சாலை விபத்துகளில் 473 பேர் உயிரிழப்பு
சேலம், ஆக.31- சேலம் மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் ஏற் பட்ட 1,399 சாலை விபத்துகளில் சிக்கி 473 பேர் உயிரி ழந்துள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். நாடு முழுவதும் வாகனங்களின் எண்ணிக்கை அதிக ரிப்பது போன்று சாலை விபத்துகளும் அதிகரித்து வரு கின்றன. சாலை விபத்துகளை தடுக்க மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து காவல் துறை சார்பில், தொடர்ந்து பல் வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் மட்டும் ஆயி ரத்துக்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் நடந்துள் ளன. இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகை யில், பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி விபத்துகளை தவிர்க்க பல் வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன. குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளி டம் போக்குவரத்து விதிகள் குறித்து விரிவாக எடுத்து ரைக்கிறோம். சேலம் மாநகரில் கடந்த 7 மாதங்களில் 134 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 141 பேர் உயிரி ழந்துள்ளனர். 115 பேர் படுகாயமும், 555 பேர் லேசான காயமும் அடைந்துள்ளனர். இதேபோல, புறநகரில் 1,265 சாலை விபத்துகள் நடைபெற்று, 332 பேர் உயிரிழந் துள்ளனர். 1,203 பேர் காயமடைந்துள்ளனர். மொத்தம் 1,399 சாலை விபத்துகளில் 473 பேர் உயிரிழந்துள்ள னர், என்றனர்.
வாகனம் மோதி குதிரை படுகாயம்
நாமக்கல், ஆக.31- சாலையில் திரியும் குதிரைகளால் விபத்து அபா யம் ஏற்பட்டு வந்த நிலையில், குமாரபாளையத்தில் வாகனம் மோதி குதிரை படுகாயமடைந்தது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், சேலம் - கோவை புறவழிச்சாலை, ஆசிரியர் காலனி அருகே கடந்த வெள்ளியன்று அடையாளம் தெரியாத வாக னம் மோதி, சிறிய குதிரை ஒன்று அடிபட்டு கிடந்தது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கால்நடைத் துறையினருக்கு தகவல் கொடுத்ததன் பேரில், கால் நடை மருத்துவர் செந்தில்குமார் நேரில் வந்து முதலுதவி சிகிச்சை வழங்கினார். இது போல் நகரின் பல பகுதி களில் குதிரைகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இவைகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவது டன் விபத்து அபாயமும் ஏற்பட்டு வருகிறது. இந்த குதிரைகளின் உரிமையாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ரூ.1.30 கோடி மதிப்பிலான விதைகள் விற்பனை செய்யத் தடை
சேலம், ஆக.31- சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள விதை விற்பனை நிலையங்க ளில், ரூ.1.30 கோடி மதிப்பிலான விதை கள் விற்பனை செய்யத் தடை விதிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக சேலம் விதை ஆய்வு துணை இயக்குநர் (பொ) பெ. சுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், தரமான விதைகளை விவசாயிகள் பெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனி யார் விதை விற்பனை நிலையங்களில் சேலம் விதை ஆய்வு துணை இயக்கு நர், விதை ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய் வின் போது இருப்பு பதிவேடு, பகுப் பாய்வுச் சான்று, பதிவுச் சான்று, கொள் முதல் பட்டியல்கள், விற்பனைப் பட்டி யல்கள் ஆகியவை சரிபார்க்கப்படுகின் றன. மேலும், விதை மூட்டைகள் மரக் கட்டைகளின் மீது முறையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறதா? எனவும், உரம் மற்றும் பூச்சி மருத்துகளிலி ருந்து தனியாக இருப்பு வைக்கப்பட்டி ருக்கிறதா? எனவும் ஆய்வு செய்து வரு கின்றனர். அந்த வகையில், விதை விற் பனை நிலையங்களில் விற்கப்படும் விதைகளின் முளைப்புத்திறன், இனத் தூய்மை மற்றும் பிடிநஞ்சு போன்ற வற்றை உறுதி செய்யும் பொருட்டு விதை ஆய்வாளர்களால் 2,946 விதை மாதிரி கள் எடுத்து பகுப்பாய்வுக்காக சேலம், கோவை அரசு விதைப் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட் டன. இந்த பரிசோதனை முடிவுகளின் படி, 43 விதை மாதிரிகள் தரமற்றவை என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரூ.74 லட்சம் மதிப்புள்ள 14 மெட்ரிக் டன் விதைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நிறு வனங்களுக்கு திருப்பி அனுப்பி வைக் கப்பட்டன. விதிமீறல்கள் கண்டறியப் பட்ட விதை விற்பனை நிலையங்களில் ரூ.56 லட்சம் மதிப்புள்ள 12 மெட்ரிக் டன் விதைகளுக்கு தடை விதிக்கப்பட் டுள்ளது. தரமான விதைகளை விதை விற்பனை உரிமம் பெற்ற விதை விற் பனை நிலையங்களிலிருந்து மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். விவ சாயிகளுக்கு விற்பனை ரசீது வழங் கும் போது, அதில் விவசாயியின் பெயர், முகவரி, கைப்பேசி எண், பயிர் ரகம், குவியல் எண், காலாவதி தேதி, விற் பனை அளவு மற்றும் விவசாயியின் கையொப்பம் பெற்று வழங்க வேண் டும். விதை இருப்பு, விலை விவரங் களை பயிர், ரகம் வாரியாக விவசாயி களின் பார்வையில் தெரியுமாறு வைக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள் ளது.
