districts

img

தோழர் எம்.தங்கவேல் நினைவேந்தல்

திருப்பூர், ஜூன் 9- உடுமலையில் தோழர் எம்.தங்கவேலின் 21 ஆம் ஆண்டு  நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் மாவட்டச் செயலாளராககவும் செயல்பட்ட தோழர்  எம்.தங்கவேலின் 21 ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயி றன்று அனுசரிக்கப்பட்டது. உடுமலை ஒன்றியம் குரல் குட்டை, பொன்னாலம்மன் சோலை கிளைகளில் அவரது  படம் வைத்து வீரவணக்கத்துடன் மலரஞ்சலி செலுத்தப்பட் டது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றியச் செய லாளர் கி.கனகராஜ், ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள் ஏ.ராஜ கோபால், எம்.டி.அருண் பிரகாஷ், கிளைச் செயலாளர் எம்.தட் சினாமூர்த்தி, நா.கனகராஜ், டி.ஆனந்தன், தேவராஜ், கோபா லகிருஷ்ணன் கார்த்திக், சக்ரபாணி உட்பட பலர் பங்கேற்று  தோழர் எம்.தங்கவேலுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.