திருப்பூர், அக். 21 - திருப்பூர் அருகே திருமுருகன் பூண் டியில் ஏராளமான சிற்பக்கூடங்கள் உள் ளன. இங்கு தயாரிக்கப்படும் சிலைகள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. குறிப் பாக, இலங்கை, அமெரிக்கா, மலே சியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடு களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்காக திருப்பூரிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஊத்துக்குளி மற்றும் காங்கேயம் பகுதிகளில் சிற்பங் கள் செய்வதற்கான கற்கள் வெட்டி எடுக் கப்பட்டு சிற்பக்கூடங்களுக்கு கொண்டு வரப்படுகின்றன. திருமுருகன்பூண்டியில் இருந்து பூலுவப்பட்டி செல்லும் ரிங்ரோட்டில் ஸ்ரீ திருமகள் சிற்பக்கலைக் கூடம் உள்ளது. சிற்பி சிவகுமார் (42) இதை நடத்தி வருகிறார். சிலைகள் செய்வதில் டாக் டர் பட்டம் பெற்ற இவரது தாத்தா சிற்பி ராமசுப்பு தொடங்கி இவர்களது குடும் பத்தார் கடந்த 30 ஆண்டுகளாக கற்க ளில் சிற்பங்களை செதுக்கி வருகின்ற னர். தற்போது சிவகுமார் விஸ்வரூபத் தில், ஆக்ரோஷமான 10 தலைகள் கொண்ட கல்கத்தா காளியம்மன் சிலையை தத்ரூபமாக செதுக்கியுள் ளார்.
இந்த சிலை வடித்தது குறித்து சிற்பி சிவகுமார் கூறியதாவது கர்நாடகா மாநி லம் பெங்களூரில் இருந்து 200 கிலோமீட் டர் தொலைவில் உள்ள ஹாசன் மாவட் டம், சாந்திராம பகுதியை சேர்ந்த கோவில் நிர்வாகிகள் கல்கத்தா காளி சிலையை ஒரே கல்லில் செய்து தரு மாறு கேட்டனர். காங்கேயம் அருகே தென்னிலையில், ஊத்துக்குளி பகுதி யில் கிடைப்பது போன்ற தரமான கற்கள் கிடைப்பதாக தகவல் அறிந்து அங்கு சென்றோம். அங்கிருந்து 15 அடி உயரம், 10 அடி அகலம் மற்றும் 3 அடி கணம் உள்ள 15 டன் எடையுள்ள கருங்கல்லை லாரி மூலம் இங்கு கொண்டு வந் தோம். பின்னர் இதற்கான வேலைகளை எனது (சிவகுமார்) தலைமையில் பூதத் தான், எம்.செல்வம், பொம்மையன், கருப்பன், கணேசன், குமார் மற்றும் எஸ். செல்வம் ஆகியோர் கொண்ட சிற்பக்கு ழுவினர் செய்தோம். இந்த காளி சிலையை ஆதார பீடம் மற்றும் கமல பீடத்துடன் 12 அடி உயரம், 7 அடி அகலம், 2 அடி கணத்தில் 6 டன் எடையாக குறைத் தோம். காளி சிலை 10 தலைகளைக் கொண்டது. விஸ்வரூப ஆக்ரோஷத்து டன் நாக்கை வெளியே நீட்டியபடி காட்சி அளிக்கும் வகையில் உயிரோட்டமாக செதுக்கப்பட்டுள்ளது. 7 மாத அவகா சத்தில் 6 மாதத்தில் சிலையை செய்து முடித்துள்ளோம். அத்துடன் படத்தை பார்த்து தத்ரூபமாக செதுக்கியது எங்க ளுக்கு பெருமையாக உள்ளது. இவ் வாறு அவர் கூறினார். வரும் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கி ழமை காலை 10 மணிக்கு காளி சிலை பாதுகாப்பாகக் கொண்டு செல்லப் பட்டு பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதா கவும் சிற்பி சிவகுமார் தெரிவித்தார்.