திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை உதவி பொறியாளர் சந்தோஷ்குமாரை தற்கொலைக்கு தூண்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் தருமபுரி பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வட்ட தலைவர் குணசேகரன், முன்னாள் மாவட்ட தலைவர் ருத்ரையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.