கனமழையால் மின்தடை: பொதுமக்கள் அவதி
சேலம், ஆக.31- சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதி களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மின் தடை காரணமாக பொதுமக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகினர். சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்க ளாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஆத்தூர், நரசிங்கபுரம் சுற்றுவட்டாரப் பகுதிக ளில் வெள்ளியன்று இரவு 7 மணிக்கு சூறாவளி காற்றுடன் லேசான மழை பெய்தது. சூறைக் காற்றுடன் பெய்த மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஆத்தூர் உடையார்பாளையம் சாலையில் இரும்பு கம்பிகள், மின் கம்பி கள் மீது விழுந்து, அறுந்தன. இதனால் அப் பகுதியில் மின்தடை ஏற்பட்டது. 2 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் மின் விநியோ கம் செய்யப்பட்டது. இதேபோன்று, வாழப் பாடியில் பலத்த காற்றுடன் 1 மணி நேரத் திற்கும் மேலாக பெய்த கனமழையால், தாழ் வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சூறைக்காற்றுடன் பெய்த மழையால் ஆங் காங்கே மரங்கள் சாய்ந்தன. வாழப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே தம்மம் பட்டி நெடுஞ்சாலையில் மின் கம்பிகள் மீது பனை மரம் சாய்ந்தது. அந்த மரத்தை நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப் படுத்தினர். இதனால் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின் தடை ஏற்பட்டதால் மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகினர். அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மாசிநாயக்கன்பட்டியில் உள்ள தேசிய நெடுஞ் சாலையில் புளிய மரங்கள் மின் கம்பங்கள் மீது சாய்ந்தன. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. இதேபோல, மேட்டுப்பட்டி தாதனூர் அருகே தேவாங்கர் காலனியில், அரூர் நெடுஞ் சாலையிலும் புளிய மரங்கள் சாய்ந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் இரவு மின்தடை ஏற்பட்டதால் பொதுமக் கள் அவதிக்குள்ளாகினர். ஏற்காட்டில் வெள்ளியன்று இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை இரவு 9 மணி வரை கனமழையாக நீடித்தது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மழையை தொடர்ந்து ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. சேலம் மாநகரில் பெய்த மழை யால் இரு சக்கர வாகன ஓட்டிகள் வாக னங்களில் நனைந்தபடியே சாலைகளில் சென்றனர்.
அரசு தட்டச்சு தேர்வு துவங்கியது
நாமக்கல், ஆக.31- குமாரபாளையம், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில், தமிழக அரசு நடத்தும் தட்டச்சு தேர்வு நடைபெற்று வருகிறது. முந்தைய ஆண்டை விட 425க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் அதிகளவில் பங்கேற்றனர். ஞாயிறன்றும் (இன்றும்) தட்டச்சு தேர்வு நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக அரசு தொழில்நுட்ப கல்வி துறையின் சார்பாக, இளநிலை மற்றும் முதுநிலை தட்டச்சு தேர்வுகள் சனியன்று துவங்கியது. 2வது நாளாக ஞாயிறன் றும் (இன்றும்) நடைபெறுகிறது. இத்தேர்வில் 34க்கு மேற்பட்ட தட்டச்சு பயிற்சி நிறுவனங்களில் இருந்து, 345 மாணவர்க ளும், ஆயிரத்து 403 மாணவியர்களும் பங்கேற்றனர். இத்தேர் வில் முந்தைய ஆண்டை விட 425க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் அதிக அளவில் பங்கேற்றனர். அனைத்து துறையிலும் கணினி பயன்பாடு அதிகம் என்பதால், நாளுக்கு நாள் தட்டச்சு கற்க வரும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குமாரபாளையம், ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல் லூரியில், தமிழக அரசு தட்டச்சு தேர்வு துவங்கிய நிலையில், கல்லூரி முதல்வர் விஜயகுமார், தேர்வு முதன்மை கண்கா ணிப்பாளராக பொறுப்பேற்று தேர்வினை கண்காணித்தார்.
