொபைல் எண்  ஆகியவற்றை மின்னஞ்சல் ஐடியுடன் பூர்த்தி  செய்ய வேண்டும், அத்துடன் பள்ளி முதல்வர் /துணை முதல்வர்/தலைமை ஆசிரியரின்  பரிந்துரையை, கொடுக்கப்பட்ட படிவத்தில்  நிரப்ப வேண்டும். போஸ்டர் மற்றும் ஸ்லோ கன் எழுதும் போட்டியின் படைப்புகளை (ஒவ் வொரு பிரிவிலும் ஒன்று மட்டும்)    https:// moef.gov.in மற்றும் http://ozonecell. nic.in என்ற  இணையதளத்தில் நேரடியாக  பதிவேற்றவும். படைப்புகள் JPEG or PDF 5MB  க்கும் குறைவாக இருத்தல் வேண்டும்.  படைப்புகளை சமர்பிக்க கடைசி நாள், செப்.5  மாலை 5 மணி என தெரிவித்துள்ளார்கள். இதைதொடர்ந்து தகுதியான படைப்புக ளில்  இருந்து சிறந்த படைப்புகள் தேர்வு செய் யப்பட்டு. 16 செப். 2022 அன்று நடைபெறும் விழாவில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான நிலையில் வீழும் தொழில்;  உயிர் மூச்சுக் கொடுக்க ரைசிங் சங்கம் கோரிக்கை

திருப்பூர், செப். 3 – ஆபத்தான நிலையில் வீழ்ந்து கொண்டிருக்கும் திருப்பூர் தொழி லுக்கு ஒன்றிய அரசு உயிர் மூச்சுக்  கொடுக்க வேண்டும் என்று திருப்பூர்  ரைசிங் உரிமையாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. சனிக்கிழமை ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனிடம் திருப்பூர்  ரைசிங் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கருணாம்பிகா எம்.வி.ராம சாமி அளித்திருக்கும் மனுவில் கூறியி ருப்பதாவது: சாயக் கழிவுநீரை சுத்தி கரித்து பயன்படுத்தும் மறுசுழற்சி தொழில்நுட்பத்தை ஒன்றிய அரசு ஏற்க வேண்டும். மறுசுழற்சித் தொழில்நுட்பத்தை அரசு ஏற்று நடத்தி, அதற்குரிய குறைந்தபட்ச கட் டணத்தை சாயஆலைகளிடம் வசூ லித்தால் உற்பத்தி செலவு வெகு வாகக் குறையும். குழாய் மூலம் எரி வாயு திட்டத்தை விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உடன டியாக அமலாக்க வேண்டும்.

 தொழிலாளர்களுக்கு, பெண்க ளுக்கும் பாதுகாப்புள்ள அடுக்கு மாடி மற்றும் தனி குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும். ரயில் நிலை யத்தை மேம்படுத்தி, சரக்குப் பெட்டக வசதியை விரிவாக்க வேண் டும். பஞ்சு, நூல் பொருட்களை அத்தி யாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்த்து பருத்தி, பஞ்சு விலை நிலை யாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.  தமிழகத்தில் தரமான பருத்தி விதைகளைக் கொடுத்து பருத்தி விளைச்சலை அதிகரிக்க வேண் டும், நூல் விலை உயர்வால் பாதிக்கப் பட்ட தொழில் துறையினருக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கு மின் கட் டண மானியம் வழங்க வேண்டும். சரக்குகளை துறைமுகங்கள், வெளி  மாநிலங்களுக்கு கொண்டு செல்ல புதிய சுற்றுச் சாலை அமைக்க வேண் டும்.  நீர் மேலாண்மை திட்டத்தில் 10  ஆயிரம் சதுர அடியில் மழைநீர் சேக ரிப்புத் தொட்டிகளை உருவாக்கி நீரா தாரங்களை உருவாக்க வேண்டும். ஊரகப் பகுதிகளில் துணை மின் நிலையங்கள் மற்றும் ஆழ்குழாய் மூலம் பூமிக்கடியில் புதிய மின்வழிப்  பாதைகள் அமைக்க வேண்டும்,  நூல் ஏற்றுமதிக்கு 1.9 சதவிகித  டிராபேக் உள்பட மொத்தம் 5.8 சதவி கித ஏற்றுமதி வரிச்சலுகை அளிப்பது,  உள்நாட்டு தொழிலுக்குத் தேவைப்ப டும் நூல் தட்டுப்பாடு பிரச்சனையை உருவாக்கி விட்டது. எனவே உள் நாட்டு வர்த்தகத்திற்கு 5.8 சதவிகித  ஊக்கச் சலுகை வழங்க வேண்டும்.  இவற்றை நிறைவேற்றுவதன் மூலம் ஆபத்தான நிலையை நோக்கி  வீழ்ந்து கொண்டிருக்கும் இத்தொழி லைக் காப்பாற்றி உயிர் மூச்சுக் கொடுக்க வேண்டும். இவ்வாறு கரு ணாம்பிகா எம்.வி.ராமசாமி கூறியி ருக்கிறார்.

வாகனம், வீடு, தனி நபர் கடன்களுக்கு கூடுதல் வட்டி எம்சிஎல்ஆர் கடன் வட்டி விகிதங்களை உயர்த்திய பொதுத்துறை வங்கிகள்!

புதுதில்லி, செப். 3 - பல்வேறு வங்கிகள், ரெப்போவுடன் தொடர்புடைய (Repo Linked Lending Rate -RLLR) கடன்களுக்கான வட்டியை உயர்த்த ஆரம் பித்தன. இந்த வரிசையில், பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank - PNB), இந்தியன் வங்கி (Indian Bank) ஆகியவையும் தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன. இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பஞ்சாப் நேஷ னல் வங்கி: “ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியதன் எதிரொலி யாக, பெரும்பாலும் கார் உள்ளிட்ட வாகனங்களை வாங்குவதற்கான கடனாகவும் தனி நபர் கடனாகவும் வழங்கப்படும் எம்சிஎல்ஆர் கடன்க ளுக்கான (Marginal Cost of Funds Based Landing Rate - MCLR) வட்டி விகிதங்கள் செப்டம்பர் 1 முதல் அதிகரிக்கப்படுகின்றன. இதன்படி, ஓராண்டு தவணைக் காலம் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதம் 7.65 சதவீதத்திலிருந்து 7.70 சதவிகிதமாக உயர்கிறது. மூன்றாண்டு தவணை கடன்களுக்கான வட்டி விகிதம் 0.05 சதவிகிதம் அதிகரித்து 8 சத வீதமாக உயர்த்தப்படுகிறது. இது தவிர, ஒன்று, மூன்று, ஆறு மாத தவணைக் கடன்களுக்கான வட்டி விகிதமும் 7.10 முதல் 7.40 சதவிகிதமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளது. இதேபோல இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடன் வட்டி விகிதங்கள் குறித்து வங்கியின் சொத்து பொறுப்பு மேலாண்மைக் குழு, பல்வேறு தவணைக்காலங்களில் வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு செய்துள்ளது. சனிக்கிழமை (செப்.  3) முதல் புதிய விகிதங்கள் அமலுக்கு வருகின்றன. இதன்படி ஓராண்டு கடன்களுக்கான வட்டி விகிதம் 7.65 சதவிகிதத்திற்கு பதிலாக 7.75 சத விகிதமாக இருக்கும். ஒரு நாள் முதல் ஆறு மாதங்கள் வரையிலான கடன்க ளுக்கான வட்டி விகிதம் 0.10 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட்டு 6.95 முதல் 7.60 சதவிகிதம் வரை இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


 

;