சேலம், ஜூலை 13- ஆத்தூர் அருகே சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை யால் 500க்கும் மேற்பட்ட வாழை, பாக்கு மற்றும் தென்னை மரங்கள் சாய்ந்தன. இதற்கு அரசு, உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் சேலம் மாவட்டம், ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. தாண்டவராயபுரம், சொக்கநாதபுரம் ஆகிய பகுதி களில் பயிரிடப்பட்டிருந்த வாழை, பாக்கு மற்றும் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. தாண்டவராயபுரம் பகுதியில் சந்திரன் என்பவருக்கு சொந்தமான நான்கு ஏக்கர் விவசாய நிலத்தில் 3000க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை பராமரித்து வருகிறார். மேலும் ஊடுபயிராக தேன் வாழை, செவ்வாழை ஆகியவற்றை பராமரித்து வருகிறார். அப்பகுதியில் வீசிய சூறாவளி காற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள், 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தது. மேலும் அதே பகுதியைச் சார்ந்த சுப்பிரமணி என்பவர் விவசாயத் தோட் டத்தில் 50க்கும் மேற்பட்ட பாக்கு மற்றும் நூற்றுக்கும் மேற் பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமாகின. மேலும், இந்த பகுதியில் 10க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் முறிந்து கீழே விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சூறாவளி காற்றில் சொக்கநாதபுரம் தாண்டவராயபுரம் உள்ளிட்ட பகுதி களில் 800-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் 200க்கும் மேற் பட்ட பாக்கு மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். தமிழக அரசு, மாவட்ட நிர்வாகமும், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.