தருமபுரி, பிப்.28- தொப்பூர் கணவாய் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்த பெட்ரோல் டேங்கர் லாரி அடுத்தடுத்து, 6 வாகனங்கள் மீது மோதிய விபத் தில், 3 பேர் காயமடைந்தனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு பெட்ரோல் லோடு ஏற் றிக் கொண்டு டேங்கர் லாரி வந்தது. செவ்வாய் முதல் தொப்பூர் சாலை ஒரு சாலையாக மாற்றபட்டிருந் தது. இந்த நிலையில், பெட்ரோல் டேங்கர் லாரி, தருமபுரி மாவட் டம், தொப்பூர் கணவாய் பகுதியில் வந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி, முன்னாள் சென்ற, 3 கார்கள், டாடா ஏஸ் ஐஸ் வண்டி, டாடா ஏஸ் பார்சல் வாகனம் உட்பட 6 வாக னங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்திய பின், மலைப் பகுதியில் டேங்கர் லாரி மோதி நின் றது. இந்த விபத்தில், டாடா ஏஸ் வண் டியில் வந்த பச்சையம்மாள் (53), காரில் வந்த புதுப்பட்டியை சேர்ந்த சிவா (33), வேப்பிலைபட்டியைச் சேர்ந்த ராஜவேல் (33) உட்பட, 3 பேர் காயமடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச் சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்து குறித்து விசா ரணை மேற்கொண்டனர். இந்த விபத்தால், சேலம் - பெங்களூர் இடையிலான தேசிய நெடுஞ்சா லையில், 2 மணி நேரம் போக்குவ ரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர், விபத்துக்குள்ளான வாகனங் களை, போலீசார் உதவியோடு மீட்புக்குழுவினர் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.