போதைப் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள்: திருப்பூரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருப்பூர், ஆக.31- திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு-2 மற்றும் அவினாசி ரோட்டரி சங்கம் இணைந்து பொல்லிகாளிபாளையம் அரசு மேல்நிலைப் பள் ளியில் போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ரோட்டரி சங்கத் தலைவர் தண்டபாணி, பொருளாளர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். இதில், மிகப்பெரிய பிரச்சினையாக உள்ள போதைப் பொருட் கள் குறித்தும், இப்பழக்கத்திற்கு அடிமையாவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட் டது. இதைத் தொடர்ந்து, மாணவச் செயலர்கள் மது கார்த்திக், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் பள்ளி மாண வர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு, போதைப்பொருட்கள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்கு வோம் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்விற்கான ஏற்பாட் டினை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.
செப்.3 கிளுவன்காட்டூரில் மின் தடை
உடுமலை, ஆக.31 – உடுமலை தாலுகா கிளுவன்காட்டூர் துணை மின் நிலை யத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், 3ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள்: கிளுவன்காட்டூர், எலைய முத்தூர், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சி மேடு, மானுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதி நகர், கோவிந் தாபுரம், அமராவதி செக் போஸ்ட், பெரும்பள்ளம், தும்பல பட்டி, குருவப்பநாய்க்கனூர், ஆலாம்பாளையம், சாமராயப் பட்டி, பெருமாள்புதூர், குமரலிங்கம், கொழுமம், ருத்திராபா ளையம், குப்பம்பாளையம், சாரதிபுரம் மற்றும் வீரசோழபுரம் ஆகிய பகுதியில் மின் விநியோகம் இருக்காது என செயற் பொறியாளர் மூர்த்தி தெரிவித்து உள்ளார்.
நெடுஞ்சாலை பகுதியில் மண் கடத்தல் தடுக்க முயன்ற தன்னார்வலரைத் தாக்க முயற்சி
திருப்பூர், ஆக.31 – திருப்பூர் மண்ணரை பகுதியில் நெடுஞ்சாலைத் துறைக் குச் சொந்தமான பகுதியில் இருந்து பட்டப்பகலில் பகிரங்க மாக லாரியில் மண் கடத்த முயன்றனர். இதை வேர்கள் தன் னார்வ அமைப்பின் மத்தியக்குழு உறுப்பினர் சந்தீப் தடுத்த தால் மண் கடத்த வந்தவர்கள் அவரைத் தாக்க முயன்ற னர். ஊத்துக்குளி சாலை மண்ணரை அருகே மூளிக் குளம் கால்வாய் சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நெடுஞ்சாலையை ஒட்டி கொட்டி வைக்கப்பட்டி ருந்த மண்ணை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்து வேர்கள் அமைப்பின் சந்தீப் மண்ணை எடுத்தவர்களி டம் கேள்வி கேட்டார். இதற்கு அரசு சார்பில் மண் எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. சந்தீப் நெடுஞ்சாலைத் துறை, வருவாய் வட்டாட்சியர் உள்ளிட்டவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, துறை சார்பில் மண் எடுக்கவில்லை என்று தெரிவித் தனர். விஏஓ அப்பகுதிக்கு வந்தார். வேர்கள் சந்தீப் உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்தோர் மண் கடத்த முயன்ற வர்களைத் தடுத்தனர். இதையடுத்து மண் கடத்தல் கும்பலைச் சேர்ந்த சிலர் தனி வாகனத்தில் வந்து சந்தீப்பை தாக்க முயன்றனர். அவரது செல் போனை பறிக்க முயன்றனர். இது குறித்து வடக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனைக்காக வைத்திருந்த 15 கிலோ கஞ்சா பறிமுதல்; 5 பேர் கைது
திருப்பூர், ஆக.31- திருப்பூரில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூர் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக் குட்பட்ட சாமுண்டிபுரத்தை அடுத்த லட்சுமி தியேட்டர் எதிரில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் கொங்குநகர் சரக போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் தலைமையில் 15 வேலம்பாளையம் இன்ஸ்பெக்டர் தாமோத ரன், சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், தலைமை காவலர்கள் மகாராஜா, சங்கரநாராயணன், முதல்நிலை காவலர்கள் ராஜ சேகரன், மணிவண்ணன் உள்ளிட்ட தனிப்படை போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு அதிக ளவில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அங்கிருந்த 5 பேரை பிடித்து விசா ரணை நடத்தினர். இதில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சகோர் மகானந்தா (வயது 26), பிங்கு பிபார் (20), சிபா மகா னந்தா (32), சுப்ராட் பெரோ (21), நித்ய நந்தா போரிடா (26) என்பது தெரிய வந்தது. உடனடியாக 5 பேரையும் கைது செய்த போலீசார், அங்கிருந்து 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தனிப்படை போலீசாரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி பாராட்டினார்.
