districts

img

சேலம்: 699 கவுன்சிலர்கள் இன்று பதவியேற்பு

சேலம், மார்ச் 1- தமிழகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாவட் டத்தில் வெற்றி பெற்ற 699 கவுன் சிலர்கள் புதனன்று (இன்று) பதவி ஏற்க உள்ளனர். தமிழகத்தில் நகர்ப்புற உள் ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. சேலம் மாவட்டத் தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சி 31 பேரூராட்சிகளுக்குட்பட்ட 699 வார் டுகளில் திமுக கூட்டணி பெரும்பா லான வார்டுகளில் வெற்றி பெற்றது. அதன்படி. சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகளில் 50 வார்டுகளை திமுக கூட்டணியும், 7 வார்டுகளில் அதிமுகவும், 3 வார்டுகளில் சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று மாநகராட்சி மன்ற கூட்டத்தில் பதவி ஏற்க உள் ளனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிர மாக நடைபெற்ற வருகிறது. கூட்ட ரங்கத்தில் கவுன்சிலர்களுக்கு புதிய இருக்கைகள் போடப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.  அதேபோல் ஆத்தூர், மேட்டூர், நரசிங்கபுரம், தாரமங்கலம், இடங் கணசாலை, எடப்பாடி ஆகிய நக ராட்சிகளில் வெற்றி பெற்ற 165 கவுன் சிலர்களுக்கு அந்தந்த நகராட்சி  அலுவலகங்களில் நகராட்சி ஆணை யாளர்கள் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளனர். மேலும், 31  பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற 474 கவுன்சிலர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர்கள் பதவி பிரமா ணம் செய்து வைக்க உள்ளனர். அதனைத்தொடர்ந்து மாநகராட்சி யில் மேயர், துணை மேயர் பதவிக் கும், நகராட்சி, பேரூராட்சி தலை வர், துணைத் தலைவர் பதவி களுக்கும் மார்ச் 4 ஆம் தேதி மறை முக தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.