districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பெண் காவலருக்கு  பாலியல் வன்கொடுமை காவல் உதவி ஆய்வாளர் கைது

உதகை, செப்.8- மஞ்சூர் பகுதியில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண் காவலரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப் பட்டார். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள மஞ்சூர்  காவல்  நிலையத்தில் சிறப்பு  உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சரவணன். இவர் மேல் குன்னூர் காவல் நிலை யத்தில் பணிபுரியும் பெண் காவலருடன் பல மாதங்களாக திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்துள்ளார். மேலும், திருமணம் செய்து கொள்வதாக பெண் காவலரிடம் உறுதி கூறியுள்ளார். இதனிடையே, பலமுறை திருமணம் செய்து கொள்ள பெண் காவலர் கேட்டுக்கொண்டும், சரவணன் தட்டிக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் மற்றும் மேற்கு மண்டல  காவல் துறை தலைவர் அலுவலகத்தில் பெண் காவலர் புகா ரளித்தார்.  அப்புகாரின் அடிப்படையில் சரவணன் மீது  வழக்கு தொடர்ந்து மேல் குன்னூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், வியாழனன்று காவல்  சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணனை காவல் துறையினர் கைது செய்தனர்.

சுய தொழில் தொடங்க வேளாண் பட்டதாரிகளுக்கு அழைப்பு

ஈரோடு, செப். 8- வேளாண் பட்டதாரிகள், அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் துவங்க பட்டதாரி ஒருவருக்கு  அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வீதம் 6 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம் வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளதாவது, ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மைத் துறை மூலம் ‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்” செயல்படுத்திட நடப்பு  நிதியாண்டில் 44 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப் பட்டுள்ளன. இத்திட்டத்தின் ஒருபகுதியாக,தேர்வு செய்யப்பட்டுள்ள 44 கிராம பஞ்சாயத்துகளைச் சேர்ந்த வேளாண் பட்ட தாரிகள், அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில்  துவங்க பட்டதாரி ஒருவருக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வீதம் 6 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் பயனாளிகள் குறைந்தபட்சம் இளநிலை வேளாண்மை, தோட்டக்கலை அல்லது வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு இருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் துறையில் பணி யாற்றுபவராக இருக்கக் கூடாது. கணிணி மற்றும் இதர வேளாண் செயலிகளில் பணியாற்றத் தெரிந்தவராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு பட்டதாரி மட்டுமே  திட்டத்தில் பயன்பெற முடியும். 21 முதல் 40 வயதுடை யவர்கள் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். தொழில் முனைவோராக விருப்பமுள்ள வேளாண் பட்ட தாரிகள் உரிய விண்ணப்பத்துடன் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு  மதிப்பெண் சான்றிதழ், பட்டதாரி சான்றிதழ், ஆதார் அட்டை,  குடும்ப அட்டை, வங்கிகணக்கு புத்தகத்தின் முதல் பக்க  நகல்,வங்கியிடமிருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் உள்ளிட்ட ஆவணங்களுடன், விரிவான திட்ட அறிக்கை யினை வருகிற செப்டம்பர் 20-ஆம் தேதிக்குள் திண்டல் வித்யா  நகரிலுள்ள ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்  அலுவலகத்தில் சமர்பிக்கலாமென தெரிவித்துள்ளார்.

தனிநபரின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்

திருப்பூர், செப். 8 -  திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கோடாங்கி பாளையம் பகுதியில் எழில்  ப்ளூ மெட்டல் என்ற கல்குவாரி நிறுவனத் தை மூடக்கோரி விஜயகுமார் என்ற விவ சாயி தனி நபராக பத்தாவது நாள் உண்ணா  விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந் நிலையில் புதனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதி பேச்சு  வார்த்தை உடன்பாடு எட்டப்படாமல் விவ சாயிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட போவதாக அறி வித்தனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட  நிர்வாகம் அமைத்த கனிமவளத்  துறை மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட  அரசு அனைத்து துறையிரின் விசார ணையில் உள்ள விபரங்களை சுட்டிக்காட்டி  தற்காலிகமாக குவாரியை நடத்தக் கூடாது  என்று ஆணை பிறப்பித்தனர். அதனை விஜய குமாரிடம் பல்லடம் வட்டாட்சியர் நந்த கோபால் கொடுத்த உறுதியை பெற்றுக் கொண்டு, விவசாயிகள் உண்ணா விரதத்தை தற்போது கைவிட உள்ளதாக  அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் விஜயகுமாரிடம் பழச்சாறு வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

