districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஏசி, ஃபிரிட்ஜ், வாசிங்மெஷின்  பழுது நீக்க இலவச பயிற்சி

ஈரோடு, அக். 18- கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி  நிலையத்தின் சார்பாக  ஏசி, ஃபிரிட்ஜ் மற்றும் வாசிங் மெஷின் பழுது நீக்குதல் தொடர்பான இலவச பயிற்சி ஆண்/ பெண் இருபாலருக்கும் அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி வரும் 1-11-2022 முதல் 5-12-2022 வரை 30  நாட்கள் நடைபெற உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு உட்பட  அனைத்தும் இலவசமாக அளிக்கப்படும். பயிற்சியின் முடி வில் சான்றிதழ் வழங்கப்படும் .  ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராம பஞ்சாயத்துக்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனு மதிக்கப்படுவார்கள். 18 வயதிற்கு மேல் 45 வயதிற்கு உட் பட்டவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்.  இதில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் அல்லது  நூறு  நாள்  வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின்  குடும்ப உறுப்பினர்களும் இப்பயிற்சியில் கலந்து கொள்ள லாம்.  மேலும், விபரங்களுக்கு, கனரா வங்கி கிராமப்புற சுய  வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி வளாகம் 2வது தளம், கொல்லம்பாளையம் பைபாஸ் ரோடு, ஈரோடு-638002 என்ற முகவரியில் தொடர்பு  கொள்ளலாம். 8778323213, 7200650604, 0424-2400338 என்ற எண்களில் முன்பதிவு செய்யலாம்.

 காட்டுயானை தாக்கி  தோட்ட தொழிலாளி படுகாயம்

பொள்ளாச்சி, அக்.18- வால்பாறை பகுதியில் காட்டுயானை தாக்கியதில் தேயிலை தோட்ட தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் கடந்த சில  தினங்களாக யானைக் கூட்டங்கள் குடியிருப்புக்குள் புகுந்து  வருகிறது. இது குடியிருப்புவாசிகளை அச்சத்திற்கு உள்ளாக் கியுள்ளது. கடந்த வாரத்தில் இரண்டு நியாய விலைக்கடை கள் மற்றும் வீடுகளையும் இடித்து சேதப்படுத்தியது. இந் நிலையில், வால்பாறையை அடுத்துள்ள சோலையார் பகுதி யைச் சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளி துரைராஜ் செவ்வாயன்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப் போது வனத்திலிருந்து வெளியேறிய காட்டுயானை ஒன்று சாலையில் நடந்து சென்ற துரைராஜை துரத்தியுள்ளது. இதனையடுத்து செய்வதறியாது திகைத்து போன துரைராஜ்  யானையிடமிருந்து தப்பிக்க ஓடியுள்ளார். ஆனால், யானை  அவரை தும்பிக்கையினால் தூக்கி வீசியது. இதையடுத்து பலத்த காயமடைந்த அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு  வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென் றனர்.  இதன்பின் அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, உயிருக்கு  ஆபத்தான நிலையில் துரைராஜை மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ்  மூலம் கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த மானாம்பள்ளி வனச்சரகர் மணி கண்டன் அரசு மருத்துவமனையிலிருந்த துரைராஜ் மற்றும்  அவரது குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  மேலும், முதற்கட்ட நிவாரண தொகையாக வனத்துறை சார்பில் ரூ.50 ஆயிரம் துரைராஜ் குடும்பத்தாரிடம் ஒப் படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108  ஆம்புலன்சு மூலமாக கொண்டு சென்றனர்.

சேலம் 324 பேரின்  வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து

சேலம், அக்.18- கடந்த 9 மாதங்களில் சேலம் சரகத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 324 பேரின் வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து  செய்யப்பட்டுள்ளது. வாகன விபத்துக்களை குறைக்க தமிழக காவல் துறை யினர், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பல்வேறு நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  இதன்ஒருபகுதியாக சேலத்தில், போக்குவரத்து காவல்  துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு, விதிமுறை களை மீறிய வாகனங்களை இயக்கிய வாகன ஓட்டி களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். மேலும், போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார  போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. மேலும், அதிவேகமாக வாகனம் ஓட்டுப வர்கள், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதேபோன்று வாகன விபத்தை  குறைக்கும் வகையில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பர்மிட், தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்படும் வாக னங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி, சேலம் சரகத்தில் கடந்த 9 மாதங்களில் காவல்  துறையினரின் பரிந்துரையின் பேரில் சாலை விபத்தில் உயிரி ழப்பை ஏற்படுத்திய 324 பேரின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலி மாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ரத்து செய்துள் ளனர். இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற் கொள்ளப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

