districts

img

போக்குவரத்து ஊழியர்கள் மீது தாக்குதல் தொழிலாளர்களை பாதுகாக்க சிஐடியு வலியுறுத்தல்

சேலம், செப்.19- இரவு நேரத்தில் போக்குவரத்து ஊழியர் களை தாக்கும் சம்பவம் தொடர்ந்து அரங் கேறி வருகிறது. அதனை தடுக்க போக்கு வரத்து தொழிலாளர்கள் பாதுகாப்புச் சட் டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத் துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சேலம் மண்டல ஓமலூர் கிளை பேருந்து  ஓமலுர் - தின்னப்பட்டி  வழித்தட பேருந்து ஓமலூரில் இருந்து தின்னப்பட்டி நோக்கி செல்லும்போது குடிபோதையில் இருந்த சில சமூக விரோதிகளால் ஓட்டுநர் ரமேஷ்குமார், நடத்துனர் வேடியப்பன் ஆகி யோர் கடுமையாக தாக்கப்பட்டனர். தாக்கு தல்களுக்கு உள்ளான ஓட்டுநர் நடத்துனர் ஓம லூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளி யாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள னர். தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத் தில் உரிய தலையீடு செய்து தாக்குதலுக் குள்ளான தொழிலாளிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்திட ஏற்பாடு செய்திட வேண் டும்.

மக்கள் சேவைகளான முன்கள பணியா ளர்களான போக்குவரத்து ஊழியர்கள் தாக் கப்படுவதை தடுத்திட, மருத்துவர்கள் மருத் துவ பணியாளர்கள் தாக்கப்படுவதை தடுத் திட, குற்றவாளிகளுக்கு 3 ஆண்டு சிறை தண் டனையும் 7 லட்சம் அபராதமும் என்று உள் ளதை போல் தனி சட்டம் இயற்ற வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது. முன்னதாக, போக்குவரத்து ஊழியர் களை தாக்கிய சமூக விரோதிகளை உடனடி யாக காவல்துறை கைது செய்து  தண்டனை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி பொட்டி யபுரம் வழிதடத்தில் பேருந்தை இயக்க மாட் டோம் என்று போக்குவரத்து தொழிலாளர்கள்  பேருந்து நிலையத்திலேயே பேருந்தை  நிறுத்தினர். போக்குவரத்து நிர்வாகமும், காவல் துறையும் அந்த வழித்தட கிராம முக் கிய பிரமுகர்களும் கலந்து பேசி ஊழியர்க ளுக்கு பாதுகாப்பு அளிக்க ஒப்புதலை அளித் தால் மட்டுமே பேருந்து  இயக்கப்படும் என்று  தொழிலாளர்கள் தரப்பில் தெரிவித்து போராட் டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

;