திருப்பூர், ஜூலை 10 – திருப்பூர் மாவட்டம் உடு மலை மலைப்பகுதியில் உள்ள குழிப்பட்டி செட்டில் மெண்ட்டை சேர்ந்த பெண்ணை விஷப் பாம்பு கடித் துவிட்டது. சாலை வசதி இல் லாத நிலையில் மருத்துவ சிகிச் சைக்கு வர முடியாமல் ஆபத் தான முறையில் பச்சிலை வைத்தியம் பார்த்திருக்கிறார். குழிப்பட்டி செட்டில் மெண்டைச் சேர்ந்தவர் மல் லன். இவரது மனைவி மாரி யம்மாள் (வயது 55). இவரை ஞாயிறன்று கட்டுவிரியன் பாம்பு கடித்து விட்டது. எனி னும் குழிப்பட்டியில் இருந்து உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவ தற்கு, சமதளப் பகுதியான உடுமலை பேட்டை மருத்துவமனைக்கு வருவதற்கு சாலை வசதி இல்லை. எனவே மலைவாழ் மக் கள் பாரம்பரிய முறைப்படி தங்கள் பகுதியில் கிடைக்கும் பச்சிலை மூலம் வைத்தியம் செய்து கொள்வதைப் போல், பசுமருந்து எனும் பச்சி லையை பாம்பு கடித்த காலில் தேய்த்து இருக்கிறார். எனி னும் விஷப்பாம்பு கடிக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறவும், மருத்துவக் கண்கா ணிப்பில் இருக்கவும் உரிய ஏற் பாடு இல்லாமல் அச்சத்துடன் இருக்கும் நிலை உள்ளது. மலைவாழ் மக்களுக்கு இதுபோல் அவசர மருத்துவ தேவைகள் இருந்தும் மாவட்ட நிர்வாகம், வனத்துறையினர் சாலை வசதி ஏற்படுத்தித் தர மறுத்து காலதாமதம் செய்து வருவது அங்குள்ள மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை அதிகரித்து வருகிறது.