நெல் குடோனில் தீ விபத்து 150 நெல்மூட்டைகள் சேதம் 

தருமபுரி, அக்.18- தருமபுரி அருகே உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப  கழக நெல் கிடங்கில் தீ விபத்தால் 150 நெல்முட்டைகள் தீயில்  கருகி நாசமாகின.  தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றிய வெத்த லக்காரன் பள்ளம் செல்லும் வழிக்கு தென்புறமாக தனியார்  நிலத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான திறந்தவெளி நெல் குடோன் 10 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த குடோனில் செவ்வாயன்று காலையில்   தீ விபத்து ஏற்பட்டது. இத்தகவலறிந்த தீயணைப்புத் துறை யினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தீ அணைக்கப் பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப் பினும், 150 அரிசி மூட்டைகள் சேதமடைந்தது.  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாளர் மகேஸ் வரி சம்பவ இடத்தை பார்வையிட்டார். தீயில் கருகிய 150  நெல் மூட்டைகளின் மதிப்பு சுமார் ரூ1 லட்சத்து 20 ஆயிரம்  இருக்கும் எனவும் கூறப்படுகிறது.  இச்சம்பவம் குறித்து அதியமான் கோட்டை போலீசா ருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், தீ விபத்து பற்றி விசா ரணை செய்து வருகின்றனர். மேலும் நபர்கள் யாரேனும் தீ  வைத்தார்களா அல்லது மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டதா?  என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருப்பூர், அக்.18-  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்களுக் கான குறைதீர் கூட்டம் வியாழனன்று நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பு தெரிவித்துள் ளது.  இக்கூட்டம், திருப்பூர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய்பீம் தலைமையில் நடைபெற உள்ளது. இதில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறு வன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். ஆகவே மேற் படி கூட்டத்தில்  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர் வோர்கள் புகார்கள், குறைபாடுகள் இருப்பின் எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன்  கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்சத்தில் திளைக்கும் கனிமவளத்துறை: விவசாயிகள் குற்றச்சாட்டு

திருப்பூர், அக். 18 - திருப்பூர் மாவட்ட கனிமவளத்துறையின் துணை இயக்குனர் அலுவலகம் லஞ்சத்தில் திளைப்பதால் முறைகேடுகளைக் களைய நடவடிக்கை எடுக்காமல் உள்ளது என்று விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் குற் றஞ்சாட்டி உள்ளனர். விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார் பில் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கனிம வளத்துறை அலுவலகத்தில் பத்தாண் டுகளுக்கு மேலாக கோமதி என்பவர் தற்கா லிக பணியாளராக உள்ளார். இவரது கணவர்  மூலமாக லஞ்சப் பணத்தை அதிகாரிகளுக்கு  பெற்றுக் கொடுத்து தரகராக வேலை செய்கி றார். குவாரிகள் இயங்க தொடங்குவதற்கு முன்பு குவாரியை சுற்றி கம்பி வேலி அமைக்க  வேண்டும் என்பது கட்டாய விதி, இந்த விதியை முறையாக அமலாக்காததால், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் திருப் பூர் மாவட்டத்தில் வேலியில்லாத குவாரிக ளில் குளிக்க சென்று 15க்கும் மேற்பட்ட குழந் தைகள் இறந்துள்ளனர். விதிமீறிய குவாரி கள் மீது கனிமவளத் துறையினர், வட்டாட் சியர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. பல்லடம் வட்டம், கோடங்கிபாளையத் தில் எழில் ப்ளூமெட்டல்ஸ் நிறுவனத்திற்கு பத்தரை கோடி ரூபாய் அபராதமாக கனிம  வளத்துறை விதித்துள்ளது. கோடங்கிபாளை யம், இச்சிப்பட்டி, பூமலூர், சாமளாபுரம், 63  வேலம்பாளையம் ஆகிய ஐந்து கிராமங்க ளில் மட்டும் சட்டவிரோத கனிமவளக் கொள்ளை குறித்து உரிய வகையில் ஆய்வு  நடத்தினால் அரசுக்கு ரூ.500 கோடி வருமா னம் வர வாய்ப்புள்ளது. ஆனால், தொடர்ச்சி யாக இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நேர்மையாக பணி செய்கிறார். ஆனால் அவரை சுற்றி ஊழல் அதிகாரிகளின் கூட்டம் மட்டுமே உள்ளதால், அவருடைய அனைத்து பணிக ளும் முடக்கப்பட்டுள்ளது, தனது அதிகா ரத்தை முழுமையாக பயன்படுத்த அவரும்  தயாராக இல்லை. அரசுக்கு வர வேண்டிய  வருமானம் இங்கே அதிகாரிகள், குவாரி  உரிமையாளர்கள், கிராவல் மண் திருடர்கள்  ஆகியோர் கைகளுக்கு சென்று அவர்களை வளப்படுத்திக் கொண்டிருக்கிறது. சட்ட  விரோதமாக வெட்டி கடத்திச் செல்லப்பட்ட கனிமவளத்தை கொண்ட லாரிகள் ஒன்று கூட  பிடிக்கப்படவில்லை என்பதில் இருந்து இவர் கள் அனைவரும் கனிம வள கொள்ளைக்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்பது தெளி வாகிறது. மேலும் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும்  லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறையை கலைத்து  விட வேண்டும். அந்த துறையும் கமிஷன் பெற் றுக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கனிம  வளக் கொள்ளையை தடுத்து நிறுத்தும் வரை யில் சமரசம் அற்று செயல்படுவோம். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அணைகளின் நிலவரம் 

