சேலம், மே 13- ஒப்பந்த தொழிலாளர் முறையை புகுத்து வதை நிறுத்த வேண்டும் என ஏபிடி பார்சல் சர்வீஸ் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தியுள் ளது. ஏபிடி பார்சல் சர்வீஸ் (சிஐடியு) சங்கத்தின் 41 ஆவது ஆண்டு பேரவை சேலம் வி.பி.சிந் தன் நினைவகத்தில் நடைபெற்றது. இக்கூட் டத்தில், ஏபிடி நிறுவனத்தில் 12/3 ஒப்பந் தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஒப்பந்த தொழிலாளர் முறையை புகுத்தக்கூ டாது. தொழிலாளர்களை பழிவாங்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அனைவருக் கும் குறைந்தபட்ச பென்சன் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங் கத்தின் தலைவராக எம்.அருணாச்சலம், பொதுச்செயலாளராக ஆர்.ஆறுமுகம், பொருளாளராக கே.செவந்தியப்பன் மற்றும் 17 துணை நிர்வாகிகளும், 20 தலைமை சங்க கமிட்டி உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட் டனர். இக்கூட்டத்தில் ஏபிடி சங்கத்தின் பொறுப்பாளர் ஆர்.வேலுசாமி, சங்கத்தின் கௌரவத் தலைவர் எஸ்.ஆறுமுகம், சிஐ டியு சாலை போக்குவரத்து சங்க மாநிலத் துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.