districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பிளாஸ்டிக் தரம் பிரிச்சு கொடுத்தால் கிலோவுக்கு 8 ரூபாய்

கோவை, அக். 6 -  “பிளாஸ்டிக் பொருட்களை தரம் பிரிச்சு கொடுத்தா 1 கிலோவுக்கு 8 ரூபாய் தாராங்க” என்ற புதிய யுக்தியை கரியாம் பாளைம் ஊராட்சி கையில் எடுத்துள்ளது. கோவை மாவட்டம், அன்னூரை அடுத்துள்ள கரியாம் பாளையம் ஊராட்சியில் மொத்தமாக 9 வார்டுகள் உள்ளன.  இந்த ஊராட்சிகளில் சேகரமாகும் குப்பைகளை வீதிவீதியாக வந்து வாங்கிச்செல்ல தூய்மைப்பணியாளர்களும் பணியில்  உள்ளனர். இருந்தும் பொதுமக்கள் ஆங்காங்கே குப்பை களை கொட்டி விட்டு செல்கின்றனர். இருப்பினும் தொற்று  நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொது  இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்க்கும் வகையில்,  வீடு,வீடாக குப்பைகளை வாங்குவதற்காக வரும்  தூய்மைப்பணியாளர்களிடம் பிளாஸ்டிக் பொருட்களை  தரம் பிரித்து கொடுத்தால் 1 கிலோவிற்கு 8 ரூபாய் என  நோட்டீஸ் அச்சடித்து வீடுகளுக்கு ஊராட்சி நிர்வாகம் விநியோகம் செய்துள்ளது.

தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் மரியாதை

தருமபுரி, அக்.6- விடுதலைப் போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவாவின் 139 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, பாப்பாரப்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் மாவட்ட  ஆட்சியர் கி.சாந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே ஒன்னப்ப கவுண்டன அள்ளி ஊராட்சியில் தருமபுரி மாவட்ட செய்தி-  மக்கள் தொடா்பு துறையின் பராமரிப்பில் உள்ள விடுதலைப்  போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா மண்டபம் வளா கத்தில் அவரது நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 4 தேதியன்று சுப்பிரமணிய சிவாவின் பிறந்த நாள் விழாவில் ஆட்சியர் கி.சாந்தி, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார், சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர்கள் கே.பி.அன்பழகன் (பாலக்கோடு) ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி), சம்பத்குமார் (அரூர்), கோவிந்தசாமி (பாப்பி ரெட்டிப்பட்டி ), பென்னாகரம் ஒன்றிய குழுத் தலைவர் கவிதா,  தருமபுரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ. சுப்பிரமணி, மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவா்  டி.ஆர்.அன்பழகன், மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் வேலுமணி, பாப்பாரப்பட்டி பேரூராட்சி தலைவர் பிருந்தா நடராஜன், பென்னாகரம் வட்டாட்சியர் அசோக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேலன் உள்ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

 வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

கோவை, அக். 6 -  கோவையில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவரை போலீ சார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவையை அடுத்த ஒக்கிலிபாளையம் பகுதியை  சேர்ந்தவர் முத்துப்பாண்டி (50). இவரது வீட்டின்  அருகே கஞ்சா செடி வாசம் வருவதாக அருகாமை  வீட்டினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து செட்டி பாளையம் போலீசார் முத்துப்பாண்டி வீட்டின் அருகே சென்று  சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டின் பின்புறம்  கஞ்சா செடிகள் இருந்தது தெரியவந்துள்ளது. சுமார் 5  அடிக்கு மேல் வளர்ந்திருந்த கஞ்சா செடிகளை அகற்றி பறி முதல் செய்த போலீசார், முத்துப்பாண்டியை காவல் நிலை யத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா செடிகளின் எடை 1.6  கிலோ வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இதை யடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பொதுவிநியோக குறைதீர் முகாம்

ஈரோடு, அக். 6- ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் நாள் முகாம் சனியன்று (நாளை) நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் நடை பெற உள்ள இம்முகாமில் புதிய குடும்ப அட்டை மனுக்கள்  பெறுதல், நகல் குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர்  சேர்த்தல் மற்றும் நீக்கம், கைபேசி எண் மாற்றம் போன்ற  கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரி விக்கலாம். குறை தீர்க்கும் நாள் முகாமினை கண்காணிக்க கண்காணிப்பு அலுவலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது என  மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித் துள்ளார்.

