districts

img

பொதுத்துறைகளை தனியார்மயப்படுத்துவதை ஒன்றிய அரசு கைவிட சிஐடியு வலியுறுத்தல்

சேலம், செப்.5- சேலம் உருக்காலை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங் களை தனியார்மயப்படுத்துவதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என சிஐடியு சேலம் உருக்காலை சங்க மாநாட் டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிஐடியு சேலம் உருக்காலை சங்கத்தின் ஆண்டு பேரவை மோகன் நகர் சமுதாய கூடத்தில் சங்க தலைவர்  பொ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. எஸ்.சண்முகம்  வர வேற்றார். வி.சிலம்பரசன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். அறிக்கைகளை பொதுச்செயலாளர் கே.பி.சுரேஷ்குமார், பொருளாளர் ஏ.பாலாஜி ஆகியோர் முன்வைத்தனர். சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன், திருச்சி பிஎச்இஎல் சிஐடியு சங்க செயலாளர் பரமசிவம் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். இதில், சேலம் உருக்காலை உள்ளிட்ட பொதுத்துறை நிறு வனங்களை தனியார்மயம் செய்யும் முடிவினை ஒன்றிய  அரசு உடனடியாக கைவிட வேண்டும். நிரந்தர தன்மை வாய்ந்த பணியிடங்களில் ஒப்பந்த ஊழியர் முறையினை ரத்து செய்ய வேண்டும்.

ஊதிய முரண்பாடு உள்ளிட்ட நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முன்வர  வேண்டும். உருக்காலை மருத்துவமனையில் நிலவிவரும் மருத்துவர் உள்ளிட்ட ஆள்பற்றாக்குறையை உடனடியாக போக்கி, நிரந்தர பணியில் மருத்துவர்கள் மற்றும் செவிலி யர், தொழில் நுட்புநர்களை பணியமர்த்த வேண்டும். புதிய தொழிலாளர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்த சலு கைகளை S1 , S3 என்ற அடிப்படையில் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின் தலைவராக ஆர்.சித்தை யன், பொதுச்செயலாளராக கே.பி.சுரேஷ் குமார், பொருளா ளராக ஏ.பாலாஜி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிறை வாக, செ.விஜய் நன்றி கூறினார்.

;