தருமபுரி, டிச.6- தருமபுரியில் ராக்கிங் காரணமாக மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவர் ஒருவர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி யில் இரண்டாம் ஆண்டு மருத்துவக் கல்வி பயின்று வரு கிறார். இவர் அண்மையில் தன்னை சிலர் ராக்கிங் செய்வ தாக கூறி புகாரளித்ததாக கூறப்படுகிறது. இந்த புகார் தொடர்பாக மருத்துவக் கல்லூரி நிர்வாகம் விடுதி காப்பாளர் கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மாணவர், மிகுந்த மன அழுத்தத் தில் இருந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவர் ஞாயிறன்று தற் கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது, அம்மாணவர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி முதன் மையர் க.அமுதவல்லி விசாரணை மேற்கொண்டார். இத னையடுத்து ராக்கிங்கில் ஈடுபட்ட 3 ஆம் ஆண்டு மாணவர்கள் 4 பேரை விடுதியில் இருந்து நிரந்தரமாக நீக்க வும், கல்லூரியிலிருந்து நான்கு வாரம் இடைநீக்கம் செய்தும் உத்தரவிட்டார்.