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் 2022-2023 ஆம் ஆண்டு பயிர் காப்பீடு

திருப்பூர், அக். 6- பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் திருப்பூர்  மாவட்டத்தில் 2022-2023 ஆம் ஆண்டு ராபி பருவ பயிர்களுக்கு  விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யப்படுகிறது.  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-  விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு  நிதி உதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை  நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில் நுட்பங்களை  கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கவும், தமிழ்நாட்டில் பிரதம மந் திரி பயிர் காப்பீட்டு திட்டம் 2016 முதல் அனைத்து மாவட்டங் களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒன்றிய அரசு 2022 ஆம் ஆண்டு முதல் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சில மாற்றங்களை செய்து,  புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. முக்கி யமாக இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகளை கட்டா யமாக பதிவு செய்து வந்த நிலையில் தற்போது அவர்களின்  விருப்பத்தின் பேரில் பதிவு செய்திட அனுமதி வழங்கப்பட் டுள்ளது.

மேலும், மாவட்ட வாரியான பயிர் வாரியான  சராசரி மகசூலின் அடிப்படையில் காப்பீடு தொகை நிர்ண யிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.  திருப்பூர் மாவட்டத்திற்கு பிரதம மந்திரி பயிர்  காப்பீட்டு திட்டம் 2022-2023 செயல்படுத்த அரசாணையின்படி காப்பீடு நிறுவனம் அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நெல்,  மக்காசோளம், பாசிப்பயறு, கொண்டைக்கடலை, நிலக்க டைலை, சோளம் மற்றும் பருத்தி போன்ற அறிவிக்கை செய் யப்பட்டு, விவசாயிகள் காப்பீடு கட்டணம் செலுத்து வதற்கான  காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே ராபி பரு வத்தில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் தங்கள் பயிர் கடன்பெறும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள்  மூலமாக அல்லது தேசியமய மாக்கப்பட்ட வங்கிகள் மூல மாகவோ தங்கள் விருப்பத்தின் பேரில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்துகொள்ளலாம்.  இதற்காக விவசாயிகள் நடப்பு ஆண்டுக்கான அடங்கல்  கிராம நிர்வாக அதிகாரியிடம் பெற்று, அதனுடன் வங்கி  கணக்கு புத்தகத்தில் முதல் பக்க நகல், ஆதார் அட்டை  நகல் ஆகியவற்றை அங்கு சென்று பதிவு செய்துகொள்ள லாம்.  திருப்பூர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு பிரீமியம் தொகை  நெல் ஏக்கருக்கு ரூ.559, பாசிப்பயறு ஏக்கருக்கு ரூ.253.94  செலுத்தி வருகிற  நவம்பர் 15  தேதி ஆம் க்குள் காப்பீடு செய்ய  வேண்டும். மக்காச்சோளம் ஏக்கருக்கு ரூ.486.75, கொண் டைக்கடலை ரூ.269.25, பருத்தி ஏக்கருக்கு ரூ.693.60 பிரீமியம்  தொகையாக செலுத்தி நவம்பர் 30 ஆம் தேதி க்குள் காப்பீடு  செய்ய வேண்டும். சோளம் ஏக்கருக்கு ரூ.38.61 வருகிற  டிசம்பர் 15 ஆம் தேதி க்குள்ளும், நிலக்கடலை ஏக்கருக்கு ரூ. 470.25 பிரீமியம் தொகையாக செலுத்தி டிசம்பர் 31 ஆம் தேதி  க்குள் காப்பீடு செய்ய காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மேலும், இது தொடர்பான விவரங்களை உழவன் செயலி மூல மும், வட்டார அளவில் உள்ள வேளாண்மை உதவி இயக்கு னர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிகிச்சை பெற்று வந்த சிறுத்தை உயிரிழப்பு

