அவிநாசி,பிப்.22 - அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் திருப்பூர் வடக்கு, கோவில் நிர்வாக அலு வலர், கோவில் அறங்காவலர் அமைப்பு, அவிநாசி பேருராட்சி நிர்வாகம், கேபிஆர் குழுமத்தைச் சேர்ந்த இரண்டு குழுக் கள், பசுமை தோழன் திருப்பூர், அவிநாசி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த என். எஸ்.எஸ் மாணவர்கள் இணைந்து நெகிழி கழிவு சுத்தம் செய்யும் நிகழ்ச்சியை நடத்தி னர். இதன்படி சனியன்று கோவிலை சுற்றியுள்ள பகுதியில் 250 கிலோ எடையுள்ள நெகிழி கழிவுகளை சேகரித்து பேரூ ராட்சி நிர்வாகத்திடம் அளித்தனர். மேலும் திருப்பூர் மாசுகட்டு பாடு வாரிய உதவி செயற்பொறியாளர் டாக்டர் ரமேஷ் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பெருட்களால் உண் டாகும் தீமைகள் குறித்து எடுத்துரைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, மஞ்சப்பை பயன்பாடு குறித்தும் வலியுறுத்தினார்.