ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவையடுத்து, பெரியார் மன்றத்தில் புகழஞ்சலி கூட்டம் செவ்வாயன்று, மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் டி.திருச்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில், அமைச்சர் சு.முத்துசாமி, முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர், நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், ஈஸ்வரன் எம்எல்ஏ, மேயர் சு.நாகரத்தினம், மக்கள் சிந்தனை பேரவை ஸ்டாலின் குணசேகரன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.