சேலம், ஜன.2- சேலம் ரயில்வே கோட்டத்தில் 19 ரயில் களின் இயக்க நேரத்தில் புதனன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், நிகழாண்டுக்கான புதிய ரயில் கால அட்டவணை ஜன.1 முதல் அமலுக்கு வந் துள்ளது. அதன்படி, சேலம் ரயில்வே கோட் டத்தில் 19 ரயில்களின் இயக்க நேரம் 5 நிமிடம் முதல் 30 நிமிடம் வரையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய அட்டவணை யின்படி, கரூர் - சேலம் ரயில் சேலத்துக்கு காலை 9.45 மணிக்கும், ராஜ்காட் - கோவை ரயில் கோவைக்கு இரவு 8.55 மணிக்கும், பொள்ளாச்சி - கோவை ரயில் கோவைக்கு இரவு 10.50 மணிக்கும், பொள்ளாச்சி - கோவை ரயில் கோவைக்கு காலை 9.25 மணிக்கும், திருச்சி - கரூர் ரயில் கரூருக்கு இரவு 8 மணிக்கும், கடலூர் துறை முகம் - சேலம் ரயில் சேலத் துக்கு காலை 9.10 மணிக்கும், சென்னை எழும்பூர் - சேலம் விரைவு ரயில் சேலத் துக்கு காலை 6.15க்கும் வந்து சேரும். சொரனூர் - கோவை ரயில் கோவைக்கு மாலை 5.35 மணிக்கும், மங்களூரு - கோவை ரயில் கோவைக்கு மாலை 6.25 மணிக்கும், சில்சார் - கோவை விரைவு ரயில் கோவைக்கு முற்பகல் 11.55 மணிக்கும், பெங்களூரு - கோவை ரயில் கோவைக்கு இரவு 9.05 மணிக்கும், சேலம் - கரூர் ரயில் கரூருக்கு காலை 7.15 மணிக்கும் வந்தடையும். அதேபோல 7 ரயில்களின் புறப்படும் நேரத் தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி, ஈரோடு - ஜோலார்பேட்டை ரயில் மாலை 5.35 மணிக்கும், மேட்டுப்பாளையம் – போத்த னூர் ரயில் மதியம் 1 மணிக்கும், கோவை - சொரனூர் ரயில் மாலை 4.25 மணிக்கும், கோவை - ராஜ்காட் விரைவு நள்ளிரவு 12.45 மணிக்கும், கரூர் - சேலம் ரயில் இரவு 8.05 மணிக்கும், ஈரோடு - பாலக்காடு டவுன் ரயில் காலை 7 மணிக்கும், மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி ரயில் இரவு 7.45 மணிக்கும் புறப்படும். இந்த நேர மாற்றம் புதனன்று முதல் அமல்படுத்தப் பட்டுள்ளதாக, தெரி விக்கப்பட்டுள்ளது.