மங்கலம் அரசுப் பள்ளி மேலாண்மைக் குழு தேர்வு
திருப்பூர், ஆக. 31 - திருப்பூர் அருகே மங்கலம் அரசு மேல் நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாகிகள் அண்மையில் தேர்வு செய்யப்பட் டுள்ளனர். இதில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவ ராக காமிலா பானு, துணைத் தலைவராக சங் கீதா, ஒருங்கிணைப்பாளராக பள்ளி தலைமை ஆசிரியர் ஞா.சீதாலட்சுமி, ஆசிரி யர் பிரதிநிதி ஸ்டெல்லா மார்க்ரெட், பெற் றோர் உறுப்பினராக ஆரிஃபா, பானுமதி, அலாவுதீன், குர்ஷத் நிஷா, நாகராஜன், சையது அலி பாத்திமா, ராபியத்துல் பர் ஷியா, நிஷாத் பர்வீன், சமீமா, உமர் கத்தாப், அபுதாஹிர், குர்ஷித் பேகம், உள்ளாட்சி பிரதி நிதியாக முகமது இத்தரீஸ், தாஹா நசீர், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் முபினா பர்வீன், சுய உதவிக் குழு உறுப்பினர் கவிதா, முன்னாள் மாணவர் பேரவை உறுப் பினராக காஜா ஷெரீப், ராபியா பஷிரி, கிருஷ் ணசாமி, பெற்றோர் அல்லாத முன்னாள் மாணவர் சி.வி.விநாயகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இடுவாய் அரசு உயர்நிலைப் பள்ளி மேலாண்மைக்குழு தேர்வு
திருப்பூர், ஆக. 31 – திருப்பூர் ஒன்றியம் இடுவாய் அரசு உயர் நிலைப் பள்ளியின் பள்ளி மேலாண்மை மறு கட்டமைப்பு உறுப்பினர் தேர்வு நடை பெற்றது. இடுவாய் உயர்நிலைப்பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் ரமேஷ் வழிகாட்டுதலு டன். தமிழ் ஆசிரியர் ரமேஷ் முன்னிலையில் இத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் பார்வை யாளராக பாரதிபுரம் பள்ளி தலைமையா சிரியர் காளிஸ்வரி முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது. இதில் பள்ளி மேலாண்மைக்குழுத் தலை வராக யமுனாதேவி, துணைத்தலைவராக பார்வதி, ஒருங்கிணைப்பாளராக பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் இரா.ரமேஷ், ஆசிரியர் பிரதிநிதியாக மா.மணிமேகலை, பெற்றோர் உறுப்பினராக அழகேசன், பிரியா, தேவி, பாப்பாத்தி, ஜெயலட்சுமி, மணிவாசகம், நடராஜ், வீரம்மாள், ரம்யா, தங்கவேல், முருகேசன், பொன்மணி, உள்ளாட்சி பிரதிநிதியாக இடுவாய் ஊராட்சிமன்றத் தலைவர் கே.கணேசன், வார்டு உறுப்பினர் ஈஸ்வரி, தன்னார்வலராக குமாரசாமி, சுயஉதவிக்குழு உறுப்பினராக கண்மணி, முன்னாள் மாணவ உறுப்பி னராக (பெற்றோர்கள்) பாலசுப்பிரமணியம், கருப்புசாமி, சிவமணி, முன்னாள் மாணவ உறுப்பினர் பிரியங்கா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் ஆய்வு
திருப்பூர், ஆக.31- திருப்பூர், ஊத்துக்குளி, அவிநாசி, உடுமலைபேட்டை வட்டத்திற்கு உட் பட்ட பல்வேறு பகுதிகளில் அரசு அலுவ லகங்கள், பள்ளிகள், நியாய விலை கடைகள் உள்ளிட்டவைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எம்.வள்ளலார் சனியன்று ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி மற்றும் அவிநாசி வட்டத்திற்குட்பட்ட அவிநாசி வட்டாட்சியர் அலுவலகம், அவிநாசி பேரூராட்சியில் உள்ள நியாயவிலைக்கடை, அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வத்தள பதி கிராமம், கருணாம்பதியில் உள்ள தந்தை பெரியார் சமத்துவபுரத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எம்.