districts

img

தொழிலாளர்களை வஞ்சிக்கும் அவுட்சோர்சிங் யாருக்காக? திருப்பூரில் சிஐடியு தலைமையில் உள்ளாட்சி ஊழியர்கள் 600 பேர் மறியல்

திருப்பூர், ஜூலை 12 - திருப்பூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சிக ளில் அவுட்சோர்சிங் என்று ஒப்பந்தத் தொழி லாளர்களை வஞ்சிப்பது யாருடைய நலன் களைப் பாதுகாப்பதற்காக என்ற கேள்வியு டன் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த  மறியலில் 600க்கும் மேற்பட்ட நகர்ப்புற உள் ளாட்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். காவல் துறையினர் அவர்க ளைக் கைது செய்தனர். பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி களில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை  அவுட் சோர்ஷிங் (அயல் பணி) முறையில்  தனியார் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைப்ப தற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கெனவே நகர்ப்புற உள்ளாட்சி களில் நேரடி ஒப்பந்த முறையில் தினக்கூலி  தொழிலாளர்களாக வேலை செய்து வரும் தூய்மைப் பணியாளர், குடிநீர் பணியாளர், வாகன ஓட்டுநர்கள், கொசுப்புழு ஒழிப்புப்  பணியாளர்கள் உள்ளிட்டோரை, அவுட் சோர் ஷிங் ஒப்பந்ததாரர்களின் கட்டுப்பாட்டுக்கு  மாற்றுகின்றனர்.அவுட்சோர்ஷிங் ஒப்பந்ததா ரர்கள், இந்த தொழிலாளர்கள் ஏற்கெனவே  பெற்று வரும் ஒப்பந்த அடிப்படையிலான  கூலியைக் குறைப்பதுடன், 50 வயது நிறை வடைந்தவர்களை வெளியேற்றி அவர்க ளுக்கு வேலை மறுக்கின்றனர். இதை எதிர்த்து மாவட்டத்தின் பல்வேறு நகர்ப்புற  உள்ளாட்சிகளிலும் உள்ளிருப்பு வேலை  நிறுத்தம் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்கள்  நடைபெற்றுள்ளன. 

தமிழகத்தின் இதர பகுதிகளிலும் மாநக ராட்சிகள், நகராட்சிகளிலும் அவுட்சோர்சிங் முறைக்கு எதிராக ஒப்பந்த தினக்கூலி தொழி லாளர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். பல ஆயிரக்க ணக்கான தொழிலாளர்களின் குறைந்தபட்ச  வாழ்வாதாரத்தை பறிக்கும் அவுட்சோர்சிங்  முறையை கைவிட வேண்டும் என்றும், ஆட் குறைப்பு, ஊதியக் குறைப்பு செய்யக் கூடாது என்றும் சிஐடியு வலியுறுத்தி உள்ளது.  இந்த கோரிக்கையை முன்வைத்து மாநிலம்  முழுவதும் புதன்கிழமை சிஐடியு தலைமை யில் உள்ளாட்சி பணியாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகரில்  தியாகி குமரன் நினைவகம் முன்பு மாவட்டத் தின் பல்வேறு நகர்ப்புற உள்ளாட்சிகளில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள் அணி திரண்டனர். அங்கிருந்து திருப்பூர் மாநக ராட்சி அலுவலகம் நோக்கி ஊர்வலமாகப் புறப்பட்டனர்.

இந்த போராட்டத்துக்கு சிஐடியு மாவட் டத் தலைவர் சி.மூர்த்தி தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினார். சங் கத்தின் மாவட்டத் தலைவர் பி.பழனிசாமி, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர்கள் கே. உண்ணிகிருஷ்ணன், பி.பாலன், மாவட்டப் பொருளாளர் ஜி.சம்பத் உள்பட சிஐடியு மற் றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க  நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த தொழிலா ளர்களின் போராட்டத்தை ஆதரித்து மார்க் சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ் ஊர்வலம், மறியலில் முழுமை யாகப் பங்கேற்றார். குமரன் நினைவகம் முன்பு தொடங்கிய ஊர்வலத்தில் கோரிக்கை முழக்கங்கள் எழுப் பியபடி குமரன் சாலை, நொய்யல் பாலம்,  வளர்மதி வழியாக மாநகராட்சி அலுவல கத்தின் முகப்புப் பகுதியை ஊர்வலம் சென்ற டைந்தது. அங்கு மங்கலம் சாலையில் அமர்ந்து சிஐடியு தலைவர்கள், பெண்கள்  உள்ளிட்ட தொழிலாளர்கள் கொளுத்தும் வெயிலில் தரையில் அமர்ந்து முழக்கங் கள் எழுப்பி மறியலில் ஈடுபட்டனர். இதைய டுத்து அவர்களை காவல் துறையினர் கைது  செய்வதாக அறிவித்தனர். இதில் பங்கேற்ற  300க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 600க் கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.