உதகை, அக்.6- பந்தலூர் அருகே சுருக்கு கம்பியில் சிக்கி காயமடைந்த சிறுத்தை சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பல னின்றி பரிதாபமாக உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகா, அய்யன்கொல்லி அருகே அத்திச்சால் பகுதியில் உள்ள தோட்டத்தில் கடந்த  அக்.1 ஆம் தேதி சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை ஒன்று உயி ருக்கு போராடி கொண்டிருந்தது. இதனை கவனித்த பொது மக்கள் சேரம்பாடி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனசரகர் அய்யனார், வனவர் ஆனந்த் ஆகி யோர் சிறுத்தையை மீட்க முயன்றனர். அப்போது சிறுத்தை ஆக்ரோஷத்துடன் உறுமியது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் சச்சின், முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் குமார், எருமாடு கால்நடை மருத்துவர் சரண்யா ஆகியோர்  மயக்க ஊசி செலுத்தி 3 வயதுடைய பெண் சிறுத்தையை மீட்டு  முதுமலை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் இதுதொடர்பாக வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து தோட்ட உரிமையாளர் அனீஷ்ராஜன் (39) என்ப வரை கைது செய்தனர். இந்நிலையில், பலத்த காயமடைந்த சிறுத்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிறுத்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரி ழந்தது. இதையடுத்து முதுமலை புலிகள் காப்பக திட்ட  துணை இயக்குநர் வித்யா மேற்பார்வையில் கால்நடைகள் மருத்துவர்கள் சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அதன்பின் சிறுத்தையின் உடல் அந்தப்பகுதியில் எரியூட்டப்பட்டது.

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை 

உதகை, அக்.6- நீலகிரி மாவட்டம், உதகையைச் சேர்ந்தவர் சேகர் (50).  நர்சரி உரிமையாளரான இவரது வீட்டின் அருகே 9 ஆம்  வகுப்பு படிக்கும் 14 வயது பள்ளி மாணவி வசித்து வருகி றார். சில நேரங்களில் மாணவியை தனது காரில் அழைத்து சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் பள்ளிக்கூடத்திற்கு அழைத்து செல்வதாக மாணவியை சேகர் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதில் பள்ளி மாணவி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து பெற்றோர் உதகை அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் புகாரளித்தார். இதையடுத்து உதகை அனைத்து மக ளிர் காவல் ஆய்வாளர் சரஸ்வதி விசாரணை மேற்கொண்டு, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தனர்.

சட்டவிரோத மது விற்பனை - 3 பேர் கைது 

ஈரோடு, அக்.6 -  ஈரோட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்ததாக டாஸ்மாக் பார் உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 1,738 மதுபாட்டில்கள் பறி முதல் செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் மதுபானங்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. குறிப்பாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பிறகும் மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற் பனை செய்யப்படுகிறது. இதுதொடர்பாக பெறப்பட்ட தக வல்களின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம், கருங் கல்பாளையம் கே.ஏ.எஸ்.நகர் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப் படுவதாக ஈரோடு மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத் தது. அதன்பேரில் மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்கா ணிப்பாளர் பவித்ரா தலைமையிலான போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.  இதில், அங்கு பெட்டிபெட்டியாக மதுபாட்டில்கள் இருந் தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள மது பாட்டில்களை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி னார்கள். விசாரணையில் டாஸ்மாக் கடை உரிமையாளரே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து டாஸ்மாக் பார் உரிமையாளர் கணேசன் (55), பார் ஊழியர் அன்பு (31), குடோன் உரிமையா ளர் மகேந்திரன் (53) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 1,738 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை விமான நிலையத்தில் சரக்குகளை கையாளும் அளவு அதிகரிப்பு