அடுத்தடுத்து பூட்டை உடைத்து திருட்டு

நாமக்கல், செப். 8 -  பாத்திரக்கடை, இரும் புக்கடை என அடுத்தடுத்து பூட்டை உடைத்து திருடிச் சென்ற சம்பவம் நாமக் கல்லில் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது. திருச்செங்கோடு  தெற்கு  ரத வீதியில் வியாழனன்று அதிகாலை சிவகுமார் மெட்டல் மார்ட் என்ற பாத் திர கடையின் பூட்டை உடைத்து 7 லட்சம் ரூபாய்  பணம் திருடப்பட்டுள்ளது.  இதே போல் சங்ககிரி சாலையில் உள்ள நியூ  தமிழ்நாடு ஸ்டீல் கார்ப்ப ரேஷன் என்ற இரும்பு கடை யில் லாவகமாக ஷட்டரை இழுத்து உள்ளே நுழைந்து ஒரு லட்ச ரூபாய் பணம் ஒன் றரை சவரன் தங்க அரணா  கொடியை திருடிச்சென் றுள்ளனர்.  அடுத்தடுத்து திருடி கை வரிசை காட்டிய திருடர் களைப் பிடிக்க திருச்செங் கோடு நகர போலீசார் விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர். மக்கள் நடமாட்டம் அதிக முள்ள பகுதிகளில் அதிகா லையில்  இரண்டு கடைகளில்  அடுத்தடுத்து நடந்த திருட்டு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கோவை குறிச்சி குளத்திலும் படகு சவாரி

கோவை, செப்.8- வாலாங்குளத்தை தொடர்ந்து குறிச்சி குளத்திலும் விரைவில் படகு  சவாரி அமைக்கப்படும் என கோவை  மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் சீர மைத்தல், குடிநீர், பாதாள சாக்கடை,  சூரிய மின்சக்தி, எல்இடி விளக்குகள், வாகனங்கள் நிறுத்தும் இடம், மாதிரி  சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட  பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்  கீழ் புனரமைக்கப்பட்டு நவீனப் படுத்தப்பட்ட உக்கடம் பெரியகுளம்,  வாலாங்குளத்தில் படகு சவாரி தொடங் கப்பட்டுள்ளது. இதனிடையே கோவை  குறிச்சி குளத்திலும் படகு சவாரி  தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.52.16 கோடி மதிப்பீட்டில் குறிச்சி குளம் சீர மைக்கும் பணிகள் நடைபெற்று வரு கிறது. குறிச்சி குளம் 334.92 ஏக்கர் பரப் பளவு கொண்டது. குளத்தின் கொள் ளளவு 50 மில்லியன் கன அடி ஆகும்.  இக்குளத்தின் மொத்த நீர்பிடிப்புப் பகுதி 12.30 சதுர கிலோ மீட்டர் கொண் டதாகும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  மதிவண்டி பாதை, நடைபயிற்சி பாதை,  குளக்கரையில் 4 இடங்களில் அலங்கார  வளைவுகள், பாதசாரிகள் உண்டு மகிழ  47 சிற்றுண்டிகள் மற்றும் பல வகையான  சிறு அங்காடிகள், கோவை - பொள்ளாச்சி சாலையின் மேற்புறம் நவீன வகையான வாகன நிறுத்துமிடம்,  இளைஞர்களுக்கான உடற்பயிற்சி கூடங்கள், குளத்தைச் சுற்றி 5.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு வண்ண மயமான அலங்கார விளக்குகள், 4 இடங்களில் சூரிய ஒளி மின்சார தகடுகள், 36 இடங் களில் காற்றாலை கோபுரங்கள், 23  இடங்களில் பார்வையாளர் மாடங்கள்,  2 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள் ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட வுள்ளது. இந்நிலையில், வாலாங்குளம் மற்றும் பெரியகுளத்தில் உள்ளது  போன்று, குறிச்சி குளத்திலும் படகு  சவாரி திட்டம் செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறு கையில், கோவை வாலாங்குளம் மற்றும் பெரியகுளத்தை காட்டிலும் குறிச்சி குளத்தின் பரப்பளவு பெரிய தாக காணப்படுகிறது. குறிச்சி குளத்தில்  படகு இல்லம் அமைப்பது குறித்து விரைவில் தொழில்நுட்ப வல்லுநர் குழு  ஆய்வு மேற்கொள்ள உள்ளது. அதன்  பின்னர் விரைவாக படகு இல்லம்  அமைத்து படகு சவாரி தொடங்கப் படும். குறிச்சி குளத்தில் ஆண்டுக்கு ஒரு  முறை படகு போட்டியும் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது, என்றனர்.

