districts

img

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்க தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் தர்ணா

சேலம், ஜூலை 18- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் செவ்வாயன்று அரை நாள் தர்ணா போராட்டம் நடைபெற்றது.  பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும். 70 வயது அனைத்து ஓய்வூதியர்களுக்கும் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன் வாடி, வருவாய் கிராம உதவியா ளர்கள், ஊராட்சி செயலாளர் கள், வனத்துறை தொகுப்பு ஊதிய  ஊழியர்கள் உள்ளிட்ட ஓய்வூதி யர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதி யமாக ரூ.7,850 வழங்க வேண்டு மென தர்ணாவில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.  சேலம் நாட்டாண்மை கழக கட்டடம் முன்பு நடைபெற்ற தர்ணா  போராட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங் கத்தின் மாவட்டத் தலைவர் அ. நடராஜன் தலைமை ஏற்றார். இதில், மாவட்டச் செயலாளர் சி.ராஜ்குமார், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ், சுபாஷ் ஆகியோர் கோரிக்கை விளக்கி பேசினார்.

சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஆர். சுப்பிரமணியம் தர்ணா போராட் டத்தை நிறைவு செய்து வைத்தார்.  இதில், திரளானோர் பங்கேற்றனர். தருமபுரி  இதேபோன்று, தமிழ்நாடு அரசு  அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தருமபுரியில் நடைபெற்ற போராட்டத்திற்கு,  மாவட்டத் தலைவர் எஸ்.பழனிச்சாமி தலைமை ஏற்றார். இதில், மாவட்டச் செயலாளர் எம். பெருமாள் ஆகியோர் கோரிக் கைகளை விளக்கி பேசினர். போக்குவரத்து கழக ஓய்வுப்  பெற்றோர் சங்க மாநில இணைச் செயலாளர் கே.குப்புசாமி, மின் வாரிய ஓய்வுபெற்றோர் நல  அமைப்பின் மாவட்டத் தலைவர்  ஆர்.சுந்தரமூர்த்தி, பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலை வர் டி.பாஸ்கரன், ஜாக்டோ - ஜியோ  மாவட்ட நிதி காப்பாளர் கே.புக ழேந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட பொருளாளர் கே.கேசவன் நன்றி கூறினார்.  கோவை கோவை சிவானந்தா காலனி  பகுதியில் நடைபெற்ற தர்ணா  இயக்கத்திற்கு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.மதன் தலைமை  ஏற்றார். மாவட்ட துணைத்தலை வர் கே.பழனிச்சாமி வரவேற்றார். மாநில துணைத்தலைவர் பி.ராம மூர்த்தி துவக்கி வைத்து உரையாற் றினார். மாவட்ட செயலாளர் (பொ)  எஸ்.பாலகிருஷ்ணன், அரசு  ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர்  எஸ்.ஜெகநாதன் உள்ளிட் டோர் வாழ்த்தி உரையாற்றினர்.  மாநில துணைத்தலைவர் என். அரங்கநாதன் நிறைவு செய்து நிறை வுரையாற்றினார். மாவட்ட  பொருளாளர் பி.நடராஜன் நன்றி  கூறினார்.