வள்ளலார் ஆய்வு மேற்கொண்டார். அதேபோல் உடுமலைப்பேட்டை வட்டம், குடிமங்கலம் உழவர் உற்பத் தியாளர் நிறுவனத்தில் விற்பனை செய் யப்படும் உணவு எண்ணெய், பருப்பு, உளுந்து, கொள்ளு, நாட்டு சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட் கள் விற்பனை செய்யப்படுவது குறித் தும், விற்பனை அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. உடும லைப்பேட்டை அரசு மாணவியர்கள் விடுதியில் அடிப்படை வசதிகள், குடிநீர் வசதி, தங்கும் அறைகள் மற்றும் உணவு சமைக்கும் சமையல் கூடம், வழங்கப் படும் உணவுகளின் தரம் மற்றும் சுகாதா ரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சி யர் தா.கிறிஸ்துராஜ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
பள்ளபாளையம் பள்ளி மேலாண்மைக்குழு தேர்வு
உடுமலை, ஆக. 31 – உடுமலை அருகே பள்ளபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழுவுக்கான பிரதிநிதிகள் தேர்வு செய்யும் கூட்டத்தில் தலை வராக சத்திய பிரியா, துணைத் தலைவர் முத்துலட்சுமி, ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் ஒருங்கிணைப்பாள ராக தலைமை ஆசிரியர் மகாலட்சுமி, உறுப்பினர்களாக, ஆசி ரியர் சீனிவாசராகவன், ஊராட்சி மன்றத் தலைவர் ராமச்சந்தி ரன், துணைத் தலைவர் கிருஷ்ணவேணி உள்ளிட்ட 24 நபர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.
அம்மாபாளையம் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு தேர்வு
திருப்பூர், ஆக. 31 – திருமுருகன்பூண்டி நகராட்சி அம்மாபா ளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகூட்ட மைப்பு உறுப்பினர் தேர்தல் பள்ளி வளாகத் தில் நடந்தது. பள்ளி மேலாண்மைக் குழு ஒருங்கிணைப் பாளர், தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன் தலைமை ஏற்றார். வட்டார எஸ்.எம்.சி கருத் தாளர் இந்துமதி மேற்பார்வையாளராக செயல்பட்டார். இதில், தலைவர் ஈஸ்வரி, துணைத் தலைவர் விஜயலட்சுமி, ஆசிரியர் பிரதிநிதியாக முத்துக்குமார், பெற்றோர் பிரதிநிதிகளாக சஃபியுல்லா, செல்வ புவனேஸ்வரி, சுதா, கார்த்திகா, முத்துமணி, ஜோதி, சரஸ்வதி, அமுதா, கீர்த்திகா, ஞானசெளந்தரி, ரமேஷ், புவனேஸ்வரி, உள்ளாட்சி பிரதிநிதிகளாக பூண்டி நகராட்சி 25ஆவது வார்டு கவுன்சிலர் பாரதி, 27ஆவது வார்டு கவுன்சிலர் வளர்மதி, இல் லம் தேடி கல்வியாளர் பிரதிநிதியாக காளியம் மாள், சுய உதவி குழு உறுப்பினர் பிரதிநிதி யாக தனலட்சுமி, முன்னாள் மாணவர் பிரதி நிதியாக சரவணன், பெற்றோர் அல்லாத முன் னாள் மாணவர் பிரதிநிதியாக ராமலிங்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்ற னர். பள்ளி ஆசிரியை கவிதா நன்றி கூறி னார்.
துவரம்பருப்பு, பாமாயில் ஒதுக்கீடு செய்யாமல் கூடுதல் நேரம் கடை திறக்கச் சொல்வதா?