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூரில் இன்று சைக்கிள் போட்டி

திருப்பூர், செப்.8- மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளை  முன்னிட்டு நடக்கும் சைக்கிள் போட்டியில் பங்கேற்க  ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள் ளது. திருப்பூர் மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளை முன் னிட்டு நடக்கும் சைக்கிள் போட்டிகள் குறித்து மாவட்ட  நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப் பூர் மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில், முன்னாள் முதல்வர்  அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று 9 ஆம்  தேதி சைக்கிள் போட்டி நடத்தப்படுகிறது. 13, 15 மற்றும் 17  வயது ஆகிய பிரிவுகளில் போட்டி நடக்கிறது.சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் நம்  நாட்டில் தயாரான சாதாரண சைக்கிள் மட்டுமே பயன்படுத்த  வேண்டும். ஆர்வமுள்ளவர் பள்ளி தலைமை ஆசிரியரிடம்  வயது சான்றிதழ் பெற்று வர வேண்டும். போட்டி  துவங்குமிடத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்து  பெயர் பதிவு செய்ய வேண்டும். முதல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய். இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசு முறையே 3  ஆயிரம் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பள்ளி தலைமை ஆசிரியர்கள் தகுதியான மாணவர்களை தேர்வு  செய்து அதற்கான ஆவணங்களுடன் போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உடுமலை சுற்றுப்பகுதிகளில் பரவலாக மழை

திருப்பூர், செப்.8- உடுமலை சுற்றுப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவ லாக மழை பெய்து வருகிறது. இதனால் விளைநிலங்களில் உழவு செய்வதற்கும், மானாவாரி சாகுபடி விதைப்புக்கு தேவையான ஈரப்பதம் உள்ளது.இதையடுத்து சாகுபடி பணி களை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.  குறிப்பாக மானாவாரியான சோளம், மக்காச்சோளம் உள் ளிட்ட பயிறுக்கான விதைப்பு மற்றும் நடவு பணிகள் தீவிரம டைந்துள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தற் போது விதைப்பு செய்வதால் பயிரின் வளர்ச்சி தருணத்தில்  வடகிழக்கு பருவமழை கைகொடுக்கும் வாய்ப்புள்ளது. கால் நடைகளின் பசுந்தீவனம் மற்றும் உலர் தீவன தேவைக்காக மானாவாரியாக சோளம் விதைப்பு செய்கிறோம் என்றனர். தற் போது நிலவும் வானிலையால் தக்காளி செடிகளில், இலைக் கோட்டு பூச்சி தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே 5 சத வீத வேப்பங்கொட்டை கரைசலை, மழையில்லா நேரங்களில்  தெளிக்க வேண்டும். குளிர் சீதோஷ்ணம் உட்பட காரணங்க ளால் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் ஏற்பட  வாய்ப்புள்ளது. எனவே அருகில் உள்ள கால்நடை மருத்து வமனையில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும் என வேளாண் பல்கலைக்கழகத்தின் கால நிலை ஆராய்ச்சி மையம் வானிலை சார்ந்த வேளாண் அறிக் கையில் தெரிவித்துள்ளது.

