districts

img

தோழர் எம்.ராமசாமியின் நினைவு தினம் அனுசரிப்பு

கோவை, ஆக.4- கோவை மாவட்ட ஆட்டோ சங்க முன்னாள் தலைவர் எம். ராமசாமியின், 9 ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிறன்று அனு சரிக்கப்பட்டது. கோவை மாவட்ட ஆட்டோ சங்கத்தின் முன்னாள் தலைவர்  எம்.ராமசாமியின், 9 ஆம் ஆண்டு நினைவு தினம், சங்கத்தின்  மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஞாயிறன்று நடைபெற் றது. இந்நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் தலைவர் ரா.செல்வம் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் எம்.கே.முத்துக் குமார், பொருளாளர் எம்.மைக்கேல்சாமி, மாவட்ட நிர்வாகி கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு, ராமசாமியின்  உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அவரின் பணிகள் குறித்து நினைவு கூறும் வகை யில், அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் சங்கத்திற்கு ஆற் றிய பங்களிப்புகள் குறித்து உணர்வு பூர்வமாக பேசப்பட் டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் அவரது நினைவு களைப் பகிர்ந்து கொண்டனர்.