கோவை, அக்.6- கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவை விமான நிலையத்தில் சரக்குகள் குறைந்த அளவே கையாளப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் சரக்குகள் கையாளும் எடை அளவு அதிகரித்துள்ளது. கோவை விமானநிலையத்தில் 900 டன்னை கடந்துள்ளது. கோவை விமான நிலையத்திலிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு சரக்கு  போக்குவரத்து நடைபெற்று வருகிறது. சர்வ தேச விமான வசதி இல்லாத நாடுகளுக்கும் கூட பாண்டட் டிரக் சேவை மூலம் சரக்கு போக் குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. காய் கறிகள், பழங்கள், பூ, மோட்டார் வாகன உதிரிபாகங்கள், பொறியியல் பொருட்கள் உள்ளிட்ட சரக்குகள் ஏற்றுமதி செய்யப்படு கின்றன. கொரோனா தொற்று பரவல் ஏற் படுத்திய பாதிப்பிலிருந்து விமான சேவை மற் றும் சரக்கு போக்குவரத்து மீண்டு வர தொடங்கி உள்ளது. இந்நிலையில், 2 ஆண்டு களுக்கு பின்னர் மாதாந்திர சரக்கு கையா ளும் அளவு 900 டன்  எடையை கடந்துள் ளது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், கோவை விமான நிலையத்தி லுள்ள ஒருங்கிணைந்த சரக்கு வளாகத்தில், மாதந்தோறும் உள்நாட்டு போக்குவரத்து பிரி வில் 800 டன் மற்றும் வெளிநாட்டு போக்கு வரத்து பிரிவில் 200 அல்லது 250 டன் எடை யிலான சரக்குகள் கையாளப்படுவது வழக் கம். கொரோனா பரவலால் சரக்கு போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தற் போது விமான பயணிகளின் எண்ணிக்கை மற்றும் சரக்கு போக்குவரத்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மாதந்தோறும் 600 முதல் 800 டன் எடையிலான சரக்குகள் கையாளப்பட்டன. செப்டம்பரில் உள்நாட்டு போக்குவரத்து பிரி வில் 790 டன், வெளிநாட்டு போக்குவரத்து பிரி வில் 141 டன் என மொத்தம் 931 டன் சரக்கு கள் கையாளப்பட்டுள்ளது. தற்போது 2 ஆண் டுகளுக்கு பின்னர் ஒரே மாதத்தில் கையா ளப்பட்ட மொத்த சரக்குகளின் எடையளவு 900 டன் எடை அளவை கடந்துள்ளது, என்ற னர்.

ஏரியில் மண் அள்ளிய  பொக்லைன், லாரிகள் ‌பறிமுதல்

நாமக்கல், அக்.6- நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள கீழ் சாத்தம்பூர் கிராமத்துக்குட்பட்ட பகுயில் ஏரி உள்ளது. இந்த  ஏரியில் ராட்சத பொக்லைன் எந்திரங்கள் மூலம் டிப்பர் லாரி களில் மண் வெட்டி கடத்தப்படுவதாக பொதுமக்கள் கிராம நிர் வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சசிகலா, வருவாய் ஆய்வாளர் அம் ரித் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அதி காரிகள் வருவதை கண்டதும் ஏரியில் மண் வெட்டியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அங்கு அங்கு பொக்லைன் எந்தி ரங்கள், 4 டிப்பர் லாரிகளில் மண் வெட்டி கடத்த முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து நாமக்கல் வாட்டாட்சியர் தகவல் தெரிவித்த னர். இதனையடுத்து வாட்டாட்சியர் சக்திவேல் உத்தரவின் பேரில் கீழ்சாத்தம்பூர் ஏரியில் இருந்து மண் அள்ள பயன் படுத்திய பொக்லைன் எந்திரங்கள் மற்றும் 4 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து பரமத்தி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி யோடியவர்களை தேடி வருகின்றனர்.

சாலை விபத்தில் வாலிபர் பலி

ஈரோடு, அக்.6- கோபிசெட்டிபாளையம் வாய்க்கால் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (27). இவர் கோபியிலிருந்து கரட்டடிபாளையம் நோக்கி  இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். லக் கம்பட்டி பிரிவு அருகே சென்ற போது அந்த வழியாக வந்த  லாரி முத்துக்குமார் மீது  மோதியது. இதில் படுகாயம டைந்து அவர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். இது குறித்து காவல் துறையினர்  விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். 

;