சேலம், டிச.19- திருநெல்வேலியில் தனியார் பள்ளியின் கழிவறை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாண வர்கள் உயிரிழந்த சம்பவம் எதி ரொலியாக, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய கண்காணிப்பு அலு வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தனி யார் பள்ளியின் கழிவறை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாண வர்கள் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறிந்த முதற்கட்ட விசாரணையில் சரியான அடித்த ளம் இல்லாமல் சுற்றுச்சுவர் கட்டப் பட்டதால் இந்த விபத்து நடந்தது தெரியவந்தது. இதையடுத்து தமி ழகம் முழுவதும் உள்ள பள்ளிக ளின் கட்டிடங்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதற் காக 38 மாவட்டங்களுக்கு பள்ளிக் கல்வித்துறையின் இணை இயக்குநர் நிலையிலான அதிகாரி கள் 19 பேர் கண்காணிப்பு அலுவ லர்களாக நியமிக்கப்பட்டுள் ளனர். அதன்படி சென்னை - திரு வள்ளூர் மாவட்டங்களுக்கு ஒருங் கிணைந்த பள்ளிக்கல்வி இணை இயக்குநர் உமா, காஞ்சிபுரம் – செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பணியாளர் தொகுதி இணை இயக்குநர் நரேஷ், வேலூர் – ராணிப்பேட்டை – திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு தொடக்கக் கல்வி இணை இயக்குநர் சசி கலா, திருநெல்வேலி – தென்காசி மாவட்டங்களுக்கு கள்ளர் சீர மைப்பு இணை இயக்குநர் செல்வ ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள் ளனர். இதேபோல், கிருஷ்ணகிரி – தருமபுரி மாவட்டங்களுக்கு டிஆர்பி கூடுதல் உறுப்பினர் சுகன்யா, திருவண்ணாமலை – விழுப்புரம் மாவட்டங்களுக்கு பாடத்திட்ட இணை இயக்குநர் ஸ்ரீதேவி, சேலம் – கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு பள்ளி சாரா மற் றும் வயது வந்தோர் கல்வி இயக்க இணை இயக்குநர் அமுதவல்லி, கடலூர் – நாகப்பட்டினம் – மயி லாடுதுறை மாவட்டங்களுக்கு இணை இயக்குநர் பாஸ்கர சேது பதி, அரியலூர் – பெரம்பலூர் மாவட்டங்களுக்கு இடைநிலை இணை இயக்குநர் செல்வகுமார், திருச்சி – கரூர் மாவட்டங்களுக்கு டிஆர்பி கூடுதல் உறுப்பினர் பொன்னையா ஆகியோர் நியமிக் கப்பட்டுள்ளனர்.
மேலும், நாமக் கல் – ஈரோடு மாவட்டங்களுக்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்றி நிறுவன இணை இயக்குநர் குமார், நீலகிரி – கோவை மாவட்டங்களுக்கு தேர் வுகள் இயக்கம் இணை இயக்குநர் குமார், திருவாரூர் – தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு நிர்வாக இணை இயக்குநர் ராஜேந்தி ரன், தூத்துக்குடிக்கு மெட்ரிக் பள் ளிகள் இணை இயக்குநர் ஆனந்தி, புதுக்கோட்டை – சிவகங்கை மாவட் டங்களுக்கு இணை இயக்குநர் வாசு ஆகியோர் நியமிக்கப்பட் டுள்ளனர். இதேபோல், மதுரை – ராமநா தபுரம் மாவட்டங்களுக்கு இடைநி லைக் கல்வி இணை இயக்குநர் கோபிதாஸ், திருப்பூர் – திண்டுக் கல் மாவட்டங்களுக்கு தொழிற் கல்வி இணை இயக்குநர் ஜெயக குமார், கன்னியாகுமரிக்கு மேல் நிலை கல்வி இணை இயக்குநர் ராமசாமி, விருதுநகர் – தேனி மாவட்டங்களுக்கு உதவிபெறும் பள்ளிகள் இணை இயக்குநர் சாந்தி ஆகியோர் நியமிக்கப்பட் டுள்ளனர். இந்த கண்காணிப்பு அலுவலர்கள் சம்பந்தபட்ட பகுதி கயில் உள்ள வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை மற்றும் நக ராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைக ளின் அதிகாரிகளுடன் இணைந்து பள்ளிகளில் ஆய்வு செய்வார்கள். இதில், பழுதடைந்த, பாதுகாப் பற்ற நிலையில் உள்ள கட்டிடங் கள் உடனடியாக இடித்து அகற்றப் படும் என பள்ளிக்கல்வித்றை அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.