அறிவியல் கண்காட்சி

திருப்பூர், செப்.8- பல்லடம் அருகே உள்ள  அவிநாசிபாளையம் ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூ ரியில் மூன்று நாள் அறிவியல்  கண்காட்சி நடைபெற உள் ளது.இதற்கான துவக்க விழா நடைபெற்றது.  திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவ,மாணவிகள் சுமார்  1500 பேர் கலந்து கொண்ட னர். கண்காட்சியில் 200 அறி வியல் படைப்புகள் காட்சிக் காக வைக்கப்பட்டு இருந் தது.

மது போதையில் கார் ஓட்டிய ஒன்றிய ஆணையர்: வழக்குப்பதிவு செய்யாமல் காவல்துறை அலட்சியம்

அவிநாசி, செப்.8- மதுபோதையில் காரை ஓட்டி வந்த அவிநாசி ஒன்றிய ஆணையாளர் மீது  வழக்குப்பதிவு செய்யாததால் பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் அதிருப்திய டைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையாளராக பணியாற்றி வருபவர் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த மனோகரன் (54). இவர் செவ்வா யன்று இரவு அலுவலக பணி முடிந்து  தனது காரில்  சத்தியமங்கலம் சென்று கொண் டிருந்தார். சேவூர் அருகே வரும் போது காரை   தாறுமாறாக ஓட்டி வந்துள்ளார். இதைப்  பார்த்த பொதுமக்கள்,  காரை விரட்டி பிடித்த னர். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த போலீ சார் விசாரணை மேற்கொண்டதில், அவர்  ஒன்றிய ஆணையாளர் என்பதும், மது போதையில் காரை ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது   வழக்குப்பதிவு செய்யாமல், காரையும்  விடுவித்தனர். இதனால் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.  இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறிய தாவது; சாதாரண பொதுமக்கள் மது அருந்தி  வாகனம் ஓட்டி வந்தால், வாகனத்தை பிடித்து  வைத்து வழக்கு பதிவு செய்கிறார்கள். ஆனால் காரை ஓட்டி வந்தவர் அரசு அலுவலர்  என்பதால் அவர் மீது வழக்கும் பதிவு செய்யா மல் போலீசார் விடுவித்துள்ளனர். பொது மக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய அரசு அலுவலர்களே இது போன்று சட்டத்தை மீறும் போதும், போலீ சார் கட்டாயமாக உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும். இது போல அரசு அலுவலகங்க ளில் உள்ள அலுவலர்களை அடையாளம் கண்டு துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

ஊராட்சி மன்ற துணை தலைவரின் வாகனத்திற்கு தீ வைப்பு

உதகை, செப்.8- திமுகவை சேர்ந்த மேலுார் ஊராட்சி மன்ற துணைத் தலை வரின் வாகனத்திற்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் திமுகவை சேர்ந்த மேலுார் ஊராட்சி  மன்ற துணைத் தலைவர் நாகராஜ். இவருடைய வாகனத்தை டிக்லேண்ட் பகுதியில் நிறுத்தி வைத்து சென்றுள்ளார். இவரு டைய வாகனம் இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத நபர் களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. ஆள் நடமாட்டம் குறை வான பகுதி என்பதால் உடனடியாக குற்றவாளிகளை அடை யாளம் காண முடியவில்லை இதனைத்தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து கொலக் கொம்பை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 

