தருமபுரி, ஏப்.12- பாஜக இஸ்லாமியர்களின் வீடு களை இடிக்கிறது; பாமக பட்டிய லின மக்களின் குடிசையை கொளுத் துகிறது. இதுதான் இவர்களின் கூட் டணி என தருமபுரியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்துள்ளார். தருமபுரி தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆத ரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் அரூர் ரவுண்டானா அருகே தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. சிபிஎம் ஒன் றியச் செயலாளர் பி.குமார் தலைமை வகித்தார். இதில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி சிறப்புரை யாற்றுகையில், ‘இந்தியா’ கூட்டணி தேர்தல் வந்தவுடன் அவசரமாக அறி வித்த கூட்டணி அல்ல. மக்களின் பிரச் சனைகளுக்காக, தெருவில் இறங்கி போராடும் கட்சிகள். அதனால் மற்ற கூட்டணியுடன் ‘இந்தியா’வை ஒப் பிட்டு பார்க்க முடியாது. மதச்சார்பின் மையை சிதைப்பது, சிறுபான்மை, பட்டியலின மக்கள் மீது தாக்குதல் போன்ற தேசத்தின் பிரச்சனைகளுக் காக இந்தியா கூட்டணி கட்சிகள் களத்தில் இறங்கி போராடுகிறது. தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமகவைச் சேர்ந்தவர்கள் நாடாளு மன்ற உறுப்பினராக இருந்துள்ள னர். ஒருமுறை அன்புமணி எம்.பி., யாகி, ஒன்றிய அமைச்சராக இருந் தும் தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கு எதையும் செய்யவில்லை. தோற்று போகிற குதிரையான பாஜக மீது பாமக பணத்தை கட்டி யுள்ளது. பாஜக கூட்டணி என்பது கட வுள் பாதி, மிருகம் பாதி. அதுமட்டு மின்றி அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் பத்திர ஊழல் பணத்துடன் கூட்டணி வைத்துள்ள னர். இன்னும் ஆழமாக பார்த்தால் தேர்தல் ஆணையத்தோடும் கூட் டணி வைத்துள்ளனர். இந்த கூட்டணி யோடு சேர்ந்துகொண்ட பாமக, “எங்களின் அடிப்படை கொள்கை களை விட்டுக்கொடுக்க மாட்டோம். சமரசமே கிடையாது” என்று கூறுகி றது. பாமக இட ஒதுக்கீடு கேட்டு போராடுகிறதே தவிர, சமூக நீதியில் உள்ள மற்ற அம்சமான நிலம் உரிமை கேட்டு போராடியதில்லை. இவர்கள் சமூகத்தில் நிலமற்றவர்கள் இல் லையா? இதுபோன்ற கோரிக்கை களை பாமக எழுப்பியது இல்லை. பாஜகவுக்கும், பாமகவுக்கும் சில கருத்து வேறுபாடுகள்தான். மற்றப் படி பல கொள்கைகள் ஒத்துபோ கிறது. இதில், ஒருவர் வடதுருவம் என் றால், மற்றொருவர் தென்துருவம். அப்படி இருக்கையில் பாமக தன் கொள்கையை சமரசம் செய்துகொண்டு பாஜகவுடன் கூட்டு வைத்துள்ளது. சர்வதேச தொழிலாளர் நல நிறுவனம் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளது. இந்தியாவில் 85 சதவி கித இளைஞர்களுக்கு வேலை இல்லை. இதில் உயர்கல்வி பயன்ற வர்களும் உள்ளனர். வேலை வாய்ப்பே இல்லாத இட ஒதுக்கீடு மட்டும் பேசுவது உங்கள் கட்சியி லேயே (பாமக) நம்புவார்களா என்று தெரியவில்லை. மோடி அரசு யாரை ஏமாற்ற இந்த கூட்டணி என்ற கேள் வியை இரண்டு மருத்துவர்களிடம் கேட்க வேண்டியுள்ளது.
