சேலம், ஜூலை 11- புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கத்தின் ஜூலை 2 எழுச்சி நாள் கூட்ட அறைகூவல் தீர்மானத்தின்படி, ஜாக்டோ - ஜியோ போராட்டத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மற்றும் ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பா ளர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஏற்றுக்கொண்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு துறைகளில் காலியாக இருக் கும் பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், எம்ஆர்பி செவி லியர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கணினி இயக்குநர்கள், மகளிர் திட்ட ஊழியர்கள், குழந்தைகள் பாதுகாப்பு திட்ட ஊழியர்கள், வன பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியம் பெரும் ஊழியர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் தொகுப்பூதிய ஊழியர்களை நிரந் தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ந.திருவே ரங்கன் தலைமையில் நடை பெற்ற போராட்டத்தில், மாவட்டச் செயலாளர் பு.சுரேஷ், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலு வலர் சங்க மாநிலத் துணைத் தலைவர் வே.அர்த்தனாரி, அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொரு ளாளர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராக்கி முத்து தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ச.விஜயமனோகரன் கோரிக்கைகளை விளக்கி பேசி னார். பொது சுகாதாரத்துறை சந்திர மௌலி, கல்வித்துறை அண்ணா துரை, சத்துணவு பழனிசாமி, சாலை பணியாளர் சங்க நிர்வாகி பி. கதிரவன், ஊரக வளர்ச்சி அலு வலர் சங்க நிர்வாகி முத்துக்குமார் மற்றும் மாநகராட்சி குமரவேல் உள்ளிட்ட துறைவாரி சங்க நிர்வா கிகள் கலந்து கொண்டு பேசி னர். மாநில துணைப்பொதுச் செயலாளர் மு.சீனிவாசன் நிறை வுரையாற்றினார். மாவட்ட பொரு ளாளர் ஆர்.சுமதி நன்றி கூறினார். தருமபுரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.சுருளி நாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.சேகர், மாவட்டப் பொருளாளர் பி.எஸ்.இள வேனில், மாவட்ட நிர்வாகிகள் புகழேந்தி, காவேரி, மகேஸ்வரி, குணசேகரன், சங்கர், வெங்கட டேசன், நாகராஜ், குமரன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.