districts

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

6 வெறி நாய்கள் பிடிப்பு

திருப்பூர், ஜூன் 13 - திருப்பூர் குமரன் சாலையில் பொதுமக்களை கடித்த 6 வெறி நாய்களை தனியார் அமைப்பினர்  பிடித்து சென்ற னர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிக ளில் வெறி நாய்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மாநகர பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெறிநாய்கள் கடிதத்தில் முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை பலரும் பாதிக்கப் பட்டுள்ளனர்.  திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 36 ஆவது வார்டு குமரன் சாலையை சோந்த பேபி என்ற பெண்ம ணியை புதன்கிழமை வெறி நாய்கள்  தாக்கியதில், படுகாய மடைந்தவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த  பொது மக்கள் மாந கராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்பினரிடம் புகார்  கொடுத்தனர். இதையடுத்து வியாழனன்று காலை குமரன் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் பொதுமக்களைக் கடித்த, பொதுமக்களை அச்சுறுத்தும்  வகையில் குடியி ருப்பு பகுதியில் சுற்றித் திரிந்த 6 வெறி நாய்களை தனியார் அமைப்பினர் லாவகமாக பிடித்தனர். வலை கம்பிகளை பயன்படுத்தி அந்த நாய்களைப் பிடித்து வாகனங்களில் ஏற்றி சென்றனர். இதையடுத்து நாய் தொந்தரவால் அச்சுறுத்த லில் இருந்த அப்பகுதி பொதுமக்கள்  தனியார் அமைப்பின ருக்கு நன்றி தெரிவித்தனர்.

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 

திருப்பூர், ஜூன் 13 - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜூன் 21 அன்று காலை 10.30 மணிக்கு தனியார் துறை வேலை வாய்ப்பு  முகாம் நடத்தப்படுகிறது. எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலைப் பட்டதாரிகள் வரை மற்றும் ஐடிஐ  தொழிற்பயிற்சி, டிப்ளமோ  பயிற்சி பெற்றோர் பங்கேற்கலாம். வேலை அளிப்பவர்களும் https://www.tnprivatejobs.tn.gov.in/என்ற இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ள லாம். அத்துடன் இம்முகாமிற்கு வரும்போது புதிய மற்றும் புதுப்பித்தல் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தகுதியுடை யோர் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண் ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0421-2999152, 94990 55944 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் கூறியுள்ளார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்

திருப்பூர், ஜூன் 13- வாக்காளர்கள் எங்கிருந்தாலும், ஆண்டு முழுவதும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கும் ஆன்லைன் வசதியை தேர்தல் ஆணை யம் செயல்படுத்திவருகிறது. நாடாளுமன்ற தேர்தல் முடிவ டைந்ததையடுத்து, வாக்காளர்களுக்கான ஆன்லைனில் சேவைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

தேர்தல் ஆணையத்தின் nvsp.in இணையதளம் மற்றும் Voter helpline மொபைல் செயலி வாயிலாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தங்களுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6, வெளிநாடு வாழ் இந்தியர் பெயர் சேர்ப்ப தற்கு படிவம் 6ஏ, பெயர் நீக்கத்துக்கு படிவம் 7, முகவரி, தொகுதி மாற்றம் உள்பட அனைத்துவகை திருத்தங்க ளுக்கும் படிவம் 8 ஆகிய விண்ணப்பங்களை ஆன்லை னில் பூர்த்தி செய்து, சமர்ப்பிக்கவேண்டும்.

மேலும், ஆன்லைனில் ‘’இருப்பிடத்திலேயே, பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், புதிய வண்ண அடையாள அட்டைக்காக தேர்தல் கமிஷன் இணையதளம், மொபைல் செயலி வாயிலாக சுலபமாக விண்ணப்பிக்கலாம். ஆன்லை னில் விண்ணப்பிக்கும் இளம் வாக்காளர் பெயர், வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் வெளியாகும் வரைவு பட்டி யலில் சேர்க்கப்படும். கடந்த ஏப்., 1ம் தேதி 18 வயது பூர்த்தியானோர் மட்டுமின்றி வரும் ஜூலை 1; அக்டோபர் 1; வரும் 2025 ஜனவரி 1ம் தேதி 18 வயது பூர்த்தியா வோரும், பெயர் சேர்ப்பதற்காக, இப்போதே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடிகால் வசதியில்லை: மக்கள் அவதி