சிஐடியு கண்டனம்
திருப்பூர், ஆக. 31 – துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய சிறப்பு பொதுவிநியோகத் திட்டப் பொருட்களை ஒவ்வொரு கடைக் கும் தேவையான அளவு ஒதுக்கீடு செய்யாமல் கூடுதல் நேரம் கடை யைத் திறந்து வைத்து பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும் என்று சொல்வது, கடை விற்பனையாளர்க ளுக்கும், மக்களுக்கும் இடையே மோதல் போக்கையே ஏற்படுத்தும் என்று சிஐடியு கண்டனம் தெரிவித் துள்ளது. இது குறித்து சிஐடியு கூட்டுறவுப் பணியாளர் சம்மேளன மாநில துணைப் பொதுச் செயலாளர் பி.கௌ தமன் சனியன்று விடுத்துள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் சிறப்பு பொது விநி யோக திட்டப் பொருட்களான துவரம் பருப்பு, பாமாயில் கடந்த மூன்று மாத காலமாக சரியாக நியாய விலைக் கடைகளுக்கு முழுவதுமாக அனுப்பி வைக்கப்படுவதில்லை. இதன் கார ணமாக பொதுமக்களுக்கும், நியாய விலைக் கடை பணியாளர்களுக் கும் மோதல் போக்கு உண்டாக்கப்ப டுகிறது. இதனால் விற்பனையா ளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக் கப்படுகிறார்கள். சரியான முறையில் பொருட்களை வழங்காமல் இந்த மாதப்பொருட்களை அடுத்த மாதம் வாங்கிக் கொள்ளலாம் என்று அறி விப்பை மட்டும் வெளியிட்டு விட்டு, பொருட்களை அனுப்பி வைப்ப தில்லை. மேலும் ஆகஸ்ட் 31ஆம் தேதி மாத கடைசி தினமாக இருந்தாலும், நியாயவிலைக் கடையில் மக்கள் பொருட்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கின்றனர். அதேச மயம் கடைகளுக்கு உரிய துவரம்ப ருப்பு, பாமாயில் ஒதுக்கீடு செய்யா மல் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை கடையில் பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என் றும் சுற்றறிக்கை அனுப்புகிறார் கள். இதனால் பொது மக்களுக்கும், கடை விற்பனையாளர்களுக்கும் தேவையற்ற மோதல் போக்கே உரு வாகும். இத்தகைய நடவடிக்கையை பொது விநியோகத் திட்ட நிர்வாகம் கைவிட வேண்டும். சரியான நேரத் தில் உரிய பொருட்களை நியாய விலைக் கடைகளுக்கு முறைப்ப டுத்தி அனுப்பி வைத்து விற்பனை யாளர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காமல், அந்தந்த மாதப் பொருட்களை அந்த மாதமே வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் மாவட்டம் முழுவதும் பி.ஓ.எஸ் இயந்திரத்தில் ஏற்படும் சர்வர் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என சிஐடியு கூட்டுறவுப் பணியாளர் சம் மேளன மாநில துணைப் பொதுச் செயலாளர் பி.கௌதமன் கூறியிருக் கிறார்.
வீட்டு நூலகத்திற்கு விருது பெற அறிவிப்பு
கோவை, ஆக.31- கோவை மாவட்டத்தில் வீடுகளில் சிறந்த முறையில் நூலகம் பராமரித்து வருபவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் வீடுதோறும் நூலகங்களை சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை கண்ட றிந்து சொந்த நூலகங்களுக்கு விருது வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந் தது. இவ்வாறு சொந்த நூலகங்களுக்கு விருது வழங்கும் பட்சத்தில், அனைத்து தரப்பு மக்களும் வீடுக ளில் நூலகங்கள் அமைக்க முன்வருவார்கள் என்ற அடிப்படையில் வீடுகளில் பராமரிக்கப்படும் சிறந்த நூல கங்களுக்கு ரூ.3,000 மதிப்பில் விருது, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட உள்ளது. எனவே கோவை மாவட்டத்தில் தங்கள் இல்லத்தில் நூலகம் அமைத்து பராமரித்து வரும் புத்தக ஆர்வலர்கள் தங்க ளது நூலகத்தில் உள்ள நூல்களின் எண்ணிக்கை, அரிய நூல்கள் ஏதாவது இருப்பின் அதன் விபரம், எந்த ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டு வருகிறது என்ற விவரம் மற்றும் தங்கள் பெயர், முகவரி, அலைபேசி எண் ணுடன் செப்டம்பர் 30ம் தேதிக்குள் மாவட்ட நூலக அலுவ லர், 1232, பெரியகடைவீதி, கோயம்புத்தூர் 641001” என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ விண்ணப்பிக் கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் ஒருவர் பலி
கோவை, ஆக.31- கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வாக னங்கள் மீது அடுத்தடுத்து மோதிய விபத்தில், 6 பேர் படுகாயமடைந்தனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே உயி ரிழந்தார். கோவையில் இருந்து பொள்ளாச்சி சாலை யில் சென்ற கார் ஒன்று, கிணத்துக்கடவு அடுத்த தாம ரைக் குளம் நான்கு வழி சாலையில் சென்ற போது, முன் னாள் சென்ற மூன்று, இருசக்கர வாகனங்கள் மீது அடுத்த டுத்து மோதியது. இதில், 7 பேர் பலத்த காயம் அடைந்த னர். இதில், ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் படுகாயம் அடைந்த வர்களை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கிணத்துக்கடவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைமைச்செயலருடன் கானொளி கலந்துரையாடல்
