districts

img

மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது முதல்வர் நேரடி நடவடிக்கை

சேலம், டிச.17- பொதுத்துறை வங்கிகளை தனியா ருக்கு தாரைவார்க்கும் ஒன்றிய பாஜக அரசின் முடிவை கண்டித்து அனைத்து  பொதுத்துறை வங்கிகளின் கூட்ட மைப்பு சார்பில் வெள்ளியன்று நடை பெற்ற இரண்டாம் நாள் வேலை நிறுத் தப் போராட்டத்தால் பல ஆயிரக்கணக் கான கோடி ரூபாய் பண பரிவர்த்தனை  முடங்கியது. பொதுத்துறை வங்கிகளை தனியா ருக்கு ஒப்படைக்கும் மசோதாவை ஒன் றிய பாஜக அரசு நிறைவேற்றக் கூடாது. வாராக்கடனை வசூலிக்க கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய பணி நியமனங்களை உடனே செய்ய வேண்டும். விவசாயிகள், சிறு, குறு தொழிலாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தேசிய வங்கிகளின் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்தது.  

வியாழனன்று துவங்கிய இப்போராட் டம் வெள்ளியன்று இரண்டாம் நாளான தொடர்ந்தது.  சேலம் கோட்டை பகுதியில் உள்ள கனரா வங்கி முன்பு வங்கி ஊழியர் கூட் டமைப்பு சார்பில் வேலை நிறுத்தப் ஆர்ப்பாட்டம் கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் கே.சுவாமிநாதன் தலை மையில் நடைபெற்றது. இதில், பிஇ எப்ஐ மாநிலச் செயலாளர் எஸ்.எ. ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் எஸ்.தீனதயாளன், ஏஐபிஓசி குணா லன், ஏஐபிஇஏ விமல்ராஜ், என்சிபிஇ ஸ்ரீராம், ஏஐபிஓஏ உமாநாத், என்சிபிஇ நிர்வாகி மணிவண்ணன் உள்ளிட்ட திரளான வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். கோவை கோவையில் இரண்டாம் நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் நூறு  சதவிகிதம் ஊழியர்கள் கலந்து கொண் டனர். இதைத்தொடர்ந்து, கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள  எஸ்பிஐ வங்கி வளாகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் பங்கேற்று ஒன்றிய அரசின் வங்கிகள் தனியார்மயமாக் கும் முடிவிற்கு எதிராக ஆவேச முழக் கங்களை எழுப்பினர்.

;