districts

img

வங்கி ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து சிஐடியு, பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆவேசம்

திருப்பூர், டிச.17- வங்கிகள் தனியார்மயத்தை எதிர்த்து போராடும் வங்கி  ஊழியர்களுக்கு ஆதரவாக வெள்ளியன்று சிஐடியு சார் பில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருப்பூர்-ஊத்துக்குளி சாலை பாரத ஸ்டேட் வங்கி கிளை  அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.பாலன் தலைமை வகித்தார். சிஐடியு திருப்பூர் மாவட்ட தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பி னர் ஜி.சம்பத், மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ் ஆகியோர் உரையாற்றினர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்று மோடி அரசுக்கு எதிரான கண்டன முழக் கங்களை எழுப்பினர்.

பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆவேசம்

இதேபோல் வங்கி துறையினர் நடத்திய வேலை நிறுத்த  போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, திருப்பூர் பிரதான தொலைபேசி நிலையம் முன்பாக வெள்ளியன்று பிஎஸ் என்எல் ஊழியர் சங்கம், தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழி லாளர் சங்கம், ஓய்வு பெற்றோர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில் ஓய்வு பெற்றோர் சங்க மாநில நிர்வாகி சௌந்தர பாண்டியன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில உதவி  செயலாளர் எஸ்.சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் கல் யாணராமன் ஆகியோர் உரையாற்றினர். தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் ரமேஷ் நன்றி கூறி  ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.