கோவை, ஆக.31- பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற முனைப் பில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களோடு, தலைமைச்செயலர் கலந்துரையாடும் நிகழ்வு கோவையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சி யர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி வித்துள்ளதாவது, கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்பு றுத்தல் தொடர்பான நிகழ்வுகளை தடுத்து நிறுத்தும் வகையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் காணொளி (VIDEO CONFERENCE ) வாயிலாக பங்கேற்று பேச வுள்ளார். எனவே, அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், கலை மற்றும் அறிவி யியல், பொறியியல், மேலாண்மை, சட்டம், மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் அனைத்து தனியார் கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் அனைத்து துறைத் தலைவர்களும் திங்க ளன்று, நிர்மலா மகளிர் கல்லூரியில் மதியம் 3 மணியளவில் தமிழக அரசு தலைமைச் செயலாளர் அவர்களால் நடத்தப்படும் காணொளிக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வரி வசூப்பாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை
கோவை, ஆக.31- சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கி வரி வசூப்பாளருக்கு ஊழல் தடுப்பு சட்டங்கள் சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பாளித்தது. கோவை மாவட்டம், சலீவன் வீதி காந்தி பார்க் பகுதி யைச் சேர்ந்தவர் முத்துக்குமரவேல். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டில் நிலம் வாங்கினார். சொத்து வரியில் பெயர் மாற்றம் செய்ய மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் 20 ஆவது வார்டில் வரி வசூப்பாளராகப் பணி புரிந்து வந்த வசந்தகுமாரியை அணுகினார். அப்போது பெயரை மாற்றுவதற்கு வசந்த குமாரி ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதையடுத்து முத்து குமரவேல், லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் அளித்து உள்ளார். புகாரின் பேரில் காவல் துறையினர் வசந்த குமாரியை கைது செய்த நிலையில், இந்த வழக்கு விசா ரணை கோவை ஊழல் தடுப்பு சட்டங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசா ரித்த நீதிபதி எஸ்.மோகனா ரம்யா, வரி வசூலிப்பாளர் வசந்த குமாரிக்கு ஓராண்டு சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதேபோன்று, கோவையை அடுத்த வேலாண்டி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அகஸ்டின் பால்ராஜ். இவ ரது தாய் கடந்த 2006 ஆம் ஆண்டு வீடு கட்டி உள்ளார். இந் நிலையில், முதல் மாடி வீட்டுக்கு மின் இணைப்பு கோரி வேலாண்டிபாளையம் மின்வாரிய அலுவலக வணிக ஆய்வா ளர் செந்தில்குமார் என்பவரை அணுகி உள்ளார். அப்போது அவர் மின் இணைப்பு தருவதற்கு ரூ.900 லஞ்சமாக கேட் டார். இதுகுறித்து அகஸ்டின் பால்ராஜ் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வணிக ஆய்வாளர் செந்தில்குமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலை யில், சனியன்று இந்த வழக்கு கோவை ஊழல் தடுப்பு சட்டங்க ளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.மோகனா ரம்யா, மின்வா ரிய வணிக ஆய்வாளர் செந்தில்குமாருக்கு ஓராண்டு சிறை யும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
புற்று நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு வாழ தகுதியற்ற மாவட்டம் ஆகிவிடுமோ? ஈரோடு
ஈரோடு, ஆக.31- புற்று நோயாளிகளின் எண் ணிக்கை அதிகரித்து வருவதால், ஈரோடு வாழ தகுதியற்ற மாவட்ட மாக மாறி விடுமோ என்ற அச்சம் எழுந் துள்ளது, என ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் வேதனை தெரி வித்தார். ஈரோட்டில் மாநகராட்சி மாமன்ற கூட் டம் வெள்ளியன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக, பிர காஷ் எம்.