ஈரோடு, பிப்.23- சாதனையாளர்களுக்கு சிறு பான்மை மக்கள் நலக்குழுவின் சார் பில், ஈரோட்டில் பாராட்டு விழா நடை பெற்றது சாதனையாளர்கள், சமூக ஆர்வலர் கள் மற்றும் மாணவர்களுக்கு தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வின் சார்பில் ஈரோடு மாவட்டம், எம்ஐஎஸ் அரங்கில் ஞாயிறன்று பாராட்டு விழா நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாநில உத வித்தலைவர் ப.மாரிமுத்து தலைமை வகித்தார். மாநில உதவிச்செயலாளர் கே.எஸ்.இஸாரத்தலி வரவேற்றார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் சிறப்புரையாற்றி, சாதனையாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கேடயங்கள் மற்றும் பரிசு களை வழங்கினார். ஈகேஎம் அப்துல் கனி மதரசா இஸ்லாமிய ஆரம்ப மற் றும் உயர்நிலைப்பள்ளியின் தாளாளர் முகம்மது தாஜ் முஹையித்தீன் கனி வாழ்நாள் சாதனையாளர் விருது பெற் றார். என்.முஹம்மது ஹனிபா மற்றும் ஏ.முகமது உதுமான் ஆகிய தலைமை ஆசிரியர்களுக்கும் விருது வழங்கப்பட் டது. மூசா ராஜா ஜுனைதி நல்லாசிரியர் விருது பெற்றார். செம்மலர் மகளிர் சுய உதவிக்குழுவினர் மணிமேகலை விருது பெற்றனர். காசிபாளையம் முன் னாள் பேரூராட்சியின் தலைவர் கே. துரைராஜ், முத்தவல்லி கேஏஎஸ்கே.உசேன்அலி, கருடா ஹோம்ஸ் எம்.ரவிச் சந்திரன், நுகர்வோர் பாதுகாப்பு மைய முன்னாள் செயலாளர் எம்.பாலசுப் பிரமணியன், அல்அமீன் சங்க கெளரவ செயலாளர் எம்.எச்.அப்துல்சத்தார், தொடர் தொடர்புத்துறை சி.பரமசிவம், பன்னூல் ஆசிரியர் கு.ஜமால் முகமது, ஈரோடு ஏஜென்சீஸ் இர்ஷாத் அகமது, தென்னக ரயில்வே சி.முருகேசன், வட் டாட்சியர் க.ராஜ்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிறைவாக எம்.ஏ. முகமது நாசர் அலி நன்றி கூறினார்.