districts

img

டாஸ்மாக் நிர்வாகத்தின் தொழிற்சங்க விரோத நடவடிக்கை -சிஐடியு ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜூலை 21- டாஸ்மாக் நிர்வாகத்தின் தொழிலாளர், தொழிற்சங்க விரோத நடவடிக்கையைக் கண்டித்து சிஐடியு ஈரோடு மாவட்ட  டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் மாவட்ட மேலாளர் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தொழிற்தகராறு சட்டப்படி தொழிலாளர் அலுவலர் முன்  தாவா நிலுவையில் உள்ள நிலையில் பணியிட மாற்றம் செய் யப்பட்டுள்ளது. சிஐடியு சங்க நிர்வாகிகளை குறிவைத்து திட்ட மிட்டு பழிவாங்கப்படுவது ஆகியவற்றைக் கண்டித்தும், சட்ட  விரோத மதுக்கூடம் நடத்துபவர்களின் அராஜகம், ஆளுங் கட்சி தொழிற்சங்கத்தின் அத்துமீறல், இதன் காரணமாக பார பட்சமான நடவடிக்கைகள், பணியிட மாறுதல்கள், கடைக ளில் கட்டாய வசூல் ஆகியவற்றிற்கு எதிராகவும், பாரபட்ச மான பணியிட மாறுதல்களையும், பழிவாங்கல் உத்தரவுக ளையும் ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோடு மாவட்ட டாஸ்மாக்  ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் மாவட்ட மேலாளர் அலுவல கம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் என்.முரு கையா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியன் சிறப்புரையாற்றினர். சம் மேளன துணை தலைவர் பொன்.பாரதி, சங்க பொருளாளர் கே.ரவிச்சந்திரன், துணை பொது செயலாளர் வி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். முடிவில் பொது செயலாளர் வி.பாண்டியன் நன்றி  கூறினார்.