ருமூர்த்தி அணை 
நீர்மட்டம்:50.31/60 அடி 
நீர்வரத்து:648கன அடி
வெளியேற்றம்:107 கன அடி
அமராவதி அணை 
நீர்மட்டம்: 78.81/90 அடி.
நீர்வரத்து:1591 கன அடி
வெளியேற்றம்:272 கன அடி

மழையளவு

திருப்பூர் வடக்கு – 7 மி.மீ.,
அவிநாசி – 15 மி.மீ.,
பல்லடம் – 4 மி.மீ.,
ஊத்துக்குளி – 3 மி.மீ.,
குண்டடம் – 18 மி.மீ.,
உடுமலை – 19.20 மி.மீ.,
மாவட்ட ஆட்சியரகம் – 24 மி.மீ.,
திருப்பூர் தெற்கு – 28 மி.மீ.,
ஆட்சியர் முகாம் – 17.20 மி.மீ.,

நிலுவை தொகை தராமல் இழுத்தடிப்பு

விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் தவிப்பு
ஈரோடு, அக். 18- விசைத்தறி கூட்டுறவு நெசவாளர்கள் சங்கங்களுக்கு சுமார் 158 கோடி நிலுவை தொகையை தராமல் இழுத்தடிப்ப தால் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தினர் பரிதவிப்பில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து இவ்வமைப்பின் நிர்வாகிகள் கூறுகையில், தமிழகத்தில் உள்ள 225 விசைத்தறி கூட்டுறவு தொடக்க நெச வாளர் சங்கங்களுக்கு தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை உற்பத்தி மற்றும் பள்ளி சீருடைகள் உற்பத்தி செய்த வகை யில் கூட்டுறவு சங்கத்தில் உள்ள விசைத்தறி உறுப்பினர் களுக்கு 158 கோடி ரூபாய் கூலி நிலுவை உள்ளது. கூட்டுறவு சங்கங்களுக்கு வார்ப்பு பாவு ஓட்டி கொடுத்த சைசிங் மில்க ளுக்கு கூலி நிலுவையும் உள்ளது. கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிக ளுக்கு உண்டான சம்பளமும் மேலும் அதனை சார்ந்த கூட்டு றவு ஊழியர்கள், கணக்கர்கள், மேனேஜர்கள் மற்றும் அங்கு வேட்டி, சேலை மற்றும் பள்ளி சீருடைகள் மடித்துக் கொடுத்த  ஊழியர்களுக்கும், வாடகைக்கு உள்ள பல கூட்டுறவு சங்கங்க ளுக்கு வாடகை நிலுவையும் உள்ளது. சொந்தமாக இடம் வைத்திருக்கும் கூட்டுறவு சங்கங்கள் அதன் பேரில் வங்கியில் அடமான கடன் அல்லது முதலீடு கடன் பெற்றுள்ள காரணத் தால் அதற்கு உண்டான வட்டிகளை செலுத்த முடியாத சூழ லும் உள்ளது. இதனால் பல விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் நடத்த முடி யாத சூழலுக்கு தள்ளப்பட்ட உள்ளது. கைத்தறி மற்றும் துணி நூல் துறை சார்பாக தமிழக அரசின் இலவச வேட்டி சேலை  திட்டம் மற்றும் பள்ளி சீருடை திட்டம் மூலம் அரசிடம் இருந்து கடந்த 2013 முதல் 2022 வரை 158 கோடி ரூபாய் நிலுவை யில் உள்ளது. மேலும், கோ - ஆப் டெக்ஸ் மூலம் விசைத்தறி சங்கங்க ளுக்கு வரவேண்டிய 3.25கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக பலமுறை எங்களது தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அரசு முதன்மை செயலருக்கும், கைத்தறி துறை ஆணையருக்கும் கடிதம் மூலமாகவும், நேரடியாக சந்தித்து  மனு கொடுத்து நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தியுள் ளோம். ஆனால் இதுவரை நிலுவை தொகை வழங்கப்பட வில்லை உடனடியாக வழங்க வேண்டும் என்கிற கோரிக் கையை முன்வைத்துள்ளனர்.