பாமக தலைவர் அன்புமணி பேசு கையில், “பெண்களுக்கு ஒரு பிரச் சனை என்றால் சௌமியா (தருமபுரி பாமக வேட்பாளர்) பொங்கி பத்தர காளியாக மாறிவிடுவார்” என பேசி யுள்ளார். எனக்கு தெரிந்து தமிழ்நாடு முழுவதும் பெண்கள் பிரச்சனைக்கு எங்கும் குரல் கொடுக்கவில்லை மணிப் பூர் பெண்கள் பழங்குடி மக்கள் பாதிக்கப்படும் போது குரல் கொடுக் கவில்லை திண்டுக்கல் மாவட்டத்தில் பாஜக மாவட்டச் செயலாளர் சத்து ணவு பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தற் போதுதான் அவரை கைது செய்துள் ளனர். அதுவரை அங்கு பாமக வேட் பாளர் திலகபாமவுக்கு வாக்கு சேக ரித்து வந்தார். பாஜக என்பது பாலி யல் ஜனதா கட்சியா என அனைவ ரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தியாவிலுள்ள மொத்த குற்ற வாளிகளும் பாஜகவில்தான் இருக் கின்றனர். இப்படிப்பட்ட பாலியல் ஜனதா கட்சியிடம், பாமக கூட்டணி வைத்திருக்கிறது. பொதுவாக, திருமண வரன் தேடும் போது பொருத்தம் பார்ப்பார்கள். பாமகவுக்கும், பாஜகவுக்கும் 3 பொருத்தங்கள் உள்ளன. பாமக செய்வது சாதிய அரசியல். பாஜக செய்வது மதவாத அரசியல்; தலித் இளைஞர்களுக்கு எதிராக நாடக காதல் உருவாக்கியது பாமக. இஸ் லாமியர் இளைஞர்களுக்கு எதிராக லவ் ஜிகாத் உருவாக்கியது பாஜக; வடமாநிலங்களில் இஸ்லாமியர் வீடு களை புல்டோசர் வைத்து பாஜக இடிக்கிறது. தருமபுரி இளவரசன் - திவ்யா காதல் பிரச்சனையில் 3 கிரா மத்தையே தீ வைத்து கொளுத்தி னர். எனவே, சந்தர்ப்பவாத கூட்டணி யான பாமக – பாஜகவை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். பாஜகவின் மக்கள் விரோத செயலுக்கு அதிமுக துணை போனது. நானும் விவசாயி என கூறும் எடப்பாடி பழனிச்சாமி, தில்லியில் விவசாயிகள் மீது தாக்கு தல் நடத்தியபோது ஒரு கேள்விகூட கேட்டதுண்டா! சிஏஏ சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர் தான் எடப் பாடி. தமிழக மண்ணில் தாமரைக்கு (பாஜகவிற்கு) இடம் கிடையாது. பாஜக, அதிமுக கட்சிகளின் கூட்ட ணிக்கு சாவுமணி அடிக்க வேண்டும். இவ்வாறு உ.வாசுகி தெரிவித்தார். இக்கூட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தி.வ.தனு சன், ஆர்.மல்லிகா, மாவட்டக்குழு உறுப்பினர் சி.வஞ்சி ஆகியோர் முன் னிலை வகித்தனர். திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் பி.பழனியப் பன், ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணை அமைப்பாளர் சா.ராஜேந்தி ரன், பேரூராட்சி துணைத்தலைவர் சூர்யா தனபால், எல்பிஎப் தலைவர் ஜே.பழனி, சிபிஎம் மாவட்டச் செயலா ளர் ஏ.குமார், விசிக மாவட்டச் செய லாளர் சி.கே.சாக்கன்சர்மா, சிபிஐ மாவட்ட துணைச்செயலாளர் காசி. தமிழ்குமரன், ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் ராஜ்குமார், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.மாரிமுத்து, எஸ்.கிரை ஸாமேரி, வே.விசுவநாதன், மூத்த தலைவர் பி.இளம்பரிதி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.தங்கராசு நன்றி கூறினார்.