districts

img

விடுதலை போராட்ட வீரர் தோழர் வி.ராமசாமி நினைவேந்தல்

நாமக்கல், ஜூலை 23- விடுதலை போராட்ட வீரரும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெ ரும் தலைவருமான மோளிப்பள்ளி வி.ராமசாமியின் 24 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்திய சுதந்திர விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும்  தலைவரும், திருச்செங்கோடு முன் னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் வி.ராமசாமியின் 24 ஆம்  ஆண்டு நினைவு தினம் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் ஞாயிறன்று அனு சரிக்கப்பட்டது. சிபிஎம் நாமக்கல் மாவட்டக்குழு சார்பில், அவரது பூர் வீக கிராமமான மோளிப்பள்ளி கிரா மத்தில் அமைந்துள்ள நினைவிடத் தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடை பெற்றது. தோழரின் உருவப்படத் திற்கு மாலை அணிவித்து, மலர்த் தூவி செவ்வணக்கம் செலுத்தப்பட் டது. இதில் கட்சியின் மாவட்ட செய லாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற் குழு உறுப்பினர் ந.வேலுச்சாமி மற் றும் எம்.காளியப்பன், கே.முருகே சன், இ.பி.அழகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளிபாளையம் காவேரி ஆர்எஸ் சிஐடியு அலுவலகம் மற்றும் ஆவரங் காடு கட்சி அலுவலகத்தில் தோழர் மோளிப்பள்ளி வி.ராமசாமியின்  நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற் றன. இதில் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.அசோகன் மற் றும் கட்சி கிளை செயலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு, அவரது உருவப்படத்திற்கு மாலை  அணிவித்து, மரியாதை செலுத்தினர். திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே நடைபெற்ற அஞ்சலி நிகழ் வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் பி.பெருமாள், ஆதிநாராயணன், மூத்த தலைவர் வேலாயுதம், உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, கொல்லப்பட்டி கிளை உள்ளிட்ட நாமக்கல் மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளிலும், தோழர் வி.ராமசாமியின் உருவப்படத்திற்கு சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி செலுத் தினர்.