districts

திருப்பூரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு நாளை முதல் 502 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருப்பூர், ஜன.8- திருப்பூர் மாநகரில் உள்ள மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து பொங்கல்  திருநாளை முன்னிட்டு, வெளியூர்களுக்கு செல்ல ஜனவரி 10ஆம் தேதி முதல் 520 சிறப்பு  பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த ஏற் பாடுகள் குறித்து போக்குவரத்து கழக அலுவ லர்கள் சனியன்று பேருந்து நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.   தொழில் நகரமான திருப்பூரில் பின்ன லாடை உற்பத்தி மற்றும் அதை சார்ந்த நிறு வனங்களில் பல்வேறு வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். வரும் 14 ஆம் தேதி தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு வெளி மாவட்டத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 6  நாட்கள் அரசு  தொடர் விடுமுறை விடப்பட்டுள் ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும்  வரும் 10ஆம் தேதி முதல் 14 ஆயிரத்து  104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகரில் மூன்று பேருந்து நிலை யங்கள் செயல்பட்டு வருகின்றன. கோயில் வழி பேருந்து நிலையத்தில் இருந்து தென்  மாவட்டங்களான மதுரை, திருச்செந்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. புதிய  பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, தஞ்சா வூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கோவை, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை உள் ளிட்ட மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக் கப்படுகின்றன. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு  வெளி மாவட்டங்களுக்கு இந்த ஆண்டு 502 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் பேருந்து நிலையத்திலிருந்து, ஈரோடு, சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு தினசரி இயக்கப்படும் 209 நடைகளுடன், கூடுதலாக 112 நடை பேருந்துகள் இயக்கப்படும். கோவில்வழி பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, செங் கோட்டை, நாகர்கோவில், திருச்செந்தூர் ஆகிய ஊர்களுக்கு தினசரி இயக்கப்படும் 231  நடைகளுடன் கூடுதலாக 223 நடை இயக்கப்ப டும். புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு தினசரி இயக்கப்படும் 137  நடைகளுடன், கூடுதலாக 167 நடை பேருந்து கள் இயக்கப்படும். இதில், தென் மாவட்டங்க ளான மதுரை திருச்செந்தூர் தூத்துக்குடி நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிக பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட உள்ள நிலையில் சனியன்று 11 ஆம் தேதி  இரவு முதல் அதிக அளவு தொழிலாளர்கள் வெளியூர் செல்ல வாய்ப்புள்ளது. மீண்டும் சொந்த ஊர்களில் இருந்து திருப்பூர் திரும்பி  வர ஏதுவாக தேவையான சிறப்பு பேருந்துக ளும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில் பேருந்து நிலையங்களில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற் கொள்வது குறித்து போக்குவரத்து கழக அலு வலர்கள் மற்றும் போலீசார் புதனன்று ஆய்வு  மேற்கொண்டனர்.