districts

அதிமுக எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

அதிமுக எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கோவை, பிப்.25- வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்ததாக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன்  கே.அர்ஜூனன் மற்றும் அவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்பு  போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டில் சோதனையில் ஈடு பட்டனர். அதிமுக கோவை வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப் பினர் அம்மன் கே.அர்ஜூனன், வருமானத்திற்கு அதிகமாக  சொத்துக்களை வாங்கி குவித்ததாக எழுந்த புகார் அடிப் படையில் கடந்த 2022- மே மாதம் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல்  தடுப்பு போலீசார், அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.  மேலும் அந்த ஆவணங்களை தொடர்ந்து சோதனையிட்ட போது அவர் தனது வருமானத்திற்கும் அதிகமாக சொத்து களை சேர்த்தது தெரியவந்தது. குறிப்பாக அம்மன் அர்ஜூனன்  கடந்த 2016 இல் கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். மதுரை மாவட்டத்தை பூர்வீகமாக  கொண்ட இவர் ஏழை நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் என்ப தும் விசாரணையில் தெரியவந்தது. அப்படி இருக்கையில் அவரது சொத்துகள் திடிரென அதிகமானதே போலீசாரின் சந்தேகத்திற்கு காரணமாக அமைந்தது. குறிப்பாக அவர் சட் டப்பேரவை உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் வரு வாய் அதிகரித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு வீடு, வாகனம்,  நிலம் என அவரது சொத்து மதிப்பு ரூ.2.30 கோடி சொத்துக் கள் இருந்தது. ஆனால் 2022 இல் விபரங்களை சோதனை யிட்ட போது அதன் மதிப்பு ரூ.5.96 கோடியாக உயர்த்திருந் தது. மேலும் வருவாய், செலவீனங்கள் கணக்குகளை வைத்து  பார்த்த போது, இவர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த  கால கட்டத்தில் மட்டும் அவரது சொத்து மதிப்பு வருவாயை  விட 71.19% உயர்ந்து, ரூ.2.75 கோடி கூடுதலாக சேர்த்து வைத் திருந்தது தெரியவந்தது. இந்த சொத்துகளை தனது பெயரி லும், மனைவி விஜயலட்சுமி, மகன், மகள் பெயரிலும் வாங்கி யுள்ளார். இந்நிலையில் இது குறித்து கோவை லஞ்ச ஒழிப்பு  மற்றும் ஊழல் தடுப்பு காவல் ஆய்வாளர் விஜயலட்சுமியின் புகார் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த தாக அதிமுக எம்.எல்.ஏ அம்மன் கே.அர்ஜுனன் மற்றும் அவ ரது மனைவி விஜயலட்சுமி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், செவ்வாயன்று ஆய்வாளர் தலைமையி லான போலீசார் செல்வபுரம் பகுதியில் உள்ள அம்மன் அர் ஜூனன் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்ட னர்.