districts

img

சாலையை சீரமைக்க நடவடிக்கை

தருமபுரி, ஜன.27- குண்டல்பட்டி - செம்மாண்டகுப்பம் தார்சாலையை சீர மைக்க நடவடிக்கை எடுப்பது என கிராம சபை கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குடியரசு தினத்தை முன்னிட்டு வெள்ளியன்று தருமபுரி மாவட்டம், செம்மாண்டகுப்பம் ஊராட்சி சார்பில் குண்டல் பட்டியில் கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்றத் தலைவர் பி. பானுபூமணி தலைமையில் நடைபெற்றது. இதில் செம் மாண்டகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட குண்டல்பட்டியில் இருந்து செம்மாண்டகுப்பம் வரை உள்ள தார்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பது, ஊராட்சி முழுவதும் உள்ள கிராம சாலையோரம் செடி வைத்து பராமரிப்பது, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் கே.எஸ்.சரவணன், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் தம்பி (எ) ஜெய்சங்கர், ஊராட்சிச் செயலாளர் இடும்பன், ஊராட்சி துணைத்தலைவர் தேவி அருண் ஞானசேகரன், வார்டு உறுப் பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.