திருப்பூர், பிப்.18- திருப்பூரை அடுத்த நல்லகாளிபாளையம் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவர்கள் சமூக வரைபடம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொங்கலூர் வட்டாரம், உகாயனூர் ஊராட்சியில் உள்ள நல்லகாளிபாளையம் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாண வர்கள் சமூக வரைபடம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி னர்.கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவர் இ.ராஜ்குமார் தலைமையில் 10 பேர் கொண்ட குழு கிராமப்புற வேளாண் அனுபவப் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்நி கழ்ச்சியை நடத்தியது. சமூக வரைபடமானது, அவ்வூர் மக்களையே ஈடுபடுத்தி அந்த கிராம அமைப்பு முறையை அவர்களே அறிந்து கொள்ள உதவும் கருவி ஆகும். இதன் மூலம் கிராம அமைப்பு முறையை அம்மக்களே புரிந்து கொண்டு தங்கள் கிராமத்திற்கு மேலும் என்னென்ன வசதி கள் தேவை என்பதை அறிந்து கொண்டனர். இதன் மூலம் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறு வேளாண் மாணவர் குழு சார்பில் கிராம மக்களுக்கு அறிவு றுத்தப்பட்டது.