கோவை, செப்.18- பெரியாரின் 144 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கோவையில் நடைபெற்ற கருஞ்சட்டை பேரணியில் திர ளானோர் கலந்து கொண்ட னர். தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்தநாள் சமூக நீதி நாளாக சனியன்று கடை பிடிக்கப்பட்டது. இதன்படி கோவை சிவா னந்தா காலனி பகுதியில் தந்தை பெரியார் திராவிட கழகம் மற்றும் பெரியார் உணர்வா ளர்கள் சார்பில் கருஞ்சட்டை பேரணி நடை பெற்றது. இந்தப் பேரணி தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராம கிருட்டிணன் தலைமை வகித்தார். இப்பேர ணியை மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், திராவிட தமிழர் கட்சி, தமி ழக வாழ்வுரிமை கட்சி, தமிழ்நாடு ஒடுக்கப் பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், மக்கள் அதி காரம், தமிழர் விடியல் கட்சி மற்றும் பெரியார் உணர்வாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.