districts

இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம்

தருமபுரி, டிச.28- இலக்கியம்பட்டியில் இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தருமபுரி ஒன்றியம், இலக்கியம்பட்டி யில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இந்த பள்ளியிலுள்ள ஒரு  வகுப்பறை கட்டடத்தில் பல ஆண்டுகளாக  அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. அங்கன்வாடி மையத்தில் 25 குழந்தைகள் பயின்று வருகின்றனர். அங்கன்வாடி மையத் திற்கு என்று புதிய கட்டடம் அமைக்க வில்லை. ஏற்கனவே இயங்கி வந்த பள்ளி கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல் பட்டு வருகிறது. இந்த கட்டடம் பல ஆண்டு களுக்கு முன் கட்டப்பட்டதால், கட்டடத்தின் உள் மேற்கூரை இடிந்த அவ்வப்போது விழு கிறது. இந்த மேற்கூரை மொத்தமாக இடிந்து விழுந்து விடுமோ? அன்ற அச்சம் குழந்தை களின் பெற்றோருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், மழைக் காலங்களில், மழை நீர் வகுப்பறையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப் போது குழந்தைகள் அங்கன்வாடி மையத் திற்கு வருவதில்லை.  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை மூலம் கடந்த 2010 - 11 ஆம் நிதியாண்டில் ரூ.58  ஆயிரத்திற்கு சீரமைப்பு பணி நடைபெற்றுள் ளது. அதனைத்தொடந்து 2016 - 17 ஆம் நிதி யாண்டில் ரூ.77 ஆயிரத்திற்கு சீரமைப்பு பணி  நடைபெற்றுள்ளது. தற்போது கட்டடம் முழு வதும் பழுதடைந்து, எப்பொழுது வேண்டுமா னாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் சீரமைப்பு பணிக்கு நிதி ஒதுக்காமல், கட்ட டத்தை முழுவதும் இடித்துவிட்டு புதிய  அங்கன்வாடி கட்டடம் கட்டித்தர வேண்டும்  என குழந்தைகளின் பெற்றோர் வலியுறுத்தி யுள்ளனர்.