ரயில் மோதி அடிபட்ட மேலும் ஒரு யானை பலி

கோவை, அக்.18- கோவையில் ரயில் மோதி அடி பட்ட மேலும் ஒரு காட்டுயானை உயிரி ழந்த சம்பவம் வன உயிரின ஆர்வ லர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. கடந்த அக்.14 ஆம் தேதியன்று இரவு கன்னியாகுமரி - அசாம் விரைவு ரயில் மோதி ஒரு குட்டியானை உட்பட 3 யானைகளுக்கு அடிபட்டது என ரயில் என்ஜின் ஓட்டுநர் தெரிவித்திருந்தார். அதில், 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை சம்பவ இடத்திலேயே இறந் தது. மற்றொரு பெண் யானையும், குட்டி  யானையும் காயமடைந்த நிலையில் அதிர்ச்சியில் காட்டுக்குள் ஓடிச்சென் றது. இதனை தண்டவாள பராமரிப்பு பணியாளர்கள் பார்த்து சொன்ன தக வலின் அடிப்படையில், காயமடைந்த யானைகளை அதிகாரிகள் தேடி வந்த னர். இந்நிலையில், காட்டில் தேன் மற் றும் நெல்லிக்கனி சேகரிக்க சென்றவர், நடுப்பதி காட்டுப்பகுதியில் அருவி ஒன் றின் அருகே காட்டு யானை இறந்து கிடந்ததை பார்த்தனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. இதனையடுத்து வனத்துறை யினர் கால்நடை மருத்துவர் ஜோயி  டேவிட் தலைமையில் அங்கு விரைந்து சென்றனர். யானை உடலை மீட்ட வனத் துறை ஊழியர்கள், உடற்கூறு பரிசோ தனை மேற்கொண்டனர். பின்னர் வாளையார் வனப்பகுதியில் ஆழமான குழி தோண்டி புதைத்தனர்.  இதையடுத்து நடைபெற்ற விசார ணையில், நடுப்பதி வனப்பகுதியில் உயிரிழந்து கிடந்த காட்டுயானை ரயில் மோதி அடிப்பட்டது என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து ரயிலில் அடிபட்ட மேலும் ஒரு குட்டி யானையை வனத்துறையினர் தீவிரமாக தேடி வரு கின்றனர்.

மாணவி தற்கொலை

கோவை, அக்.18- தடாகம் சாலையிலுள்ள பாரதி மெட்ரிக் பள்ளியில் 10 வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது. பாரதி மெட்ரிக் பள்ளி யில் 9 ம் வகுப்பு வரை மெட் ரிக் பாடத்திட்டத்தில் பயின்ற நிலையில் பத்தாம் வகுப்பில் சர்வதேச பாடத்திட்டத்திற்கு மாற்றியதால் மன உளைச்ச லில் இருந்த மாணவி ரித்திகா தனது கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட் டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து துடியலூர் போலீசார் விசார ணையில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக இறந்த மாணவி யின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.
 
 

;