திருப்பூர், செப்.10- போக்குவரத்துக்கு இடையூறாக மாநகராட்சி லாரியை சாலையின் குறுக்காக நிறுத்தி குப்பையை அகற்றுவதற்கு பொது மக்கள் அதி ருப்தி தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சி, பாப்ப நாயக்கன்பாளையம் சாலையில் வெள்ளியன்று மாநகராட்சி லாரியை சாலையின் குறுக்காக நிறுத்தி குப்பை அகற்றும் பணியை ஊழி யர்கள் மேற்கொண்டனர். இத னால் இந்த சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் குப்பை அகற்றும் போது இதே போல் லாரியை சாலையின் குறுக்கில் நிறுத்தி இடையூறு செய்வ தாக அப்பகுதி மக்கள் புகார் கூறி னர். இந்த சாலையின் அருகிலேயே காலி இடம் இருக்கும்போது, குப்பை ஏற்றிச் செல்லும் லாரியை சற்று தள்ளி நிறுத்தி பொது மக்கள் போக்குவ ரத்துக்கு இடையூறு செய்யாமல் குப்பை அகற்றலாமே என்று அப்ப குதி மக்கள் கேள்வி எழுப்பினர். சம்பந்தப்பட்ட பகுதி சுகாதார ஆய் வாளர் இதில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுப்பாரா?