தரமற்ற உணவு பொருட்கள் பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை

தருமபுரி, செப்.8- பாலக்கோட்டில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வின் போது தரமற்ற உணவுப்பொருட்களை கண்டறிந்து பறி முதல் செய்தனர்.  தருமபுரி மாவட்ட உணவு பாது காப்பு துறை நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையிலான குழுவினர்  பாலக்கோடு நகரில் உள்ள உணவகங் களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன் றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்த கோபால் உள்ளிட்டோர் பாலக்கோடு பேரூந்து நிலையம், எம்.ஜி.ரோடு, தரும புரி ரோடு, பைபாஸ் சாலை, தக்காளி  மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள  உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண் டனர். அசைவ உணவகங்களில் ஆய்வு செய்ததில் இரு உணவகங்களிலிருந்து சுகாதாரமற்ற நிலையில் வைத்திருந்த 10 கிலோ பரோட்டா மாவினை  பறி முதல் செய்து அழித்தனர். மேலும், திறந்த நிலையில் வைக்கப் பட்டிருந்த 8 கிலோ மைதா மாவு, செயற்கை நிறமேற்றிய மசாலா தடவி   வைத்திருந்த 4 கிலோ  இறைச்சியினை பறிமுதல் செய்து அழித்தனர். சில உண வகங்களில் நெகிழிகள், செயற்கை நிற மேற்றி பவுடர்களை பறிமுதல் செய்து  அழித்தனர். உணவகங்களில் இறைச்சி புதியதாகவும், முறையாக பராமரித்து உணவு தயாரிக்க வேண்டும். உபயோ கிக்கும் மூலப்பொருள்கள் தரமானதாக வும், பயன்படுத்தும் நீர் மற்றும் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டதாக இருக்க வேண் டும். மழைக்காலம் என்பதால் பருக வெந்நீர் தரவேண்டுமென அறிவுறுத்தி னார். மேலும், சமையல் எண்ணெய் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்ததாகவும் செயற்கை நிறமேற்றிகள் அறவே தவிர்த்திடவும் பார்வையிட்டு ஆய்வு  செய்து விழிப்புணர்வு மேற்கொண்ட னர்.   நான்கு உணவகங்களுக்கு தலா  ஆயிரம் ரூபாய் உடனடி அபராதமும்,  இரு உணவகங்களுக்கு ஏழு தினங்க ளுக்குள் மேம்பாடு செய்யவிடில் உரி மம் ரத்து செய்யப்படும் என எச்ச ரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. உணவகங்கள் உணவு பாதுகாப்பு விதி களை விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அனைத்து  உணவு சார்ந்த வணிகர்கள், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றுருத்தலுடன், புதுப்பித்து  வணிகம் மேற்கொள்ள விழிப்புணர்வு செய்தனர். இது போன்ற ஆய்வுகள் மாவட்டம் முழுவதும் நடைபெறும் என  மாவட்ட நியமன அலுவலர் பானு சுஜாதா தெரிவித்தார்.

90 சதவிகிதம் தென்மேற்கு பருவமழை கோவை வேளாண் ஆய்வு மையம் தகவல்

கோவை, செப்.8- தமிழகத்தில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை வழக் கத்தைக்காட்டிலும் 90 சதவிகிதம் அதிகம் மழை பெய்துள்ள தாக கோவை வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள் ளது. கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தின் பல மாவட் டங்களில் தென்மேற்கு பருவமழை கடந்த, ஜூன் மாதம் துவங் கியது. இம்மழை இம்மாதம் இறுதிவரை நீடிக்கும். கடந்த செ.6 ஆம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங் களில் சராசரி மழையை விட அதிக அளவு பெய்துள்ளது. தற் போது வரை, 90 சதவிகிதம் அதிக மழை பெய்துள்ளது.  அதிக பட்சமாக, தேனி மாவட்டத்தில், 271 சதவிகிதம் மழை பெய் துள்ளது. கோவை மாவட்டத்தில் 19 சதவிகிதம் அதிக மழை  பெய்துள்ளது.  சராசரி மழையளவு 230 மில்லி மீட்டர் இருக் கும். இந்தாண்டு, தற்போது வரை 438 மி.மீ., பதிவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில், நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள் ளது. பயிர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, மழைநீர் வடிகால்  அமைத்து, விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்காமல்  விவசாயிகள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

கோவை புறநகர் பகுதியில் சாரல் மழை

கோவை, செப்.8-  கேரள மாநிலத்தை யொட்டிய எட்டிமடை சுற்று வட்டாரத்தில் காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை  பெய்து வருவதால் குளிர்ச்சி யான சூழல் நிலவி வருகிறது. தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற் சியால் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டிருந் தது. இந்நிலையில், கோவை புறநகர் பகுதிகளான வாளை யார், நவக்கரை, எட்டிமடை,  க.க.சாவடி, திருமலையாம் பாளையம், மதுக்கரை உள் ளிட்ட பகுதிகளில் கடந்த 2  தினங்களாக விட்டு விட்டு  சாரல் மழை பெய்து வருகி றது.



 

 

;