districts

img

ராகிங் - பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார்

சேலம், டிச.3- சேலத்தில் ராகிங்கில் ஈடுபடும் மாணவி கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக் கப்பட்ட மாணவிகள் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். சேலம் சங்கர் நகர் பகுதியில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பெண்கள் விடுதி அமைந்துள்ளது. இங்கு கல்லூரி மாணவிகள் சுமார் 150க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்து மாநகரின் பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், விடுதியில் தங்கியுள்ள மூன்றாம் ஆண்டு மாணவிகள் சிலர் முதலாமாண்டு மாணவி களை தினந்தோறும் ராகிங் செய்து மன  உளைச்சலுக்கு ஆளாக்குவதாக கூறப் படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள்  சிலர், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் புகார் மனு அளித்துள்ளனர். இதில் ராகிங்கில் ஈடுபடும் சம்மந்தப்பட்ட மாணவி கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங் களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நலத்துறை அலுவலர் சம்பந்தப் பட்ட தங்கும் விடுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதன்பின், இனி மேல் ராக்கிங் போன்ற ஒழுங்கீன செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.