பி.,கலந்து கொண்டார். அப் போது அவர் பேசுகையில், இந்தியாவி லேயே ஈரோடு மாவட்டத்தில்தான், புற்று நோயாளிகள் எண்ணிக்கை அதிக ரித்து வருகிறது. என்னிடம் மருத்துவ பரிந்துரைக்காக வந்த, 60 பேரில், 40 பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்ட வர்கள். இதில் இரண்டு வயது குழந்தை யும் உள்ளது. ஈரோடு வாழ தகுதி யற்ற மாவட்டமாக மாறி விடுமோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது. பிளாஸ்டிக் கழிவு, ஒருமுறை பயன்படுத்தி வீசப்ப டும் கோப்பை உள்ளிட்டவைகளை, தடுக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகளில், அதிக அளவில் பிளாஸ் டிக் பயன்படுத்தப்படுகிறது. கடைகளி லும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகள வில் விற்பனை செய்யப்படுகிறது. இதை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியில் நிதி நெருக் கடியால், வளர்ச்சி திட்டங்கள் மேற் கொள்வதில் பிரச்சனை இருக்கிறது. ஓராண்டாக பல்வேறு திட்டப் பணி களில் சுணக்கம் இருக்கிறது. சாலைப் பணிகள் மட்டும் தேவையான அளவில் உள்ளது. மாநகராட்சியில் சுற்றுச்சூழ லுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஈரோடு ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்ட பிறகு, 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அத்தொகையை சிறப்பாக பயன்படுத்தவில்லை. எதிர் வரும் காலங்களிலாவது, மாநகராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளில் அதிக கவ னம் செலுத்த வேண்டும். அதிகாரிகள் ஒத்துழைத்தால் மட்டுமே, 2026 தேர்த லின் போது, கவுன்சிலர்கள் வார்டுக ளுக்குள் செல்ல முடியும் என்றார்.
சேலத்தில் இன்று ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் 10 ஆவது அகில இந்திய மாநாடு துவங்குகிறது!
சேலம், ஆக.31- ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸின் (மத்திய தொழிற்சங் கம்) 10 ஆவது அகில இந்திய மாநாடு சேலத்தில் ஞாயிறன்று (இன்று) துவங்குகிறது. புரட்சிக்கர சோசலிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க அமைப் பான, ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸின் 10 ஆவது அகில இந்திய மாநாடு சேலத்தில் ஞாயிறன்று (இன்று) துவங்குகி றது. இதுதொடர்பாக சங்கத்தின் அகில இந்திய பொதுச்செய லாளர் அசோக் கோஷ் சனியன்று சேலத்தில் செய்தியாளர் களிடம் பேசுகையில், தமிழக அரசு 12 மணி நேர பணி நேரத்தை அமல்படுத்திய போது தொழிற்சங்கங்கள் எதிர்த்து போரா டியதன் விளைவாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் திட்டங்களை மாநில அரசு செயல்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அவுட்சோர்சிங் முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, செவிலியர்கள் ஆசிரியர்கள் மின்சார ஊழியர் கள் பெருமளவில் அவுட்சோர்சிங் முறைக்கு தள்ளப்படுகி றார்கள். போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியர் களுக்கு பணப்பலன்களை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும். நாடாளுமன்றத்தில் தொழிலாளர் பிரச்சனைகள் சம்பந்தமாக பெரிய அளவில் எந்த விவாதங்களும் ஒன்றிய அரசு நடத்த முன் வரவில்லை. தொழிலாளர்களுக்கு இழைக் கப்படும் அநீதிகளுக்கு எதிராக பேச நாடாளுமன்ற உறுப்பி னர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது. தொழிலா ளர்கள் நலன் சார்ந்த பாதுகாப்பு மாநாடாக இது அமையும், என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, கொல்லம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்.கே.பிரேமசந்திரன் மற்றும் சங்கத்தின் அகில இந்திய நிர்வாகிகள் உடனிருந்த னர்.
தருமபுரி புத்தகத் திருவிழா தேதி அறிவிப்பு!
தருமபுரி, ஆக.31- தருமபுரி மாவட்ட நிர்வாகமும், தகடூர் புத்தகப் பேரவை யும் இணைந்து நடத்தும் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தகத் திருவிழா அக்.4 முதல் அக்.13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தருமபுரி மாவட்ட மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் முன்னேற் றமடைய, அவர்களிடையே வாசிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகிறது. அவ்வகையில் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள மக்களிடை யேயும் புத்தகத் திருவிழா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு, அங்கிருந்தும் மாணவர்கள் புத்தகத் திருவிழா வைக் காண்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. குறிப்பாக, வாசிப்பின் முக்கியத்துவம் பற்றியும், பெண்கல்வி பற்றியும், சமூகம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகமும், தகடூர் புத்தகப் பேரவையும் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா அக்.4 முதல் அக்.13 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.