districts

img

அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

காங்கயம் அருகே, படியூரில்உள்ள அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்  துவக்க விழா நிகழ்ச்சி திங்களன்று நடைபெற்றது. இதில்  கலந்து கொண்ட செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி ஆகியோர்,  டாக்டர் அம்பேத்கரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து,  மரியாதை செலுத்தினர். இதில், மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத், படியூர் ஊராட்சித் தலைவர் ஜீவிதா சண்முகசுந்த ரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர், டிச.6 - அண்ணல் அம்பேத்கரின் 65  ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி பல்வேறு இடங்களில் அவரது உருவச்சிலை, படத் துக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது . திருப்பூரில் மாநகராட்சி அலு வலகம் அருகில் அமைக்கப்பட் டிருந்த அண்ணல் அம்பேத்கரின் உருவச் சிலைக்கு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஆர்.குமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட் டத் தலைவர் பா.ஞானசேகர் ஆகியோர் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னர். இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜகோபால், தெற்கு மாநகரச் செயலாளர் த. ஜெயபால், கே.பழனிச்சாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ச.நந்தகோ பால் உள்ளிட்ட பலர் பங்கேற்று, பொதுத்துறைகளைப் பாது காப்போம், இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்போம், சமூகநீதியை வென்றெடுப்போம் என உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.  பல்லடம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு நடந்த நினைவேந்தல் நிகழ்வில், ஒன்றியச் செயலாளர் பரமசிவம் தலைமையில் அம்பேத்கர் உருவப் படத்துக்கு மாலை  அணிவித்து, மரியாதை செலுத் தப்பட்டது. ஊத்துக்குளி புஞ்சை  தளவாய் பாளையத்தில் விவ சாயத் தொழிலாளர் சங்கம்  சார்பிலும், ஊத்துக்குளி ஆர்.எஸ்.-ல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பிலும் மரியாதை செலுத்தப்பட்டது.

 ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் பன் னீர்செல்வம் பூங்கா, மூலப்பா ளையம் அலுவலகம், செங்கோ டம்பாளையம், ஊனாத்திபுதூர், பெருந்துறை வாவி கடை, பவானி, சத்தியமங்கலம், புளி யம்பட்டி, அந்தியூர், கூடுமை னூர்,  க மேட்டூர், மொடக்குறிச்சி, கொடுமுடி சிவகிரி, கோபிச் செட்டிபாளையம் உள்ளிட்ட இடங்களில் அம்பேத்கர் உரு வப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், சிஐடியு மாவட்ட தலைவர்  எஸ்.சுப்பிரமணியன், தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் பி.பி. பழனிசாமி, மாவட்ட தலைவர் எம்.அண்ணாதுரை, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் பி.விசு வநாதன், மாவட்ட செயலாளர் சசி, மாதர் சங்க மாவட்ட தலை வர் பி.லலிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு நரிப்பள்ளத்தில் அம் பேத்கரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி வாலிபர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் எம்.கணேஷ் பாண்டி யன், மாவட்ட துணை தலைவர் பி.பெருமாள், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆதிநாராயணன், ஆர்.வேலாயுதம், மார்க்சிஸ்ட் கட்சியின் திருச்செங்கோடு நகர  செயலாளர் ஐ.ராயப்பன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். இதேபோல், திருச்செங் கோடு ஒன்றியத்துக்குட்பட்ட ஆனங்கூர் ஊராட்சியில் அண் ணாநகர், நல்லா கவுண்டம் பாளையம் உள்ளிட்ட பகுதிக ளில் அம்பேத்கர் நினைவு தினம்  அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ் விற்கு ததீஒமு மாவட்ட குழு உறுப்பினர் சூர்யபிரகாஷ் தலை யேற்றார். ஆனங்கூர் ஊராட்சி மன்றத் தலைவர் சிங்காரவேலு, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பழனிசாமி, வார்டு உறுப்பினர்கள் குமரேசன், நாக ராஜ், மற்றும் தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி நிர் வாகிகள் ஜி.கோபி, சி. துரைசாமி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

தருமபுரி

தருமபுரியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அம் பேத்கர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தப்பட்டது. இந்நிகழ் விற்கு மாவட்ட தலைவர் டி.எஸ். ராமச்சந்திரன் தலைமை வகித் தார். மாவட்டசெயலாளர் டி.மாதையன், மாதர் சங்க  மாவட்டசெயலாளர் எஸ்.கிரை ஸாமேரி, நிர்மலாராணி, தமுஎ கச மாநிலக்குழு உறுப்பினர் நாகைபாலு, சிபிஎம் தருமபுரி நகரசெயலாளர் ஆர்.ஜோதி பாசு ஆகியோர் பங்கேற்று மாமேதை டாக்டர் அம்பேத்கர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னர். சேலம்  சேலம் அரசு இருபாலர் கலைக் கல்லூரி அருகில் உள்ள  அம்பேத்கர் சிலைக்கு இந்திய  ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் வெங்க டேஷ் தலைமையில் மாலை  அணிவித்து மரியாதை செலுத் தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வாலிபர் சங்க மாவட்ட பொருளா ளர் ஜெகநாதன், சிபிஎம் வடக்கு  மாநகர செயலாளர் என். பிரவீன் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.

இதேபோல், மேட்டூர், பெத்த நாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அம்பேத் கர் உருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் சிஐடியு மாவட்ட நிர் வாகி சி.கருப்பண்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாவட்ட துணை தலை வர் ராமசாமி உள்ளிட்ட பலர் பங் கேற்றனர். அதேபோல், சேலம்  ஆர்எம்எஸ் அஞ்சல் அலுவல கத்தில் நிர்வாகி கே. ஆர். கணே சன் தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற் றது. கோவை கோவை டாடாபாத் உணவு  சேமிப்பு கிடங்கு கழகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் முழு உருவ சிலைக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி  சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தீண்டாமை  ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம், மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி, சிஐடியு மாவட்ட செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனக ராஜ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதேபோல், புலியகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அம்பேத் கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத் தப்பட்டது.