சேலம், மே 24- அதிமுக ஆட்சிகால சீர்கேடுகளை களைந்து உறங்கி கிடந்திருந்த நிர்வாகம் ஓராண்டில் பேரெழுச்சி பெற்றிருப்பதாக சேலத்தில் நடைபெற்ற தமிழக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் முதல் வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சேலம் மாவட்டம் ஆத்தூர் அரு கேயுள்ள செல்லியம்பாளையத்தில் செவ்வா யன்று நடைபெற்றது. மாநில நகராட்சி நிர்வா கத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை யில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், கடந்த ஆண்டு மே 7-ம் தேதி திமுக ஆட்சிக்கு வந்தது. முதல்வர் பதவியேற்கும் போது சிறு தயக்கம் இருந்தது. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிகாலத்தில் நடைபெற்ற சீர்கேடுகளை ஓராண்டில் சரி செய்ய முடியுமா என்ற தயக்கம் இருந்தது. ஆனால், திமுக ஆட்சியில் தமிழகம் எழுச்சி பெற்றிருக்கிறது. உறங்கி கிடந்த நிர்வா கம் பேரெழுச்சி பெற்றிருக்கிறது. ஓராண்டு காலத்தில் மிகப்பெரிய நம்பிக்கை கிடைத்துள் ளது. இந்தியாவின் சிறந்த மாநிலமாக, அனைத்து வளங்களையும் மாற்ற முடியும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. வழக்கமாக மேட்டூரில் ஜூன் 12 ஆம் தேதி தான் தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர்கள் குறுவை சாகுபடி பெற முடி யும். அதிமுக ஆட்சியில் ஒரு முறை மட்டுமே ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட் டது. மற்ற ஆண்டுகளில் காலதாமதமாகவே திறக்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி திறக்கப் பட்டது. நடப்பாண்டில் இயற்கையே இந்த ஆட்சிக்கு ஆசி வழங்கியது போல தண்ணீர் வரத்து அதிகமாகிவிட்டது. நாடு விடுதலை அடைந்த பிறகு மே மாதத்தில் தண்ணீர் திறப் பது இதுதான் முதல் முறையாகும். மக்கள் மட்டுமல்ல இயற்கையே நம் பக்கம் இருக்கி றது என்பதற்கு இதுதான் அடையாளம். மேட் டூர் அணை நீர் கடைமடை வரை சென்றடை யும் வகையில், ரூ.80 கோடி மதிப்பில் தூர்வா ரும் பணிகள் நடைபெற்றது. கடந்த ஆண்டு குறுவை சாகுபடி தொகுப்பு அறிவிக்கப்பட்டு செயல்படுத்தியதால் 4.90 ஹெக்டேர் உற்பத்தி அதிகரித்தது. 1.18 கோடி நெல் உற்பத்தி அதிகரித்தது.
எதிர்க்கட்சிகளும் பாராட்டக்கூடிய ஆட்சி
இதேபோல், தமிழக அரசு எடுத்து வரும் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்று வருகி றது. பெண்களுக்கு பேருந்தில் இலவச பயண திட்டமானது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத் தியுள்ளது. அரசு வேலைக்கு, தனியார் வேலைக்கு செல்லும் பெண்களுக்கான மாத செலவில் ரூ.2500 மீதமாகியுள்ளது. மேலும், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி திட்டங்கள் லட்சக்கணக்கானவர்களை சென்றடைந்துள்ளது. பெட்ரோலுக்கு ரூ.3 குறைத்தது. கொரோனா காலத்தில் ரூ.4 ஆயி ரம், மளிகைப் பொருட்கள் மற்றும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட் டுள்ளது. தேர்தல் நேரத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்களின் மீது 100 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, உங்கள் தொகுதியில் முதலமைச் சர் என்ற திட்டம், தமிழகத்தின் அனைத்து தொகு திகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதன் மூலம் அந்தந்த தொகுதிகளில் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத திட்டங்கள் நிறைவேற்றப் படும். திமுக தொகுதி மட்டுமல்ல, 234 தொகுதி களுக்கும் அனைத்து திட்டங்களையும் சரிசம மாக வழங்கி வருகிறோம். எதிர்க்கட்சிகளும் பாராட்டக் கூடிய ஆட்சியாக திமுக ஆட்சி உள் ளது. தமிழகத்தை விட்டு சென்ற தொழில் நிறு வனங்கள் மீண்டும் தொழில் தொடங்க முன் வந்துள்ளன.
