கோவையில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு வெகுசிறப்பாக நடைபெற்றது. சிறப்பாக நடத்தி முடித்த வரவேற்பு குழுவிற்கு பாராட்டு விழா செவ்வாயன்று கோவை தாமஸ் கிளப்பில் நடைபெற்றது.இதில், இச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.ராமமூர்த்தி, மாநிலத் தலைவர் கே.பழனிசாமி, ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர் என். அரங்கநாதன், மாவட்டச் செயலாளர் கே.அருணகிரி, மாவட்டத் தலைவர் எஸ்.மதன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஜெகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.