districts

கோவை: அப்ரண்டீஸ் பயிற்சிக்கு புதிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர்

கோவை, நவ. 27- ஐடிஐ பயிற்சி பெற்றவர்கள், 8, 10, 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் கல்லூரி வரை படித்தவர்கள்  அப்ரண்டீஸ் பயிற்சி பெறுவதற்கு புதிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சி யர் கு.இராசாமணி வெளியிட்டுள்ள  அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, ஐடி.ஐ பயிற்சி பெற்றவர்கள், 8, 10, 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் கல்லூரி வரை படித்தவர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவ னங்கள் மற்றும் தனியார்துறை பெரு நிறுவனங்கள் போன்றவற்றில் நேரடி யாக விண்ணப்பித்து அப்ரண்டீஸ் பயிற்சி பெற http://apprenticeshipindia.org என்ற புதிய இணையதளத்தை மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.

 எனவே, அப்ரண்டீஸ் பயிற்சிபெற விரும்புவோர் தங்களது அசல் கல்வி சான் றிதழ், ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு போன்ற விபரங்களை மேற்கண்ட இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து தாங்கள் விரும் பும் தொழில் நிறுவனங்களில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். மேலும், இப்பயிற் சிக்கு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை நிறுவனங்களால் உதவித் தொகை வழங் கப்பட்டு, பயிற்சி முடிந்த பின்னர் தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் பெற்று அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் ஓராண்டு சலுகையும் பெற முடி யும்.

எனவே, ஐடிஐ படித்தவர்கள் நேரடியாக ஓராண்டு அப்ரண்டீஸ் பயிற்சிக்கும், 8, 10, 12ம் வகுப்பு, பட்ட மற்றும் பட்டய படிப்பு படித்தவர்கள், படிப்பை தொடர இயலாத வர்கள் 3 முதல் 6 மாதங்கள் வரை அடிப்படை பயிற்சி வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஓராண்டு முதல் 18 மாதங்கள் வரை பயிற்சி பெறுவதற்கு புதிய இணை யதளத்தில் பதிவு செய்து, உரிய விபரங்க ளுடன் கோவை அரசு ஐடிஐ வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவல கத்தை நேரில் அணுகலாம். மேலும், 0422- 2642044, 9442651468, 9566531310 மற் றும் 8122047178 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

;