கோவை, டிச.18– வரலாறு காணாத வகையில் உயர்ந்து வரும் மூலப்பொருட்களின் விலை உயர்வால் சிறு, குறு தொழில்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், ஒன்றிய அரசிற்கு எதிரான நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு கோவை தொழில் அமைப்புகள் திரண்டுள்ளனர். வேலைவாய்ப்பு மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. உள் நாட்டு உற்பத்தியில் 30 சதவிகிதம், ஏற் றுமதியில் 48 சதவிகிதம் பங்களிப்பு அளிப்பதோடு, 12 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் துறையா கவும், 40 கோடி பேர் சார்ந்திருக்கும் துறையாகவும் உள்ளது. இந்நிலை யில், கடந்த ஓரிரு ஆண்டுகளாக வார்ப்பட தொழிலுக்கு தேவையான இரும்பு மூலப்பொருள் தொடங்கி, தேனிரும்பு, அலுமினியம், தாமிரம், பேக்கிங் காகிதம், பிளாஸ்டிக் என அனைத்து மூலப்பொருட்களும் வர லாறு காணாத அளவிற்கு பல மடங்கு விலை உயர்ந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள தொழில் நிறு வனங்கள் மிகக் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளன. கோவையில் மட்டும் ஆயிரக்க ணக்கான சிறுகுறு தொழில் நிறுவனத் தினர் மேற்கொண்டு தொழில்களை நடத்த முடியாமல் விழி பிதுங்கி உள் ளனர். இங்கு பணியாற்றும் தொழிலா ளர்களுக்கு தொடர்ந்து வேலை கொடுக்க முடியாமல் “நோ ஒர்க்“ என்கிற அடிப்படையில் பல்லாயிரக் கணக்கானோரின் வேலை மற்றும் வாழ்வாதாரம் பறிபோயுள்ளது. இது குறித்து தொழில் அமைப்புகள் ஒன் றிய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக, மூலப் பொருட்களின் விலை மட்டும் எவ்வித கட்டுப்பாடுமின்றி ஏறிக்கொண்டே இருக்கிறது.
கெளரவத்திற்காக தொழில் நடத்தும் நிலை
இந்நிலையில் மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்தும், அதனை உடனடியாக கட்டுப்படுத்த ஒன்றிய அரசை வலியுறுத்தியும் டிசம்பர் 20 ஆம் தேதி நாடு முழுவ தும் உற்பத்தி நிறுத்த போராட்டத் திற்கு அனைத்து சிறுகுறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூட்ட மைப்பு அறைகூவல் விடுத்துள்ளது. இதன்தொடர்ச்சியாக கோவையில் கொடிசியா, தென்னிந்திய பொறியி யல் உற்பத்தியாளர்கள் சங்கம் (சீமா), இந்தியத் தொழில் வர்த்தக சபை (கோவை கிளை), டாக்ட் (கோவை கிளை), காட்மா, கோப்மா உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப் புகள் இந்த போராட்டத்தில் முழு மையாக பங்கேற்க உள்ளனர். இதுகுறித்து தொழில் அமைப் பின் நிர்வாகிகள் கூறுகையில், கடந் தாண்டு நவம்பர் மாதம் தொடங்கி மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் சிறு, குறு மற்றும் நடுத் தர தொழில் நிறுவனங்கள் காணாமல் முற்றிலும் முடங்கிவிடும். ஏற்கனவே பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என அடுத் தடுத்த தாக்குதல்களால் நிலைகு லைந்து போயுள்ளோம். கடந்த 3 மாதங்களாக பொருளாதாரம் மந்த மாக உள்ளது. உற்பத்தி செய்யப்ப டும் பொருட்களின் விலையும் உயர்ந் துள்ளதால், மக்களிடம் வாங்கும் திற னும் குறைந்துள்ளது. “மூன்று ஷிப்ட் கள்” இயங்கிய தொழில் நிறுவனங்க ளில் தற்போது “ஒரு ஷிப்ட்“-க்கே வேலை கொடுக்க முடியாமல், இருக் கின்ற தொழிலாளர்களை “நோ ஒர்க்“ என்கிற முறையில் ஓய்வு கொடுத்து வருகிறோம். லாபத்திற்காக தொழில் நடத்திய காலம் போய் தற்போது கௌரவத்திற்காக தொழில் நடத்தும் நிலைக்கு வந்துள்ளோம்.
ரூ.25 ஆயிரம் கோடி உற்பத்தி பாதிப்பு
எங்கள் சிரமங்கள் குறித்து தொடர்ந்து ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறோம் ஆனால் எந்த நடவடிக்கையோ, முன் னேற்றமோ இல்லை. இதற்கு முன்பு எவ்வளவோ கஷ்டங்களை தொழில் அமைப்புகள் எதிர்த்து வெற்றி பெற் றுள்ளோம். ஆனால், இதுபோன்ற நிலை எப்போதும் ஏற்பட்டதில்லை. ஆகவே, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த போராட்டம் முன்னெ டுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தால் ரூ.25 ஆயி ரம் கோடி வரை அன்றைய தினம் உற் பத்தி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கோவையில் மட்டும் 50 ஆயிரம் நிறு வனங்கள் வரை இதில் பங்கேற்க வுள்ளன. நாடு முழுவதும் இருந்து அனைத்து அமைப்புகளும் போராட் டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. வேறு வழியே இல்லாத நிலையில் தான் தற்போது போராட்ட களத்திற்கு வந்துள்ளோம். இதனை புரிந்து கொண்டு ஒன்றிய அரசு எங்களின் நியாமான கோரிக்கையின் மீது கவ னம் செலுத்த வேண்டும் என்றனர்.