திருப்பூர், ஜூன் 13- மாணிக்கபுரம் ஊராட்சி, சி.எம் நகரில் வடிகால் வசதி யில்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாலையில் தேங்குவதால், துர்நாற்றம் வீசுகிறது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், மாணிக்கா புரம் ஊராட்சி, சி.எம் நகரில், நீண்ட காலமாக மழைநீர் வடி கால் வசதி கிடையாது. இதனால், வீடுகளில் இருந்து வெளி யேறும் கழிவு நீர் சாலையில் தேங்குகிறது. உடனடியாக இ ப்பிரச்சனைக்கு தீர்வு காண வடிகால் வசதிகளை செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மின்தடை அறிவிப்பு 

உடுமலை, ஜூன் 13- திருப்பூர் மாவட்டம், பூலாங்கிணர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவ தால், 14 ஆம் தேதி வெள்ளி யன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பூலாங்கி ணர், அந்தியூர், சடைய பாளையம், பாப்பனூத்து, சுண்டக்காம்பாளையம், வாளவாடி, ராகல்பாவி, தளி, மெடக்குபட்டி, ஆர்.வேலூர், குறிச்சிக்கோட்டை, திரு மூர்த்திநகர், பொன்னா லம்மன் சோலை, விளா மரத்துபட்டி, உடுக்கம்பா ளையம், கஞ்சம்பட்டி, குண் டலப்பட்டி உள்ளிட்ட பகுதி களில் மின்தடை ஏற்படும் 

மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை

திருப்பூர், ஜூன் 13 - திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி திருப்பூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த வருடம் மே மாதம் 1ஆம் தேதி அன்று காங்கேயம் பகுதியில் தாயுடன் வசித்து வந்த 14 வயதுள்ள மன நலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தற்காக, திருப்பூர் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்ற வெங்கடாச்சலம் (40) என்பவர் மீது காங் கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்தார்.

இந்நிலையில் இவ்வழக்கை விரைந்து விசாரித்த திருப்பூர் மகிளா நீதிமன்ற நீதிபதி விசாரணை முடித்து  புதனன்று தீர்ப்பளித்தார். இதில் பெரியசாமிக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 2,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மூதாட்டியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

கோவை, ஜூன் 13- சுந்தராபுரம் அருகே மூதாட்டியை தாக்கியதாக 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம், சுந்தராபுரம் மாச்சம்பாளையம் பகுதி யைச் சேர்ந்தவர் பழனியம்மாள் (86). இவரது கணவர் சுப்பிரமணியம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார்.  மகன் பாலகுருநாதன் வீட்டில் பழனியம்மாள் வசித்து வந்தார். தனது மகன் பாலகுருநாதன் இறந்து விட்ட நிலை யில், பாலகுருநாதன் தனது வீட்டை செந்தில்குமார் என்பவ ருக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு வாடகைக்கு விட்டு உள்ளார். அதன் பின்னர் வீட்டு வாடகையை செந்தில்குமார் கொடுக் காமல் தவிர்த்து வந்தார். பழனியம்மாள் பலமுறை வாடகை பணம் கேட்கும் போது, பாலகுருநாதன் தன்னிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கியதாகவும், அதை கொடுத்தால் தான் வீட்டை காலி செய்வேன் எனவும் செந்தில்குமார் கூறி உள்ளார்.

இந்நிலையில், பழனியம்மாள், அவரது இளைய மகன் செங்கப்பன் ஆகிய இருவரும் செந்தில்குமாரிடம் வாடகை கேட்க சென்று உள்ளனர். அப்போது, செந்தில் குமார், பாக்கியம், தனபாலன், சோபன் உள்ளிட்டோர் பழனி யம்மாளை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி உள்ளனர். இதில், மூச்சுத் திணறி கீழே விழுந்த பழனியம்மாளை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பழனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில், செந்தில்குமார், பாக்கியம், தனபாலன், சோபன் ஆகியோர் மீது சுந்தராபுரம் போலீஸார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

;