மதவாதத்தை தூண்டி அவதூறு
திமுக ஆட்சியின் மீது எந்த குறையும் சொல்ல முடியாதவர்கள் தேவையற்ற குற்றச் சாட்டுகளை சொல்லி வருகிறார்கள். 2500 திருக்கோவில்களின் சொத்துக்கள் மீட்கப்பட் டுள்ளது. ஆவணங்கள் முழுமையாக பதிவேற் றப்பட்டுள்ளன. அனைத்து சாதியினரும் அர்ச்ச கர் ஆகலாம் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உண்மையான ஆன்மீகவாதிகள் என்றால் திமுக அரசை பாராட்டியிருக்க வேண்டும். ஆனால் மதவாதத்தை தூண்டி திமுக அரசு மீது அவதூறு பரப்பி வருகிறார்கள். இன்றைக்கு தினந்தோறும் திமுக அரசை விமர்சித்து அறிக்கை விடும் எடப்பாடி பழனி சாமி ஆட்சியில் இருக்கும்போது எதுவும் செய்யவில்லை. கடந்த 10 ஆண்டு கால அதி முக ஆட்சியை விட திமுக அரசு ஓராண்டில் அனைத்து வித சாதனைகளையும் செய்துள் ளது. அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணி கள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில், சேலம் மாவட்டத்தில் விரைவில் ஜவுளிப் பூங்கா அமைய உள்ளது. ரூ.28 கோடி மதிப்பில் வெள்ளிக் கொலுசு பன்மாடி உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளது. கருப்பூரில் இளைஞர் கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில், டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற் கான இடங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலை யில், பணிகள் விரைவில் தொடங்கும்.
ஒன்றிய அரசு மீது சாடல்
திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல் விலையில் ரூ.3 குறைத்துள்ளோம். தற்போது ஒன்றிய பாஜக அரசு கலால் வரியை குறைத்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. ஒன்றிய அரசு வரியை குறைக்கும்போது, மாநில அரசின் வரியும் குறையும். அதேநேரம், 2014ம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசு பொறுப்பேற்கும்போது இருந்த விலையுடன் தற்போதை விலையை ஒப்பிட்டுப் பார்த்தால் ஒன்றிய அரசு இன்னும் பல மடங்கு விலையை குறைக்க வேண்டும். 5 மாநிலங் களில் தேர்தல் வந்ததால் குறைக்கப்பட்ட விலை, தேர்தல் முடிந்ததும் மீண்டும் ஏற்றப்பட் டது. மிக அதிகமாக உயர்த்தி விட்டு, குறைவாக குறைக்கிறார்கள். மக்களோடு மக்களாக இருக் கும் மாநில அரசு கல்வி, மருத்துவம், மின்சாரம், சத்துணவு உள்ளிட்டவைகளை செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்படி பணியாற்றுவதற்காக உரிய நிதி ஒதுகீடு ஒன்றிய அரசு வழங்கவில்லை. ஒன் றிய அரசு வழங்க வேண்டிய ரூ.21,190 கோடி இதுவரை வரவில்லை. பல்வேறு நிதி நெருக்க டிகளுக்கு மத்தியில் தான் தமிழக அரசு பல் வேறு சாதனைகளை செய்து வருகிறது. இவ் வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். முன்னதாக, இந்த கூட்டத்தில் அமைச்சர் கள் துரைமுருகன், கே.என்.நேரு, திமுகவின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் இரா.ராஜேந்திரன் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், முன்னாள் அமைச்சர் பழனியப் பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.