districts

img

சமுதாய கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருக

சேலம், செப்.15- சேலம் காந்தி நகரில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் 45 ஆவது கோட்டம், காந்தி நகரில் பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்கு இருந்த சமுதாய கூடம், சத்துணவு அங்கன் வாடி மையத்திற்கான சமையல் கூடமாக மாவட்ட நிர்வாகம் மாற்றியது. அந்த சமுதாய கூடம் சாதாரன ஏழை, எளிய மக்க ளின் சுப நிகழ்ச்சிகளை நடத்த பெரிதும் உதவியது. தற்போது நிகழ்ச்சிகளை நடத்த கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் இந்த செயலை கண்டித்து மாதர், வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப் போது, மூன்று மாதத்திற்குள் பிரச்சனை சரி செய்து தரப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க கிழக்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் தலைமை வகித் தார். இதில், மாவட்ட செயலாளர் வி.பெரியாசமி, மாதர் சங்க  மாவட்ட தலைவர் ஆர்.வைரமணி, மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஞானசௌந்தரி, வாலிபர் சங்க நிர்வாகிகள் திவ்யா, கவின் ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.